ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வைபவம் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை பீ யில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
(www.sandanaya.lk) எனும் பெயரிலான இந்த இணையத்தளத்தை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திறிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.