அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் கலைஞர் முதல்வர்:ராமதாஸ்

jaya-ram.jpgபுதுச் சேரியில் இன்று டாக்டர் ராமதாஸ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திமுக கூட்டணியில் இருந்த நீங்கள் தற்போது அதிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சாரம் எப்படி இருக்கும்?

1967க்கு பிறகு மாநில கட்சிகள் தான் வளர்ந்து வருகின்றன. ஒரு கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள்  தொடர்ந்து அதே கூட்டணியில் இருப்பது இல்லை. மாறி மாறி தான் கூட்டணி ஏற்படும். மாநில பிரச்சனைகளை முன்வைத்து தான் பிரச்சாரம் செய்வோம்.

நீங்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு உங்களை முதல்வர் கருணாநிதி அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறாரே?

அரசியல் லாவணி பற்றி அவர் தான் அதிகமாக பேசுவார். அதே சமயம் அரசியலில் அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் முதல் அரசியல் தலைவரும் அவர்தான்.

மதுவிலக்கு பற்றி நீங்கள் கூறியிருப்பது புதுச்சேரிக்கும் பொருந்துமா?

புகையிலையை தேசிய அளவில் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டோம். அதேபோல மதுவிலக்கையும் தேசிய அளவில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

Show More
Leave a Reply to sitharama iyer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    ஜயா இந்த சுத்து மாத்தெல்லாம் பின்பு பார்ப்போம். முதலில் அன்பு மணி ஏன் என்னும் சோனியாவின் கட்டுபாட்டில் பம்பரம் விடுகிறார். இதைதான் தமிழில் தற்பாதுகாப்பு என ஒரு கலை இருப்பதாக சொல்வார்களோ??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    காடுவெட்டிக் குருவை பக்கத்தில் வைத்தக் கொண்டு ஐயா இப்படிச் சொல்லலாமா?? அப்புறம் காடுவெட்டிக் குரு தன்னைவிட எப்படி கலைஞரை நீங்கள் அநாகரிகமாக பேசுவதில் வல்லவர் என்று கூறுகின்றீர்கள் என்று தங்களில் கோபித்துக் கொள்ளப் போகின்றார். சரி சரி சட்டமன்றத் தேர்தல் வரும்போது மீண்டும் திமுக கூட்டணி தானே?? அதற்கு டயலாக் எல்லாம் தயாரிக்க நேரம் இருக்குத் தானே…..

    Reply
  • sitharama iyer
    sitharama iyer

    AS WE SEE IN NEWS REPORTS ALMOST EVERYDAY RAMATHAS AND OTHERS PASSING THE BUG,
    ARE THEY WORRY PEOPLE OF TAMILNADU, OF THINK THEMSELF.

    Reply