இலங்கை அரசையும், புலிகளையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது. – த ஹிந்து பத்திரிகை செய்தி

hindu_newspaper.jpg இலங்கையில் ஜனநாயக முறைப்படி சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தையும் பயங்கரவாத அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ. யினரையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது என இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அந்நாட்டின் முப்படையினரும் பல்வேறு உணர்ச்சித் தூண்டல்களுக்கு இடம்கொடுக்காது பொறுப்புடனும் அமைதியாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்.ரீ.ரீ.ஈ. பிடியில் மனிதக் கேடயங்களாக சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ள இலங்கை அரசுக்கு இது ஒரு சோதணை மிகுந்த காலப் பகுதியாகும்.

எல்.ரீ.ரீ.ஈ.  யினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் இராணுவ நடவடிக்கைள் சற்று தாமதமாகியுள்ளன. மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரிய ஒரு முயற்சியாக இதனைக் கருத முடியும் என த ஹிந்து  பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • ramakirishna
    ramakirishna

    700 புலிகள் பின்னர் 400 புலிகள் அதன்பின்னர்…..நடந்த சண்டைகளில் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கையை கழித்தால் புலிகளே வன்னியில் இருக்கமாட்டார்கள். அதுபோக இந்த எண்ணிக்கையிலான புலிகளை கொல்லத்தான் கடந்த 3நாளில் மட்டும் 150க்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கினம்…நூற்றுக்கணக்கில் காயப்பட்டிருக்கினம்… கோத்தபாய கணக்கிலும் வீக் … வெளிநாட்டு பத்தியாளருடன் கதைப்பதிலும் வீக்…. அவுஸ்ரேலிய நிருபர் மிக தெளிவாக கோத்தபாயவின் அங்க அசைவுகளை படம்பிடித்து காட்டிவிட்டார். கதைப்பது காமெடி செய்வது வில்லத்தனம்

    இதே காமடித்தனத்தை தான் இந்து ராம் இந்தியர்களுக்கு இந்து பத்திரிகை மூலம் சொல்கிறார். இதே சம பங்காளி கதையை இந்து ராம் ஏன் 2002 இல் சொல்லவில்லை. சம பங்காளியாக கருதமுடியாவிட்டால் ஏன் 2002 இல் புலி துரத்தியடித்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்குள்ளே நுழைய முற்படும் போது உங்க இந்திய இராணுவம் யாழப்பாணத்திலிருந்த சிங்கள இராணுவத்தை காப்பாற்ற கப்பல் அனுப்ப வெளிக்கிட்டதும், இராசதந்திர ரீதியாக புலிகளை இந்தியா வெளிநாட்டுத்தரப்பின் மூலம் அணுகும் போது சம பங்காளிகளை இனங்காண முடியாதபடி கோடம்பாக்க வட்டாரத்தில் ராம் மதி மயக்கத்தில் இருந்தாரோ? இதே மாதிரி முஸ்லீம் தரப்பில் சம பங்காளியாக பேச்சுவார்த்தையில் இடம் தரக்கோரிய முஸ்லீம் தரப்பு இப்போது சிங்களவரிடம் கேட்டுப்பார்க்கட்டும் சமபங்காளி தரப்பை? யாரோ இரத்தம் சிந்திபலத்தினால் பெற்ற சமபங்காளி தரப்பினை சும்மாயிருந்து சமபங்காளி தரச்சொல்லி கேட்பதும், இதையே புலி தோற்கும் போது சமபங்காளியில்லை என இந்து ராம் சொல்வதும் வில்லர்களின் காமெடி

    Reply
  • george
    george

    mr ramakrishnan whether you agree or not HINDU is the leading english newspaper in india and. its has wider readership. I think many of us seem to be didnt like the criticism and not prepare for failure. We think in a negative way or living in the past this and that story.

    when we all come to present moment and think of future.

    can we against the world?.winning the herts and mine not easy as it seems.

    I dont think you criticism is wright its more like blame.please dont blame.

