முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம்

dr-varatharajah.jpgமுல்லைத் தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • murugan
    murugan

    அப்படியே றெட்குறொஸிடம் அலுவல் பார்த்து அவர்களின் கப்பலில் ஏறிக் கொண்டு ஐரோப்பாவுக்கு வந்து கையை உயர்த்த வேண்டியதுதான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இவர் உண்மையான தகவல்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தியிருந்தால் பாராட்டலாம். ஆனால் புலிகளுக்காக பட்டினியால் மக்கள் இறந்தனர் என எந்தவித பிரேதப் பரிசோதனையும் நடத்தாமல் அறிக்கை விட்டு முதலில் மாட்டுப்பட்டவர். பின்பொரு முறை பிபிசியில் வன்னியில் இத்தனை பேர்கள் இறந்தனரென்றார். ஆனால் அவ்வுடல்களைத் தான் இன்னும் பார்க்கவில்லையென்றும் கூறி, அவர்கள் இன்ன காரணத்தினால்த் தான் இறந்தனரென்றும் பாராமலேயே கண்டு பிடித்துக் கூறினார். பின்பு அதனைப் போல் பல அறிக்கைகளை விடத் தொடங்கினார். பிரைச்சினையில்லை. புலிகளுக்கு புலி வேசம் கட்டாமலே செய்தித் தொடர்பாளராக முன்பு பணியாற்றியவர். இப்போ இளந்திரையனின் இடம் காலியாக உள்ளதால் புலிகள் அந்த இடத்தை உத்தியோக பூர்வமாக வழங்க முன்வரலாம்.

    Reply
  • illangayan
    illangayan

    உண்மையைச் சொன்னால் உறைக்குதாக்கும்

    Reply
  • ramesh
    ramesh

    அப்படியெனில் வெகுவிரைவில் இவரும் தீக்குளிப்பார?

    Reply
  • பல்லி
    பல்லி

    இன்று 11.15 மணிக்கு GTVயில் ஒருநிகழ்வில் பாரிஸில் நடக்கும் 4.4.2009 கவலையின ஊர்வலத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்குதென அறிவிப்பாளர் கேட்டார் அதுக்கு மறுமுனையில் பேசிகொண்டு இருந்த புலிகுட்டி சொல்லுகிறார் பாரிஸை பொறுத்த மட்டில் பிரன்ஸ் பொலிஸார் புலிகளின் ராணுவத்திடமே பாதுகாப்பை கொடுத்து விட்டனராம். அதுக்கு காரனம் இதுக்கு முன்பு நடந்த கூட்டங்களில் அவர்களது மிக திறைமையான பாதுகாப்பு, வீதியோர நிர்வாகம்தானாம். ஒரு சில பொலிஸார்தான் வருவார்களாம் மிகுதி அனைத்தும் ஈழத்து பொலிஸ்தானாம். இதை பற்றி பாரிஸ் தேசம் நண்பர்கள் தான் விளக்க வேண்டும்.
    இதுக்கு முன்பு நடந்த அனைத்து (பாரிஸ்) ஊற்வலத்திலும் புலிஎன மார் தட்டிய சிலர் வன்முறை செய்ததால் சிறை சென்றனராம். அதில் சிலர் பல மாதங்கள் ஆகியும் விடுதலை செய்யபடவில்லையென பாரிஸ் நண்பர் ஒருவர் சொல்லுகிறார். சரி இந்த அறிவிப்பாளர் அந்த புலிகுட்டியிடம் ஏன் இந்த கேள்வியை கேட்டார். சிலவேளை லண்டனில் தற்ப்போது நிற்க்கும் சர்வதேச நாட்டு தலைவர்கள் (ஓபாமா மகன்மோசின் உட்பட) இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள போகிறார்களா?? இந்த புலிகுட்டிகள் செய்யும் அடாவடிதனம் வன்முறைக்காகதேனே பல இடத்தில் பாதுகாப்பு கேக்கபடும். மறந்து விட்டேன் இங்கு டெட்டானிகப்பலுக்கு மொய்(பணம்) செலுத்தலாமாம். ஆனால் கண்டிப்பாக பணத்தைதான் எதிர்பாக்கினமாம்.
    சிலவேளை ஏர்பாட்டாளர்கள் யாருக்காவது சீட்டு பணம் அவசரமாக கொடுக்க வேண்டுமோ என்னவோ. லண்டனில் சேர்ந்த …….. …… கொண்டு செல்ல முடியாமல் சந்தையில் போட்டு வித்து காசாக்க முகவர்களை டாக்குத்தர் தேடும் போது பாரிஸிலுமா?? GTVயை கவனிக்கவும் ரிரிஎன் அறிவிப்பாளர் அனைவரும் முகம்காட்ட தொடங்கியாச்சு ஆக இது புலியின் தொல்லைகாட்ச்சியாக மாறிவிட்டது. அதில் இதைதான் சொல்லுவது கறையான் புற்றெடுக்க பாம்பு குடியிருக்குமாம். இது TV மட்டுமல்ல தள போராட்டத்தில் இருந்து கோவில் கடைகள் வரை பொருந்தும்.

    Reply
  • BC
    BC

    //Illangayan-உண்மையைச் சொன்னால் உறைக்குதாக்கும்//
    உண்மையையும் ஒருக்கா பாருங்கோ.
    http://thesamnet.co.uk/?p=9625

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இதைதான் சொல்லுவது கறையான் புற்றெடுக்க பாம்பு குடியிருக்குமாம். – பல்லி//

    பல்லி ஒரு சின்னத் திருத்தம். இங்கு கறையான் புற்றெடுக்க பெரிய கறையான் குடிபுகுந்துள்ளது. காரணம் முன்னைய கறையானும் சரி பின்னைய பெரிய கறையானும் சரி பொதுவான குணம் மக்களிடம் பணத்தை அரித்தெடுப்பதே.

    Reply