நாளை- மார்ச் 29- நான்காவது குறும்படக் காட்சி – ‘லண்டன் மாப்பிள்ளை’

Vili Clipதேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு மார்ச் 29 அன்று சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி, ஆய்சா ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. (திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்) திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும். காட்சி விபரங்கள் கீழே.

பெப்ரவரி 21 அன்று அதே இடத்தில் சறேயில் இடம்பெற்ற திரையிடலில் நூறு பேர்வரை கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலிலும் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர். இவ்வாறான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய கருத்துக்களில் வெளிப்பட்டு இருந்தது.

வழமைக்கு மாறாக அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் புதிய பார்வையாளர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் மட்டும் திரையிடப்பட்டு வந்த குறும்படக் காட்சிகள் எதிர்வரும் காலங்களில் லண்டனின் ஏனைய பகுதிகளிலும் திரையிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

காட்சியைத் தொடர்ந்து இராப்போசனம் வழங்க உள்ளதால் 12 வயதிற்க்கு உட்பட்ட சிறுவர் தவிர்த்து ஏனையோரிடம் £3 கட்டணம் அறவிடப்படும்.
 
தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

London_Maappillaiமேலும் ஈழத்து சினிமா படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆவணக்காப்பாளரும் நூலகவியலாளருமான என் செல்வராஜா ஈடுபட்டு உள்ளார். உங்கள் படைப்புகளையும் ஆவணப்படுத்திக் கொள்ள தேசம்நெற்றுடன் தொடர்புகொள்ளவும்.

புலம்பெயர் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஆர் புதியவன் மாற்று கனவுகள் நிஜமானால் மண் ஆகியவற்றைத் தொடர்ந்து லண்டன் மாப்பிளை என்ற மற்றுமொரு படத்தை இயக்குகிறார். லண்டனில் படமாக்கப்படும் இம் முழுநீளப்படம் ஆர் புதியவனின் நகைச்சுவை இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயக்கபட்டு வருகிறது. ஜீட் ரட்ணசிங்கத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த நகைச்சுவைச் சினிமாவுக்கான ஒளிப்பதிவை ரியாஸ்கானும் படத்தொகுப்பை சுரேஸ் ஆர்ஸ்ம் இசையை பாலாஜியும் மேற்கொண்டு உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது திரைக்கு வழவுள்ளது.

Vili Clipகாட்சி விபரங்கள்:

5.30 pm on 29th March 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB

Show More
Leave a Reply to vithusha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • vithusha
    vithusha

    அங்கை சனம் சாகுது. இங்கை உங்களுக்கு படமும் கூத்தும் தேவைப் படுகிறதோ?

    Reply
  • uma
    uma

    படம்தான் காட்டுவதாகதான் போட்டிருக்கே! கூத்து எங்கே?

    லண்டனில் எனக்கு தெரிய கல்யாணம் கச்சேரி சினிமா கோவில் பூசை அபிஷேகங்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் சாமத்தியச் சடங்கு கூட நடக்குது. ஆனால் இதில் மட்டும் குறைகாணக் காரணம் வேறெதுவோ?

    Reply
  • palli
    palli

    விதுசா இவ்வளவு கோபம் ஏன்?? அதுசரி 16.03.2009 அன்று பெல்ஜியத்திலும் ஜெனிவாவிலும் திருவிளா கொண்டாடிய போது உங்களுக்கு சனம் சாவது தெரியவில்லையா? புலியை ஜரோப்பாதடை செய்துள்ளது. அதுகூட தெரியாமல் அதன் (ஜரோப்பிய) தலமை காரியாலயத்துக்கு முன்பு பிரபாகரனின் கட்டவுட் சினிமாநடிகர் போல் வைக்கபட்டிருந்தது. பல்லியும் பூராடம் பாக்க போனேன். ஜயோ சுற்றுல்லாவில் கூட இப்படி ஒரு மகிழ்ச்சி வராது. ஆக புலிக்கு வால் பிடிப்பதாய் சொல்லி தாம் இங்கு ஆடம்பரம் செய்கின்றனர். அதை விட கொடுமை இந்த இழையோர் எழுச்சி தொடங்கிய பின் பல பெற்றோர் தலையில் கைவைத்துள்ளனர். காரனம் இழையோருக்கு தமது கிட்னியை (லவ்வப்பா) கொடுத்து வாங்க நல்ல ஒரு சந்தையாக இது விளங்குகிறது என்பதை பல்லி போன பஸ்சில் கண்டேன். டிக்கேற்றில்லாமல் காதலுக்கு மரியாதை பார்த்தேன். அதை விடவும் ஒரு வேடிக்கை பெல்சியத்தில் நடந்தது. பலர் புலிகொடியை தலைகீழாக தடியில் போட்டு வைத்திருந்தனர். ஆக பக்கத்து வீட்டுக்கு பாத்திரம் தேப்பதுக்கு முன்னால் உங்க வீட்டு பல்லுகளை தேய்க்கவும் .

