இலங்கை தமிழர் பிரச்சினை, ராஜீவ் கொலை என்பன தொடர்பில் இந்தியா நடவடிக்கை: ராகுல் காந்தி

rahul.jpgஇலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆகியன தொடர்பில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் இந்திய மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் குறித்து ஆலோசனைகள் நடத்துவதற்காக ராகுல் காந்தி புதுச்சேரி சென்றிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ பிரமுகர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் ராகுல் காந்தி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு பற்றியும், இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “இரண்டு விடயங்கள் குறித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தற்போதும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பல்லி
    பல்லி

    வருணுக்கு முஸ்லீம் மக்கள்.
    ராகுலுக்கு இலங்கை தமிழர்.
    இவர்கள் என்ன பொம்மைகளா??
    இந்திராவின் பேரன்கள் விளையாட..

    Reply
  • பகீ
    பகீ

    என்னெ பல்லி பேரன்களுடன் நிறுத்தி விட்டீர்கள். இந்த விளையாட்டு பாட்டனுடன் ஆரம்பித்து விட்டதே. தோட்டத்தொழிலாலர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டபோது நேருவிடம் (பாட்டன்) முறையிடப்பட்டது. அத்தோடு மலையக மக்களின் வாழ்க்கை, சிக்கல்கள் பற்றியும் முறையிட்டனர். அதற்கு பாட்டன் சொன்ன தீர்வு என்ன தெரியுமா? பேசிப்பார்த்துவிட்டேன் ஒன்றும் சரிவரவில்லை எனவே
    ”சொந்த மக்களை நன்றாக நடத்தாத சிலோனுக்கு நானும் போகமாட்டேன்”
    விளையாட்டு எப்படி? கருணாநிதியின் வார்த்தை, கவிதை விளையாட்டு மாதிரி இல்லையா?

    Reply
  • chanthirica
    chanthirica

    Well, india need a leader not a preacher,unfortunetly maran son missed the chance.maybe one day he will. india is part of G20 and still very power full country, we all know that. but its very,and very sad that indian tamils in srilanka were ignored and not been heard but improvement in estates is healthy.
    kalaijar karunanithi is a great leader of tamilnadu,we love him.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இந்த விளையாட்டு பாட்டனுடன் ஆரம்பித்து விட்டதே. தோட்டத்தொழிலாலர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டபோது நேருவிடம் (பாட்டன்) முறையிடப்பட்டது. அத்தோடு மலையக மக்களின் வாழ்க்கை சிக்கல்கள் பற்றியும் முறையிட்டனர். அதற்கு பாட்டன் சொன்ன தீர்வு என்ன தெரியுமா? பேசிப்பார்த்துவிட்டேன் ஒன்றும் சரிவரவில்லை எனவே ”சொந்த மக்களை நன்றாக நடத்தாத சிலோனுக்கு நானும் போகமாட்டேன்”//

    பகீயா தோட்டத் தொழிலாளிகள் பற்றிக் கவலைப்படுவது. கேட்கவே புல்லரிக்க வைக்குது. இன்றுவரை எமது பிரைச்சினைகளுக்கு அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோமே தவிர அவர்கள் பிரைச்சினைக்கு என்றுமே எம்மவர்கள் குரல் கொடுத்தது கிடையாது. ஆனால் அவர்களுக்கு பிரஜாயுரிமை கிடைக்காமல் செய்ததில் பேரினவாத சிங்களவருடன் எம்மவரும் கைகோர்த்துச் செயற்பட்டனர். இந்த இலட்சணத்தில் அடுத்தவரைப் பற்றி தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் குறை சொல்ல எமக்கு என்ன யோக்கியதை உண்டு. எல்லப் பாவ காரியங்களுக்கும் துணைபோய் விதைத்ததைத் தான் இன்று நாம் அறுவடை செய்கின்றோம்.

    Reply