இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது..
அரசாங்க இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம், பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் பயமுறுத்திவருவதாக கண்டனம் செய்துள்ளது.
நிவாரண நிறுவனங்களும், ஊடகத்தினரும் போர் பகுதிக்கும், முகாம்களுக்கும் தங்குதடையின்றி சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கேட்டிருக்கிறது