    Reply
  • santhanam
    santhanam

    /கட்டவுட் சினிமாநடிகர் போல் /எங்களிற்கு தேவை இதைவைத்து புலம் பெயர்ந்ததேசத்தில் பெரிய மனிதர்களாக உலவரவேண்டும் ஏன் புலிக்கு பின்னால் திரிந்தால் எந்தபதவியும் கிடைககும் நாட்டு பற்றாளர் ஊர்வலத்திற் போன அனைவருக்கும் பல்லிக்கும் தான். அதற்குதான் தங்களுடைய வாரிசுகளையும் இழுத்துகொண்டு போய் இளசுகளிற்றை கொடுத்து விட்டு வேடிக்கைபார்க்கினம் எனி கோல்பேஷ் போனால் பொலிஷ் தொல்லை ஊர்வலம் போனால் என்னும் இலகுவாக எல்லாம் முடிக்கலாம் பல்லி.

    Reply
  • palli
    palli

    ஜயோ சந்தானம் பல்லி அந்த கூட்டமல்ல பல்லி தானே சொல்லி விட்டதே தான் பூராடம் பார்க்க போனதாக (செய்தி சேகரிக்க) பல்லியின் எழுத்து அனைத்தும் சேகரிப்பே. சரி விடயத்துக்கு வருவோம். 50000பேர் என மேடையில் பேசிய கனடிய பெண்மணி சொன்னார். எப்படி கணக்கெடுத்தார் என்பது புலிக்கே வெளிச்சம். இதைவிட பல நாளாக யுத்தம் காரனமாக சாப்பாடின்றி ஜரோப்பாவில் இருந்து வந்த அனைவர்க்கும் நிகழ்ச்சி நிர்வாகிகள் (அப்படிதான் சொன்னார்கள்) சான்விச் கோலா தண்ணீர் வேறுவிதமான பல சிற்றுண்டிகள் இலவசமாக கொடுத்தனர். பட்டிணி கிடக்கும் வன்னி மக்களை சொல்லி மிக ரசித்து சாப்பிட்டதை பல கமராக்கள் 32 பக்கமும் நின்று படம் எடுக்க தவறவில்லை.

    Reply
  • murugan
    murugan

    அங்கை சனம் சாகுது. இங்கை உங்களுக்கு படமும் கூத்தும் தேவைப் படுகிறதோ”

    விதுசா இது லண்டன். மற்றவர்களின் உரிமைகளை தடை போட முடியாது. சனம் சாகுது என கவலைப்படுகிறீர்களா தலைக்கு ஆபத்து என பதறுகிறீர்களா? சனம் சாகுது என்ற கவலை உண்மையானால் அதுதான் ஆயுதங்களை போட சொல்லுகிறான்களே அதை செய்யச் சொல்லி ஊர்வலங்களில் கத்துங்கள். மானம் தமிழ் வீரம் என வெற்று முழக்கத்தை போட்டு சனத்தை அழியாமல் தங்களை அவர்கள் காப்பாற்ற வழிவிடுங்கள். நீங்கள் இவ்வளவு நாளும் காப்பாற்றிய லடசணம் போதும்!

