குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து கொழும்பு பெரியாஸ்பத்திரியின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மஹிந்த விஜேசேக்கரவின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை யின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேக்கர சுமார் 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இன்னமும் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்த டாக்டர் ஹெக்டர் வீரசிங்க, அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் காணக்கூடியதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.