புலிகளின் கதை முடிந்து விட்டது சிறிய ஆயுதங்களால் மட்டுமே அவர்களால் தாக்க முடியும்: அமைச்சர் கருணா

karuna1.jpgநான் தேசிய அரசியலில் ஈடுபடுவதனையே விரும்புகிறேன். மாகாண சபை ஒன்றின் முதலமைச்சராவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே போன்று சிறியதொரு கட்சியை வழி நடத்தவும் விரும்பவில்லை. இவ்வாறு தெரிவிக்கிறார் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன். (கருணா அம்மா) ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது அமைச்சுப் பொறுப்பினை நான் திறம்படச் செயற்படுத்துவேன். எந்தப் பிரச்சினையையும் முகங்கொள்ளத் தயாராகவிருக்கிறேன். அதேபோன்று அதற்கான தீர்வினையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த போது எதற்கும் முகங்கொடுக்கக் கூடிய சக்தியை நான் பெற்றுக்கொண்டேன். நான் பிரிட்டனில் எட்டு மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தேன.; அப்போது பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். தற்போது நான் சிங்கள மொழியைக் கற்று வருகிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்களால் இனி ஒருபோதும் எழுந்திருக்க முடியாது. அவர்கள் முடிந்துவிட்டார்கள். சிறிய ஆயுதங்களைக் கொண்டு மட்டும்தான் அவர்களால் தாக்குதல்களை நடத்த முடியும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடொன்றைப் பெறலாமென்பது நடக்க முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • hg
    hg

    இதுவும் சொல்வீங்கள் இதுக்கு மேலும் சொல்வீங்கள்!

    Reply
  • Kusumpan
    Kusumpan

    அம்மான் நீர் வளர்த்த நெஞ்சிலேயே பாய்தவர் அல்வோ. இப்ப யார் நெஞ்சில் முதல்பாய்கிறது என்று இருக்கிறது. இராஜபக்சவா நீரா? நீர் பாயாது விட்டால் இரசாபக்ச பாய்வார். இருந்தாலும் வெட்கமில்லாமல் சொல்கிறீர் எதற்கும் முகம் கொடுக்கப்புலிகளில் இருந்துபோது கற்றுக்கொண்டேன் என்று. எட்டுமாதத்தில் இங்கிலிசு படித்துப்பட்டம் பெற்ற வித்துவான் வினாயகமூர்த்தி முரளீதரன். மந்திரிசபையில் இல்லாத மந்திரி இதுவும் ஒரு பிழைப்பு. அண்ணரிடம் இருந்து படித்துப்போட்டே ஆயுதங்களைப்பற்றி நீர் கதைக்கிறீர். குருவுக்குத் தெரியும் அம்மான் எப்படிப் போராடுறது என்று. நான் நிமிர்வோம் அப்போ பாரும். தேசியம் பற்றிக்கதைக்க தேசியம் பற்றி அறிவு உமக்கு என்ன உண்டு. ஏழைமையைப் போக்க இயக்கத்தில் சேர்த்து இன்று தேசியத்தையே விற்றுவிட்டு எதிரிடண் இருக்கிறீர். முதலில் தமிழ் தேசியம் என்பதை படியும் பின்பு பார்க்கலாம் மற்றவர்களின் தேசியத்தை

    Reply
  • palli
    palli

    இது உங்களை நீங்கள் திருப்திபடுத்த கற்பனை செய்யுமாபோல் உள்ளது. அப்படி நினைத்து கவலை இன்றி இருந்து செய்த பாவங்களுக்கு பலனை அனுபவிக்க வேண்டாம்.

    Reply
  • george
    george

    there are so many comedians karuna amman one of them. but he may be a threat for who return srilanka because he knew what tamil refuge like in london.he got beaten when he was in the prison.i dont think he forgave that.

    but this man is useless. to survive he making a noise, i dont take a notice of him,…….. he was learn english may be better then us we stil strugle to speak english dont we? He just learn in eight months that great isnt. another thing he learning the singala thats another great news. ……. was a commandeer so thik of others. this guy who responsible for innocent muslims. they been murderd just being a muslim. so just ignore him,thats all

    Reply
  • பகீ
    பகீ

    உண்மைதான் உங்களுக்கு தெரியாததே அம்மான். பி.பி.சி க்கு ஆயுதங்கள் எல்லாம் காட்டி ஒரேஞ்ச் ஜூஸ் குடிச்சு படம் எடுத்த்து…6000 பேர் என்னோட இருக்கினம்…..பிரபாகரன் சண்டைக்கு போறேல்ல நான் தான் எல்லாம் செய்யிறனான்………………….. .தராக்கிதான் எல்லாத்துக்கும் காரனம்….லண்டன் பயணம்….பிள்ளையான் பிரச்சினை…மீண்டும் கிழக்கு மீளல்…கட்சி பதிவு…பெயர்மாற்றம்…மீண்டும் பிள்ளையான் சிக்கல்…ஸ்ரீலங்காவின் பாரம்பரியம் மிக்க கட்சியில் நாட்டுமக்களும் கிழக்கு மக்களுக்கும் சேவையாற்ற இணைவு…ஆயுத கையளிப்பு (சிலர் களைவு என்கிறார்கள்) ….எண்டு இப்ப அமைச்சு இல்லாத அமைச்சரில் வந்து நிக்கிறியள்.. உங்களுக்கு தெரியாததா!!!!
    ராஜா என்பார்..மந்திரி என்பார் ….ராஜ்ஜியம் இல்லை ஆழ!

    Reply