முல்லைத்தீவு சாலையில் நேற்று கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலித் தலைவர்களுள் ஒருவரான மாறன் உட்பட 26 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சாலை கடற்பிரதேசத்தில் நேற்று இரவு புலிகளின் 4 படகுகளை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இன்று காலை வரை தொடர்ந்த கடற்படையினரின் தாக்குதல்களால் புலிகளின் 4 படகுகளும் நிர்மூலமாக்கப்பட்டதாக ஊடக நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.