இந்திய மருத்துவர்கள் குழுவுடன் மருந்துப் பொருட்களும் இலங்கை வந்துள்ளது

india-dr.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர்களின் குழு ஒன்று மருந்துப் பொருட்களுடன் இன்று இலங்கைக்கு வந்துள்ளது  இந்திய மருத்துவர்களும் மருந்துகளும் மருத்துவ பணியாளர்களையும் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதில் 8 வைத்தியர்களும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரும் உள்ளடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் புல்மோட்டையில் 50 படுக்கை வைத்தியசாலை ஒன்றை அமைக்கவுள்ளதாக இன்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது. – விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவிகள் வழங்க.  இந்தியா ஏற்கனவே 2 முறை மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது.

டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் ஐஎல் 76 விமானத்தில் 25 டன் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்ஆகியவற்றுடன் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவும், இலங்கைக்கு நேற்று சென்றது.

இதேபோல், மருந்து மற்றும் மருத்துவக் குழுவுடன் மற்றொரு விமானம் இன்று, கொழும்பு செல்கிறது. இது மட்டுமின்றி, மேலும் 2 விமானங்களில் மருந்துகள் அனுப்பப்படும்  என்றும் விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி தெரிவித்தார். இந்த மருந்து பொருட்கள் ஐ.நா. குழு மற்றும் செஞ்சிலுவைசங்கம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    நீங்கள், எதுக்கு வந்தீர்களோ யார் மூலம் வந்தீர்களோ பல்லிக்கு தெரியாது. ஆனாலும் எந்த விதமான விமர்சனம் இன்றி தங்கள் சேவையை பல்லி மனதார பாராட்டுகிறது. இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள்தான் இந்திய மருத்துவர்கள் என்பதை உங்கள் செயல் மூலம் உங்கள் மனிதாபாமானம் மூலம் காட்டுங்கள்; காட்டுவீர்கள் என பல்லி நம்புகிறது.

    Reply