உத்தர பிரதேசம் மாநிலம் பீலிபட் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் வருண்காந்தி மீது தேர்தல் பிரசாரத்தின் போது மததுவேசத்தை வெளிப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு உள்ளது.
பீலிபட் நீதிமன்றத்தில் ஊர்வலமாக சென்று ஆஜரானார். அவரை திங்கட்கிழமை வரை காவலில வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனே அவருக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அதையும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.
இதைத் தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஊர்வலத்தில் பா.ஜ.க தொண்டர்களுக்கும், போலீஸ்சாருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பீலிபட் தொகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.