பிரிட்டிஷ் கொன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யும் நிழல் பாதுகாப்பு விவகார அமைச்சருமான டாக்டர் லியாம் பொக்ஸ் சமூக சேவைகள் அமைச்சரும் வட மாகாண விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசினார்.
நேற்று முன்தினம் காலை கொழும்பிலுள்ள சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தற்போது வட பகுதியில் இடம்பெறும் மோதல் நிலை அதன் காரணமாக பொதுமக்களின் இடம்பெயர்வுகள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் டாக்டர் லியாம் பொக்ஸ் விரிவாக கேட்டறிந்து கொண்டார்.
மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் விபரங்களை விபரமாக தெரியப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் நலன் தொடர்பில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கினார்.
london boy
டக்ளஸ் இப்போத என்றாலும் இந்த புலிகள் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் என்றாலும் தமிழ்பேசும் மக்களுக்கான நிரந்தர தீர்வை முன்வைக்கமாறு அரசை கேட்கலாமே (வற்புறுத்தமாட்டீர்கள் என்பது எமக்கு தெரியும்)அந்த அரசியல்த் தீர்வை செயற்ப்படுத்தினால் புலிகள் உட்பட எத்தனையோ பிரச்சினைகளுக்கு இதுதானே தீர்வு செய்வீர்களா அல்லது நீங்களும் புலிகள் பங்கரக்குள்ளே இருந்து வந்து உலகம் புரியாமல் கதைப்பது போல நீங்களும் பாரளுமன்ற இருட்டிலிருந்து வந்து கதைப்பீர்களா?
murugan
லண்டன் நீங்களாவது டக்ளஸை பார்த்து அரசை வற்புறுத்தலாமே என கேடகிறீர்கள் நியாயமானதுதான். இங்குள்ள ஏகப்பட்டவர்கள் தாங்கள் சொல்லுறதை டக்ளஸ் கேட்க வேண்டும் எனவும் திரைமறைவில் நின்று அங்கு ஆட்டிப்படைக்க வேண்டும் எனவும் பல இளைஞர்களை புலிக்கு காவு கொடுத்து தப்பிப் பிழைத்துக் கொண்டுள்ள டக்ளஸை போன்றவர்கள் மீது சேறடிப்பதிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.
palli
என்னதை சந்தித்து இருவரும் உடல் னலத்தையும் விசாரித்திருப்பார்கள்.mதோழர் தனக்குரிய சக்கரை வியாதியையும் லியாம் தனக்குரிய மன வருத்தத்தியும் பேசியிருப்பார்கள்.விழுந்தா மாங்காய் தொலைந்தா கல் என்பது போல்தான் இவர்கள் சந்திப்பும்.