![]()
வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் வைத்து தமிழ் ஆசிரியை ஒருவர் நேற்று (மார். 10) மாலை கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸிலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறையிட்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு அமைப்பாளரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பில் தம்மிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நேற்று மாலை 4.30 மணியளவில வெள்ளவத்தை பஸல்ஸ் ஒழுங்கையில் தனது வீட்டுக்கு முன்பாக பெண்ணொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்தோர் அவரை பலாத்காரமாக ஏற்றிச் சென்றனர். ராஜகிரியவிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 31 வயதான ஆசிரியையே கடத்தப்பட்டவரென மனோ கணேசன் தெரிவித்தார்.
ramesh
இது புலிகளின் வேலைதான். திட்டமிட்டு அரசு மேற்கொள்ளும் நன்னடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கை. புலிகளின் ஆரஜகம் இன்னமும் ஒழியவில்லையா?? அப்ப ஜனநாயகமும், தமிழும் எப்போது நம் தலைமையில்(மாற்றுகருத்தாழர்கள்) விடிவுபெறபோகிறது???
palli
இது கொழும்பு வாழ்க்கையில் சகசம்தானே. கடத்தல் என்பது இப்போது ஒரு நாகரிகமான தொழில். இதுக்கு சில முகவர்கள் கொழும்பில் இருக்கிறார்கள். இதனாலேயே ஒருவர் அமைச்சர் ஆகிவிட்டார். பல்லி கருனா என சொல்லவில்லை.
கபிலன்
யார்தான் கடத்தினாலும் மிகக்கண்டிக்கப்பட வேண்டிய விடயம் அந்தப் பெண் விரைவில் விடுதலை செய்யப்பட வெண்டும் என இறைவனைப் பிராத்திக்கின்றேன். அதேவேளை புலி தான் கடத்தினாலும் இராணுவத்தின் தலையிலை கதையை முடித்து லண்டனுக்குப்போய் அகதி அந்தஸ்து பெற்று வாழமுயற்சி செய்யுங்கள்.