முதலீட்டுச் சபையின் பலதரப்பட்ட திட்டங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடக தகவல்துறை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா ஆகியோருக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை முதலீட்டுச் சபையின் பல துறைகளில் 7,000 வெற்றிடங்கள் நிலவுவதாக இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனையடுத்த அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.