நமது நாட்டவர்களில் சிலர் உலக நாடுகளுக்கு பயணம் செய்து இலங்கை அரசு யுத்த குற்றங்களை மேற்கொண்டு வருகிறது என பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர். தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் என்னுடன் இருக்கும் வரை அரசுக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டும் வெற்றியளிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் சுமார் 4000 பேரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக்கொள்ளும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது, அங்கு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.