கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாதென அமைச்சர் வி. முரளிதரன் கூறுவது தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்;
இலங்கையும் இந்தியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஊடாகவே தமிழ் மக்களுக்காக இம்மாகாணசபை உருவாக்கப்பட்டது. விரும்பியோ, விரும்பாமலோ நிர்ப்பந்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பிரிந்து கிழக்கு மாகாணசபை உருவாகியுள்ளது. மாகாண சபைக்கு அதிகாரம் பெறுவதற்காக சகல தமிழ் கட்சிகளும் சகல தமிழ் மக்களும் பிரதிநிதிகளும் குறிப்பாக அமைச்சர் முரளிதரனும் அதிகார பரவலாக்கலுக்காக அயராது உழைக்கவேண்டும்.
நெருக்கடிமிக்க இந்தக்காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து கூட்டுச் சேர்ந்து அதிகார பரவலுக்கான தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அயராது உழைக்கவேண்டும்.
அதிகாரப் பரவலாக்கலுக்குரிய செயற்பாடுகள் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களுக்காக போராடியவர் என்று தன்னை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமைச்சர் முரளிதரன், கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாதெனக்கூறுவது கிழக்கு மாகாணத்தில் 7,000 மக்களுக்கு மேல் படுகொலை செய்தமை 2,000 பெண்களுக்கு மேலாவர்களை விதவைகளாக்கியதற்கும் 3,000 த்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணர்களின் கல்வியை தொடராமல் இடை நிறுத்தியதிற்கும் ஜனநாயகம் அற்ற சூழலை உருவாக்கியமைக்கும் சான்று பகிர்கிறது.
30 வருடங்களுக்கு மேலாக ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்கள் அனைத்தையும் இழந்த இந்த நிலையில் அமைச்சர் முரளிதரனின் இக் கூற்று அனைத்து தமிழ் மக்களுக்கும் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். எனவே இப்படியான அறிக்கைகளை விடுவதைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரபரவலாக்கலை வென்றெடுப்பதற்கு ஐக்கியப்படுமாறு கேட்டுள்ளார்.
பல்லி
அம்மானின் அரசியல் வாழ்வில் இதுகள் சகஜம். அவராய் பார்த்து ஏதாவது கிழக்கு மக்களுக்கு செய்வார்.(அது கொலையாய்யும் இருக்கலாம்)அதுவரை அவர் சொல்லுவதுக்கு தலைஆட்டினால் கிழக்கில் அரசியல் செய்யலாம். இல்லையேல் களிமண்ணில் சட்டிகூட செய்ய முடியாது. அவரு யாரு அமைச்சர் இல்லையோ.
பார்த்திபன்
அம்மான் பிள்ளையானை பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு சொல்லும் கருத்துகள் யாவும் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் இவர் கிழக்கு மாகாண மக்களின் கோபங்களைத் தான் இலகுவாகச் சம்பாதிக்கின்றார். இதனால் எதிர்காலத்தில் அரசியலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய நிலையே அம்மானுக்கு ஏற்படும்.