கிழக்கு மாகாணத்தில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கபப்டும் ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச்திலுள்ள பொறுகாமத்தில் 60 எம் .எம். மோட்டார் – 3 ,சி 4 வெடிப் பொருள் – 250 கிராம் ,விடுதலைப் புலிகளின் கொடி – 01 ஆகியவற்றுடன் துப்பாக்கி ரவைகளும் மகசின்களும் வெடிக்க வைக்கும் கருவிகளும் அடங்கலாக வேறு சில பொருட்களும் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ஒல்லிக்குளத்திலும் கிளேமோர் குண்டு – 01, விடுதலைப் புலிகளின் கொடி – 01 ,வெடிக்க வைக்கும் கருவி – 01 ஆகியன இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
இதே வேளை அம்பாறை மாவட்டம் பாணம பிரதேசத்திலுள் பக்கிமிட்டியாவவிலும் ஒரு தொகுதி ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் நேற்று முன் தினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜி ரக துப்பாக்கி – 01 ,எல்.எம்.ஜி;. ரக துப்பாக்கி – 01 ,ரி 56 ரக துப்பாக்கி – 01 ,கைக்குண்டு – 01 ,மிதிவெடிகள் – 05 உட்பட துப்பாக்கி ரவைகள் ,மற்றும் மகசீன்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது