![]()
புதுக்குடியிருப்பு பகுதியில் பலத்த மோதல்களில் ஈடுபட்டுள்ள படையினர் தப்பிவந்த 58 பொதுமக்களை மீட்டுள்ளனர். அத்துடன் மேலும் 250 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 58ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுள்ளதுடன் புலிகளுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியவாறு முன்னேறிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மோதலில் பலியான புலிகளின் சடலங்கள், 17 ரி-56 ரக துப்பாக்கிகள், 81 ரக இயந்திரத் துப்பாக்கி இரண்டு, தொலைத்தொடர்பு கருவிகள் போன்றவையும் புதுக்குடியிருப்பு இரணப்பாள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
மோதல்கள் நடந்த பகுதியில் படையினரால் மீட்கப்பட்ட 58 பொதுமக்களுள் புலிகளின் மக்கள் படையின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் அவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
palli
இந்த மனிதனின் பிழைப்பு மிக கொடுமையானது. அவன் அவன் கொழும்பில் இருந்து கொண்டு இவரை மட்டும் புது குடியிருப்புக்கு அனுப்பியது ரெம்ப மோசம். அவர் பயத்தில் பாதி ஆணவத்தில் பாதி எல்லாததையும் போட்டு குளப்பி பல்லியை விட கேவலமாய் அறிக்கைகள் விடுகிறார்.
அகிலன் துரைராஜா
இந்த இராணுவப் பயிற்சி என்பது மக்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள அல்ல. அவர்கள் புலிகளைக் காப்பாற்றவே. ஆக இந்தக் கட்டாய பிள்ளை பிடிப்பும் கட்டாயத் தடுப்பும் ஏன் இன அழிப்பாகத் தெரியவில்லை? கடந்த இரண்டு வருடத்தில் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட எத்தனையோ இளம் சிறார்கள் தப்பி வரமுடியாத நிலையில் வட்டக்கச்சியிலிருந்தும், விசுவமடுவிலிருந்தும், இன்று சுதந்திரபுரத்திலிருந்தும் வெளிநாட்டிலுள்ள சகோதரங்களுக்கு தாம் இறந்து போக இருப்பதைச் சொல்லி அழுதிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் இவையெல்லாம் சகஜம் என்று நமக்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கு தேசியம், ஆனால் நமக்கு பாசிசம்.– அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்