கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த சனிக்கிழமை வரையில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து 50,000 சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து 1164 பொது மக்களோடு மொத்தம் 50 ஆயிரம் பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் வந்து சோந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் உணவும் வைத்திய சிகிச்சைகளும் வழங்கப்பட்ட பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
பார்த்திபன்
இவை என்னதான் கணக்குக் காட்டினாலும், புலிகளின் கட்டுப்பாட்டில் எப்பவும் மூன்றரை இலட்சம் மக்கள் இருந்து கொண்டேயிருப்பினம். எப்படியெண்டு என்னட்டை யாரும் கேட்டுப் போடாதையுங்கோ. எனக்கும் எப்படியெண்டு தெரியாது….