    Reply
  • IPKF
    IPKF

    இந்து பத்திரிகையின் இந்த தலையங்கம் 1987 ல் இந்திய அமைதிப் படை, இலங்கை அரசாங்கத்தின் பக்கம் எடுத்த “கொள்கை முடிவை” மீண்டும் நியாயப் படுத்துவதாக உள்ளது. இந்து பத்திரிக்கை, இந்தியாவின் “அப்பர் மிடில் கிளாஸ்” மக்களால், காப்பியுடன் தினமும் மூளைக்குள் விழுங்கப்படும் பத்திரிக்கையாகும். தற்பொழுது இலங்கைத் தமிழருக்கு தமிழகத்தில் வழங்கப்படும் “லோயர், லோயர் மிடில் கிளாஸ்” தீக்குளிப்பு ஆதரவுடன், இலங்கைத் தமிழரின் “living in the past this and that story” வாழ்வுநிலை, எதிர்காலத்தில், முரண்படும், என்பதன் அடிப்படையில், கீழ்மட்ட மக்களின் ஆதரவும் இதற்கு ஏற்படலாம். ஆழமாக பார்த்தோமானால் இந்திய அரசின் கொள்கை நடுநிலையிலேயே இருக்கிறது. நார்வே அணுசரிப்புக்கு ஆதரவு…போன்றவை, அதற்கு உதாரணம். “தற்போது, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின்” வன்னி நிலைமை சம்பந்தப்பட்ட “நிலைகளும்” இவ்வாறே உள்ளது .உண்மைக்கு முன்னால் நடுநிலைமை இல்லை, “இந்திய உதவி இல்லாமல் இலங்கை அரசால் வெற்றியடைய முடியாது-இந்தியா துரோகமிழைத்து விட்டது- போன்ற முட்டாள் தனமான எண்ணங்கள் “living in the past this and that story” யிலிருந்தே வருகிறது. “மனித உரிமை அமைப்புகள்”, தற்போது, இலங்கை அரசையே கண்டிக்கின்றன, ஆனால் இதை புலி ஆதரவு என்று அர்த்தப்படுத்த கூடாது. அதே போல், இந்திய கொள்கையின், இலங்கை அரசாங்க ஆதரவை, “புலி எதிர்ப்பாக” அர்த்தப் படுத்தக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள், தங்களை உணர்ந்து, குண்டுசட்டி குள்ளிருந்து வெளியே வர ,”ஒத்தையடிப்பாதை” அமைத்துத் தரப்படுகிறது. பாவம் என்னும் கல்லறைக்கு பலவழி… என்றும் தரும தேவன் கோயிலுக்கு ஒரு வழி……

    Reply
  • santhanam
    santhanam

    இன்று பாராளுமன்றில் இந்திய வைத்தியர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, புல்மோட்டைப் பிரதேசத்தில் இந்திய இராணுவத்தினருக்கு வைத்தியசாலை அமைக்க இடமளித்திருப்பது சிக்கல்களை உருவாக்கும் எனவும் எதற்காக இராணுவ வைத்தியர்கள் அங்கு சேவையில் அமர்த்தப்படவேண்டும்? எனவும் கேள்வியெழுப்பியதுடன் இவ்விடயம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறத்தலாகவும் அமையும் எனவும் கூறியபோது அதற்கு பதிலளித்த சுகாதார சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா,
    மேலும் அங்கு பேசிய அவர், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது சர்வதேச சமூகத்தினர் இலங்கை மேல் அழுத்தங்களைப் பிரயோகிக்கையில் இந்தியா எமது மலைபோன்ற சக்தியாக இருந்துள்ளது என்றும் இந்தியாவின் உதவி எமக்கு இருந்திருக்காவிட்டால் இவ் யுத்தத்தை இலகுவில் வென்றிருக்க முடியாது எனவும் கூறினார்.

    Reply
  • george
    george

    why india with the goverment then suffering tamil? i think all the opporunity given us was wasted and we put up with military solution.

    who killed our elected leaders and there is no one speak for us.why this happen?

    we belive that dictatorship is good dont we?

    cant we say anything we want to say? next day we become MAMANITHAR or OOTUKULU.

    SO HINDU MAKING A POINT I DONT THINK WE CAN DISAGREE WITH IT

    Reply
  • palli
    palli

    ஜெ வி பி யினர் நினைப்பதிலும் தப்பில்லையே? இனி வரபோகும் இந்திய ராணுவத்துக்கு மருத்துவம் செய்யதான் முன் கூட்டியே இந்தியா மருத்துவர்களை அனுப்பியுள்ளது என அவர்கள் பயப்பிடுவதால் அப்படி நினைக்கிறார்கள். போற போக்கில் இந்திய பத்திரிகையாளர் வந்தாலும் இவர்கள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் போல் உள்ளது. மனிதன் எப்படியெல்லாம் பயபட வேண்டி உள்ளது.

    Reply
  • IPKF
    IPKF

    /சுகாதார சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா,இந்தியாவின் உதவி எமக்கு இருந்திருக்காவிட்டால் இவ் யுத்தத்தை இலகுவில் வென்றிருக்க முடியாது எனவும் கூறினார்./– “கேழ்வரகில் (குரக்கனில்) நெய்வடிகிறது என்றால்,கேட்பவனுக்கு மதி எங்கே போனது என்பார்கள், இதுவும் “living in the past this and that story” எண்ணக் கருவிலிருந்தே வருகிறது. நீயா, நானா என்றால் வருங்காலத்தில் மோதி பார்த்து விடுவோம்!, “நீங்கள் பஞ்சத்துக்காக போராடுகிறவர்கள், நாங்கள் பரம்பரையாக போராடுகிறவர்கள்”.

    Reply