திருமலை சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் வரதராஜா ஜனார்த்தனன் சயனைட் அருந்தி தற்கொலை

Regie_Varsaஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார். ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் இவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

இச்சிறுமியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார். இன்று சயனைட் உட்கொண்ட நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன 

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • Hg
    Hg

    2. suspected olso died! What is gonig on this Case? TMVP and goverment doing this .
    Police said a TMVP member who was suspected of being involved in the murder of a child in Trincomalee has committed suicide by consuming cyanide while in their custody.

    Reply
  • பகீ
    பகீ

    அட..கிழக்கின் விடிவெள்ளிகள் சயனைட் குப்பியை தூர வீசிவிட்டு, போராட்டம் வாழ்வதற்கே கோழையாக மரணிப்பதற்கல்ல என சொன்னார்களே. இப்போ கற்பழித்து சயனைற் உட்கொண்டு ‘வாழ்வதற்காக’ என தெரிகிறது!!!!!

    Reply
  • sugu
    sugu

    அன்று புலேந்திரனுக்கு சயனைற்றை காவிக்கொண்டு சென்று கொடுத்தது பாலசிங்கம் என்பது போல் இன்று ஜெனாவிற்கு சயனைற் கொடுத்தது எந்த பாலசிங்கம்?
    புலிகளிலிருந்து பிரிந்து வந்து ஜனநாயகத்தை விளாசித்தள்ளிய கிழக்கு விடிவெள்ளிகளிகளின் முகமூடிகள் அம்மணமாகின்றன.

    Reply
  • george
    george

    his own quilt guilty killed kimself. as we are tamils we have a culture that not tolerate this kind of behaviour.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சுகு உதைத் தானோ தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்கின்றவர்கள்.

    Reply
  • lio
    lio

    தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் என்ன மக்கள் விடுதலைப் புலிகள் என்றால் என்ன எல்லாமே புலிகள்தான். அந்த ஈவிரக்கமற்ற கொலை அதைத்தான் நிரூபிக்கிறது.

    வர்சா குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    Reply
  • palli
    palli

    ஒரு சிலர் இந்த மிட்டாயை மனம்முகந்து சாப்பிட்டு விட்டால் பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். இது இந்த மிருகத்துக்கு மட்டுமல்ல ஆடும் மிருகம்; ஆளும் மிருகங்களுக்கும் பொருந்தும்.

    Reply
  • palli
    palli

    இந்த குழந்தையின் பெயரை உச்செரிக்ககூட அருகதை அற்ற சமுதாயம்நாம்; ஒரு சிறுமியை காப்பாறாத சமுதாயம்தான் தமிழ் சமுதாயமோ? இந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு சக்தி கிடைக்க வேண்டும். அது இப்படியான எண்ணம் கொண்டவர்களையே அழிக்க வேண்டுமெனவும். அந்த குழந்தை சாந்தியடைய முதல் தடவையாக ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ஒரு சிறு செய்தி கருனா அறிவித்துள்ளார் பிள்ளையானும் பத்மினியும் இன்னும் ஒருவர் பெயர் மறந்து விட்டேன் மூவரும்தான் ரி வி எம் என. அப்படியாயின் இதை கருனா இருக்கும் அமைப்பை சார்ந்த விடயமாக சொல்லலாமா? அதுக்கு அந்த கட்சியின் தலைவர் என்ன பதில் சொல்வார். உயிரை பாதுகாத்த சிறுவனை பாராட்டிய அவர். இந்த சிறுமியின் உயிருக்கு என்ன விலை கொடுக்க போகிறார்??

    Reply
  • Kusumpan
    Kusumpan

    அருமையான கேள்வி பல்லி. என்ன உலகமையா இது. குழந்தைகள் மேல் வக்கிரகுணங்களா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இது முப்பத்தைந்து வருட தமிழீழ கலாச்சாரத்தின் ஒரு பகுதியே. ஏற்கனவே சிங்கள கிராமப்புறங்களுக்கும் வயல்களுக்கும் புகுந்து எட்டுவயது சிறுவர்களிலிருந்து என்பது வயது முதியோர் வரை வெட்டியும் நடத்தி முடித்து விட்டிருக்கிறார்கள். பள்ளிவாசலுக்குள் புகுந்து கைகுழந்தையும் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். வங்காலை மாட்டின் மூர்த்தியின் குடும்பமும் விசேஷச சித்திரைவதை மூலம் அரங்கேற்றி வைத்தார்கள்.

    வர்ஷாவின் கொலையில் விசேஷமான அம்சம் என்னவென்றால் சூத்திரதாரிகள் மாட்டிக்கொண்டது தான். இந்த கலாச்சாரத்திற்கு தாதா வேலுப்பிள்ளையே பொறுப்பு எடுக்க வேண்டும். அவர் விட்டுசென்றது உதிகளாகவோ உதிரியில்லாமலோ கிழக்கிலும் புரையோடிக் கிடக்கிறது என்பது தான் நிதர்சனம்.

    Reply