களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

mohamed-kaleel.jpgஇலங்கை வந்துள்ள பாகிஸ்தான் சாரதி  மெஹர் மொஹமட் களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற களீலின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே உட்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வைத்து பயங்கரவாதிகள்; துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது மொஹமட் களீல் துணிச்சலுடன் வாகனத்தைச் செலுத்தி கிரிக்கெட் விரர்களைக் காப்பாற்றினார்.

குடும்பத்துடன் ஒரு வார காலத்துக்கு இங்கு தங்கியிருக்கும் அவர் கண்டி, நுவரெலியா உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரும் அவருக்கு விருந்துபசாரம் ஒன்றை நடத்தவுள்ளார். 

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    தேசபக்தியுள்ள ஒரு இராணுவ வீரனுக்கு வர்க்கஉணர்வுள்ள ஒரு போராளிக்கு கொடுக்கிற அந்தஸ்து இந்த சாரதிக்கும் வழங்கப்பட வேண்டும்.

    Reply