    Reply
  • vithusha
    vithusha

    மக்களுக்கு பெரும் துயரம் நிகழும்போது இப்படியான நிகழ்வுகள் வேண்டாம் என்று வன்னியிலிருந்து தலைவர் சொன்னதால் இன உணர்வுள்ளவர்கள் நிறைய நிகழ்ச்சிகளை செய்வதை நிறுத்தியுள்ளார்கள். நீங்கள் தலைவருக்காக நிறுத்த வேண்டாம். அவதியும் மக்களுக்காக நிறுத்தலாமே. இந்த நேரத்தில் ………………….. படங்கள் தேவையா?

    Reply
  • murugan
    murugan

    மக்களுக்கு பெரும் துயரம் நிகழும்போது இப்படியான நிகழ்வுகள் வேண்டாம் என்று வன்னியிலிருந்து தலைவர் சொன்னதால் ”//
    என்ன விதுசா தலைவர் உங்களுக்கு ரெலிபோன் பண்ணி சொன்னவரோ?

    விதுசா ஆக நீங்கள் தலைவருக்காகத் தான் கவலைப்படுகிறீர்கள் என்பது புரிகிறது. மக்கள் இன்றுதானா அவதிப்படுகிறார்கள். நீங்கள் விரட்டியடித்த முஸ்லிம் மக்களின் அவதிகள் பற்றி எப்பவாவது கவலைப்பட்டதுண்டா? உங்கள் தலைவரால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் துயரம் வெருகலாறில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் கதறல் உங்களை பாதிக்காதா? உழைத்து பாடுபட்ட ஏழை பாழைகளின் வியர்வையை ஒரு துளி விடாமல் வரி என்றும் கப்பம் என்றும் தங்கம் என்றும மண் ,மீட்பு, தேசியம் ,விடுதலை என என்னென்னமோ சொல்லி உறிஞ்சி இன்றைக்கு எதிரிக்கு தாரைவார்த்துள்ளது பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?

    அத்தோடு விதுசா இந்த படக்காடசி சமூகஅவலங்களை தொடடுச் செல்லும் முயற்சிகளே என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தென்னிந்திய சினிமா நட்சந்திரங்களை கொண்டு வந்தா கேளிக்கை வினோதங்களில் இவர்கள் கும்மாளமிடுகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விதுசாவிற்கு; வன்னியிலை மக்கள் இருக்க இடமில்லாமல் பரிதவிக்க, ஆடம்பர பங்களாவும், நீச்சல் தடாக வாழ்க்கையும் என வாழ்ந்தவரோ “மக்களுக்கு பெரும் துயரம் நிகழும்போது இப்படியான நிகழ்வுகள் வேண்டாம்” என்று சொன்னவர். கேட்கவே கண்ணைக் கட்டுது.

    Reply
  • gobi
    gobi

    விதுசா ஆமிக்காரன் இந்த அடிஅடிக்கிறான். அங்கையிருக்கிற சனங்கள் என்ன பாடுபடுகுது என்று ஒரு அறிக்கைவிடாத தலைவருக்கு இந்த பத்து நிமிஷ படம் உறுத்தப் போவதில்லை. சும்மா பம்பலுக்கு ஏதும் எழுதிக்கொண்டிருக்கிறதை விட்டுட்டு வாங்கோ குறும்படத்துக்கு. சாப்பாடு freeயாய் போடுகிறாங்களாம்.

    Reply
  • மாயா
    மாயா

    லண்டனில இலவசமா படமும் காட்டி சாப்பாடும் இலவசமா போடுறாங்களோ? நம் கலைஞர்கள் றோட்டில நின்று படங்காட்டினால் மொழி தெரியாத மனிசர்கள் யாராவது பிச்சை போல ஏதாவது போட்டுட்டாவது போவாங்கள். இனி எப்படி எங்கட கலைஞர்கள் உருப்படுறது?

    புலிகள் யுவன் சங்கர் ராஜாவை கனடாவுக்கு கூப்பிடுறாங்களாம். அதுவும் பிரீயென்டால் நானும் வருவேன். சாப்பாடும்தான்?

    Reply