கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் வைத்துள்ள சகல தமிழ் அமைப்புக்களும் தம்மிடமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
விடுதலைப் புலிகளும் உடனடியாக ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுதம் வைத்துள்ள சகல தமிழ் அமைப்புக்களும் அவற்றிடமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும என மேலும் கேட்டுக்கொண்டார்.