வவுனியா ஓமந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை புதிதாகப் பொலிஸ் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது. வன்னிக்கான இராணுவச் சோதனை நிலையமாக ஓமந்தை முன்னர் விளங்கிய நிலையில் தற்போது அங்கு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டது.
இந்தப் பொலிஸ் நிலையத்தைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், வவுனியா நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பொலிஸ் நிலையங்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏ9 வீதியில் ஓமந்தை முதல் முகமாலை வரையும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.