கடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்தினால் ஆற்றப்பட்ட உரைக்குப் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக வினோநோகராதலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பாவம் வினோ நோகராதலிங்கம். உண்மைகளைச் சொல்வதால் ஒருவருக்கு எப்படியான பிரைச்சினைகளையும்,விமர்சனங்களையும் ஏற்படுத்தி அவரின் வாயை அடைக்கப் பார்க்கின்றார்கள். ஆனால் தனது கொள்ளகயில் வினோ நோகராதலிங்கம் தெளிவாகவே இருக்கின்றார். இன்று தீபம் தொலைக்காட்சியும் அவரைப் பேட்டி கண்டது. ஆனால் வினோ நோகராதலிங்கம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு வந்திருக்கும் மக்களைச் சந்தித்ததையும் அவர்கள் தாங்கள் யுத்த கெடுபிடிகளிலிருந்து தப்பி பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகக் கூறியதையும் மேலும் அரசாங்கம் தம்மை தொடர்ந்தும் முகாங்களில் முடக்கி வைக்காமல் தமது சொந்த இடங்களில் குடியேற்றி சுதந்திரமாக வாழ ஆவன செய்ய வேண்டுமெனவும் கூறியதையும் குறிப்பிட்டார். இதற்கு மேல் அவர் பேசினால் தேசியம் புலம்ப வேண்டி வருமென்பதால் அத்துடன் தீபம் நன்றி வணக்கம் சொல்லிவிட்டது. உண்மையில் ஊடகங்கள் இன்று களத்தில் நிற்கும் வினோ நோகராதலிங்கம் போன்றவர்களிடம் தான் கள நிலைமைகளை அறியத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் ஊடகங்கள் இன்று ஐரோப்பாவில் சுற்றுலாவிலிருந்து கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் எடுத்து விட்டுக் கொண்டிருக்கும் சில கூத்தமைப்பினரையே மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்கின்றார்கள். புலி ஆதரவு ஊடகங்களுக்கு வன்னிக் கள உண்மை நிலைமைகள் வெளிவருவதை விட புரளிகள் வெளிவருவதையே பெரும்பாலும் விரும்புகின்றார்கள். இதை வைத்துத் தானே அவர்களும் பிழைப்பு நடத்தலாமென நினைக்கின்றார்கள் போலும்.
பார்த்திபன்