வன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஒருபகுதி அன்று மாலையே இறக்கி கரை சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உணவுப் பொருட்கள் இறக்கப்படாமலே அந்த கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு திரும்பியது.
அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்தியதாகவும், அதனாலேயே அந்த கப்பல் உணவுப்பொருட்களை தரையில் இறக்காமல் திருகோணமலைக்கு திரும்பியதாகவும் இலங்கை இராணுவத்தின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.