சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள கடனை வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணயநிதியத்திடம் கோரியுள்ள கடனை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுந்திரம் நாட்டில் பாதுகாக்கப்படல் ரூபாவின் பெறுமதியைப் பேணுதல் சகல நிவாரணங்களையும் விலக்கிக்கொள்ளல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது