இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா, பிரித்தானியா உட்பட எந்தவொரு சர்வதேச நாடோ, அமைப்புக்களோ இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இலங்கையின் இராணுவ வீரர்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்தும் சுமத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பீடத்திற்கு எதிராக, கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இலங்கையின் தேசப்பற்றுள்ள மக்கள் முற்றுகையிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை இல்லை எனவும் அவர் கூறினார்.
தேசிய சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள