தந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை வட,கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகள்

thanthai-selva.jpgதந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. வவுனியா மணிக்கூட்டுச் சந்தியிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறவுள்ளன.

தந்தை செல்வா நூற்றாண்டு குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆலயங்களில் விஷேட பூஜைகளும் நடைபெற தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதேபோல, யாழ்ப்பாணத்திலும் தந்தை செல்வா உருவச்சிலை அருகில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Show More
Leave a Reply to sitharama iyer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பல்லி
    பல்லி

    ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா.

    Reply
  • மாயா
    மாயா

    இவர்தான் பிரச்சனையை உருவாக்கிட்டு ஆண்டவன்தான் காப்பாத்த வேணும் என்று சொல்லிட்டு போனவர். சிலர் நினைக்கிறாங்கள் போல தந்தை வருவார் என்று?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவிற்கு எங்கு சிலை உள்ளது?? ஏனக்குத் தெரிய அவருக்கு யாழ் நூலகம் அருகில் நினைவு ஸ்தூபி அல்லவா உண்டு.

    Reply
  • sitharama iyer
    sitharama iyer

    you are saying very wll :maya;? but am get confused. its a good idea to turn a blind eye………..

    Reply