இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் தந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரத்தினம் ‘புலிகளின் குரல்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு யோகரத்னம் யோகி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் கூறுகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்தான் ஏறி மித்தார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் அவர்களால் (இந்தியா-இலங்கை அரசுகளால்) செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு இங்கே வந்த அவர்கள், நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் புலேந்தி அம்மான் போன்றவர்களை இலங்கை அரசு கைது செய்தபோது அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால், இந்திய அரசு ஒப்பந்தத்தை காப்பாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு எங்கள் மீது போர் தொடுத்தது. ஆறாயிரம் மக்களை கொன்று குவித்தது என்பதை ப.சிதம்பரம் மறந்து விட்டார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை பரவலாக்கி, வடக்கு-கிழக்கு கௌரவமாக இணைக்கப்பட்டது என்பது ராஜீவ் காந்தியால் கூறப்பட்ட ஒன்று. அதை உறுதியாக பேணியிருக்க வேண்டியதும் இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் காலால் ஏறி மிதித்தனர் எனக் கூறுவதை பலர் அதனை ஏற்றுக்கொண்டு பேசுவதை நாங்கள் காண்கிறோம். இங்கே, நான் என்ன கூற வர விரும்புகின்றேன் என்றால் இந்த போலி வார்த்தைகளில் ஏமாறாதீர்கள்; மயங்காதீர்கள். எங்களைப் பொறுத்த வரை மிகப்பெரிய அழிவுக்குள்ளும் மிகப் பெரிய பேரழிவுக்குள்ளும் நின்று போராடுகிறோம். உறுதியாக போராடுகிறோம்.
இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் பின்னால் உலகத் தமிழினமே ஒன்றுபட்டு நில்லுங்கள். நிச்சயமாக எங்களுக்கான ஒரு நாட்டை நாங்கள் விரைவில் அமைப்போம் என்று யோகரத்தினம் கூறியுள்ளார்.
murugan
ஏன் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்ந மாகாண சபைகளுக்கு பெயர்களை பிரேரணை செய்தார்கள். யோகி கடைசி முடிவுக்கு வரும் வேளையிலும் உண்மைகள் வாயில் இருந்து வராது.
london boy
நீங்கள் பங்கருக்குள் இருந்து இவ்வயவு காலமும் தமிழ்பேசும் மக்களுக்கு செய்தது என்ன? உங்களால்த்தான் எல்லாமே கேவலப்படுத்தப்பட்டது கொச்சைப்படுத்தப்பட்டது கடைசியில் உங்கள் தவைலருக்கு எதுவுமே விளங்காது எல்லாரையுமே சந்தேகப்படுவார் “எங்களுக்கு தெரியும் என்ன செய்கிறது என்று” சொல்லுங்கோ அண்ணை என்பார் -முடிந்தது திரைக்கதை வசனம்.
george
we are making story after story but not think of people.we used them and throw them in the firing line.in the end no one taking the responsiblities.mr joki himself knew the reality.
realistically the area they govern full of swiming pool and luxury bunkers and bungalows.
mr joki not going to answer any questions we have,
for simple political resons i think its much better for tamils
please accept the faults in the past or stop taking.
game over
chandran.raja
இலங்கை-இந்திய ஒப்பந்தம் குறைந்த அளவாவது அதிகாரத்தைப் பெற்று யுத்தமல்லாமல் சமாதான வாழ்வை தமிழ்மக்கள் வாழ்வது பற்றியது. புலிகளின் பிரச்சனை தமிழ் மக்களின் பிரச்சனை பற்றியது அல்ல தமது ஹீரோ தனத்தை எப்படி பிரதிபலிப்பதை பற்றியது.
யோகி சொல்வது போல அந்த ஒப்பந்தத்தை அலட்சியப்படுத்தியதும் தொடர்பில்லாது தொடர்பை ஏற்படுத்தமுடியாததும் அவர்களது வறண்ட அரசியல் தன்மையை வெளிக்காட்டியதும் தமிழ்மக்களுக்கும் எமக்கும் எந்தசம்பந்தம் இல்லையென வெளிபடுத்தினார்கள் என்பதை பற்றியது தான்.
palli
யோகி சொல்வதிலும் சில நியாயம் இருக்குதானே. ஏனென்றால். இந்த இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திலேயே யோகி (மாத்தையா இருக்கும் போதே) நட்பு ரீதியான சிறை வைக்கப்பட்டார். அவருக்கு அப்போது நடந்த விடயங்கள் தெரியாது. இந்தநட்பு ரீதியான சிறைதான் தமிழ் செல்வனுக்கு அரசியல் பொறுப்பை தேடி கொடுத்தது. சரி யோகி போனால் இரண்டாம் இடத்தில் இருந்த இளம்வளுதிதானே அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும். எப்படி தமிழ் புகுந்தார். என்பதை காலபோக்கில் யோகியுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தால் கேப்போமே.
santhanam
எனக்கு ஒன்று விளங்கவில்லை பல்லி நாங்கள் எல்லாவற்றையும் அடுத்தவர் தலையில் பிழைகளை போட்டுவிட்டு இழிச்சவாய் தமிழரிடம் இருந்து தப்பிக்கிறோம் ஆனால் உலகம் இதை ஏற்கதயாரில்லை.
palli
சந்தானம் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் (தமிழர்) இயக்கங்களும் இலங்கயில் உள்ள கல்விமான்களிடம் தமிழரை ஒப்படைத்து விட்டு இவர்கள் காசிக்கோ அல்லது கதிர்காமத்துக்கோ போய் இதுவரை செய்த திருகு தாளங்களுக்கு ஏதாவது குப்பறபடுத்து வேண்டட்டும். ஏதோ இவர்களை விட்டால் தமிழரை வழிநடத்த யாரும் இல்லையென்னும் இந்த நையாண்டி மேளத்தை நிறுத்தவும். (இதில் பல்லியும் அடங்கும் பல்லி காசிக்குதான் கால் நடையாக)
santhanam
யதார்த்தை ஒத்து கொண்டுள்ளீர் நன்றி பல்லி.