ஏ 9 பாதையூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இருபத்திரண்டு லொறிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன. முன்னதாக திங்கட்கிழமை காலை வெலிசறை உணவுக் களஞ்சியத்தில் இருந்து இந்த லொறிகள் புறப்பட்டன.
ஏ 9 பாதை போக்குவரத்திற்காகப் திறக்கப்பட்ட பின்னர் யாழ்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதன் முதலாக இந்த லொறிகள் சென்றுள்ளன. யாழ்ப்பாணம் வந்த இந்த லொறிகளின் பொருட்கள் நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த லொறிகள் மீண்டும் கொழும்புக்குச் செல்லும்போது போத்தலில் அடைக்கப்பட்ட பனம் கள்ளு, பனம் சாராயம், பனம் உற்பத்திப் பொருட்கள், வெங்காயம், கடலுணவுகள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேவேளை, தனியார் வர்த்தகர்களும் லொறிகளில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
palli
போன பஸ்க்கள் திரும்பி வராமல் 9 நம்பர் தெருவை பூட்டியாச்சாமே உன்மையா?
ashroffali
பல்லி இது மிக ஆபத்தான பொய்ப் பிரச்சாரம்………………………..
santhanam
லங்காபுவத் தமிழர் கைக்கு மாறிவிட்டது பல்லி.
chandran.raja
அஷ்ராப் இதற்குப்போய் நீங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளலாமா ? புலிகள் செய்யாத பொய்யான பிரச்சாரத்தை விடவா இனி இவர்கள் செய்யப்போகிறார்கள்?
வெற்றியடையப் போகிறார்கள். போனவை பஸ் அல்ல லொறி என்பதுதெரியாமல் என்னத்திற்கு போனது என்பதை தெரியாமல் பின்னோடம் விடுகிறவர்களை……. …………………….
நேற்று ஜி.ரி.வி தொலைகாட்சியில் இருபத்திரண்டு லொறிகளில் பன்னிரண்டு லொறிகளில் யாழ்பாணத்திற்கு ஆயுதங்கள் கொண்டு சென்றதாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். சொல்வதற்கு ஒன்றுமில்லாத போது இல்லாதவன் என்ன செய்வான் !
palli
அஸ்ரப் ராணுவத்தை ஏற்றி கொண்டு வடக்கே போச்சுதா இல்லையாவென (9ம் நம்பர் தெருவால்) தோழரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்.
சந்தானம் நன்றி உங்க கண்டு பிடிப்புக்கு.