பிரிட்டிஷ் தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோ நட்சத்திரமான ஜேட் கூடி 27 வயதில் உயிரிழந்துள்ளார். அவரது வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே அவர் புற்றுநோயுடன் போராடிவந்ததையும் ஊடகங்கள் உற்று அவதானித்துவந்துள்ளன.
ஜேட் கூடி ஒரு தைரியமான பெண் என்றும் அவரை அனைவரும் அன்பாக நினைவுகூறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.
2002ஆம் ஆண்டு பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பிரபலம் அடைந்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட குலையும் நிலைக்கு சென்றிருந்தது.
பல்லி
கொடுமை. மரணத்தை பல மாதங்களாக எதிர்பார்ந்திருந்தவர். இதர்க்கெல்லாம் முடிவுதான் என்ன மிக பெரும் வசதிபடைத்தவர்கள் கூட சில மருத்துவத்தால் சில நோய்களை மாற்ற முடியாமல் தானே உள்ளனர். அழிவை எப்படி பெருக்குவது என கண்டறியும் கல்விமான்கள் காப்பாறுவதுக்கு (உயிரை) மருத்துவதேடல் குறைவாகதான் உள்ளதோ.
பார்த்திபன்
தைரியமான பெண்மணி நிறைய திறைமைகள் உடையவர். நோயைப் பற்றிச் சிந்திக்காது வாழ்ந்தும் காட்டியவர். ஆனால் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டதால் பலராலும் விமர்சிக்கப் பட்டவர். இதை இவர் தவிர்த்திருக்கலாம். இந்நிகழ்ச்சி இவரின் இறுதிக் காலத்தில் ஒரு கரும்புள்ளியாகி விட்டது.