உணவுக் கப்பல் மீது புலிகள் ஷெல் தாக்குதல்

ltte_attack.pngமுல்லைத் தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்மீது புலிகள் இன்று காலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிய எம்.வி பிந்தன் சரக்குக் கப்பல் கடந்த 07 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கோதுமை மா 399 தொன், பருப்பு 61 தொன், மண்எண்ணெய் 1400 தொன், சீனி 20 தொன், மரக்கறி எண்ணெய் 21 தொன்,பெற்றோல் 200 தொன் மற்றும் குளோரின் 90 கிலோ ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இக்கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் புதுமாத்தளன் பிரதேசம் சென்றடைந்த இக்கப்பல் பொருட்களை இறக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டது. எனினும் 142 மெற்றிக் தொன் பொருட்கள் இறக்கப்பட்ட வேளையில் திடீரென புலிகள் ஷெல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் என கப்பல் கெப்டன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக இக்கப்பல் ஆழ்கடல் நோக்கிச் செலுத்தப்பட்டதாகவும் எனினும் கொந்தளிப்பான நிலையில் கடல் காணப்படுவதாகவும் கெப்டன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to sapi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Suresh M.M.A
    Suresh M.M.A

    சொல்லுங்கள். இன்னமும் உரத்துச் சொல்லுங்கள். மக்கள்தான் பலிகள் புலிகள்தான் மக்களென்று புலம்பெயர் புலிரசிகர்களே இன்னும் உரக்கச் சொல்லுங்கள். ஊரைக் கொழுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளே! கோழியும் பசுமதிச் சோறும் கீரையும் இங்கிருந்து வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, சமிபாட்டுக்காககவும் கொழுப்பைக் கரைக்கவும் தெருவில் வந்து கொடிபிடித்த நடவுங்கள். கொத்தும் குலையுமாக செத்து மடியும் அப்பாவிச் சனங்களின் உயிர்கள் உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் பொழுபோக்குச் சித்திரம். …………………..! எப்போதான் மனிதர்களாக மாறப் போகிறீர்கள்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    உணவுக்கப்பல் மீதான இந்தத் தாக்குதலை இனி புலிரசிகர்கள் மறுப்பார்கள் பாருங்கள். அது ராணுவம்தான் செய்தது என்று சொல்வார்கள். விடிவதற்குள் இது நடக்கவில்லையென்றால் பாருங்கள். இப்படித்தான் மக்களோடு மக்களாக வந்த குழந்தைப் பெண்புலி தற்கொலைக் குண்டாக வெடித்து தப்பி வந்த மக்களும் செத்துப்போனபோது சொன்னார்கள் அது அப்படி தற்கொலைக் குண்டுதாரி ஒன்றும் வெடிக்கவில்லை ராணுவம்தான் சுட்டுவிட்டு சும்மா சொல்கிறது என்றார்கள். இதே சம்பவத்தை கனடாவிலுள்ள புலி ரசிகர்கள் சொன்னார்கள் “ராணுவத்தைக் குறி வைத்துத்தான் குண்டுதாரி வெடித்து வெற்றி கண்டார். ஆனால் மக்களைச் சுட்டது ராணுவம்தான்” என்று.

    புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஐந்து வெவ்வேறு இடங்களில் ஒரேயளவு எரித்து நூர்க்கப்பட்ட சிறியோர் முதியோர் பேதமற்ற உடல்களை இணையத்தளங்களில் போட்டு சொன்னார்கள் ராணுவம் செய்தது என்று. அதறகுப்பின் தப்பி வந்த நபர்களிடமிருந்து இரகசியமாகக் கிடைத்த செய்தி: தமது கட்டுப் பாட்டுக்குள் இருந்த, முன்பு வேற்று இயக்கங்களிலிருந்து விலகி குடும்பமாக வாழ்ந்த பழைய போராளிகளின் குடும்பங்களை தேடிப்பிடித்துக் குடும்பங் குடும்பமாகவே தீயிட்டுக் கொழுத்தி அரைகுறையோடு அணைத்து வீடியோ எடுத்தார்கள் என்று. இன்னொரு தகவல்: பட்டினி தாங்கமுடியாமல் கண்ட தாவரங்களையும் சமைத்து உண்டு குடும்பதாய் செத்துப் போனார்கள் என்ற சம்பவம் சுத்தப் பொய். தப்பிப் பொவதற்குத் தயாராயிருந்த குடும்பமொன்றைப் பிடித்து கஞ்சியில் சயனைட் கலந்து கட்டாயமாகக் குடிக்கக் கொடுத்தார்களாம். இப்படி நிறையத் தகவல்கள் வெளியே கசியத் தொடங்கி விட்டன. இதையம் புலிரசிகர்கள் ஏற்கப் போவதில்லை என்பது, இதைச் சொல்லும் நாம் …………….. என்றும் சொல்வார்கள் என்பது தெரியும். காலம் வெகு தொலைவில் இல்லை மக்களே! ராணுவமோ அரசோ ஒன்றும் புனிதர்களல்ல என்பது உலகுக்கே தெரியும். ஆனால் மக்களுக்காக என்று சொல்லம் புலிகள் இன்னமும் அந்த மக்களுக்கச் செய்யும் கொடுமையை சொல்லிமாளாமலிருக்கிறதே பராபரமே…!

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • murugan
    murugan

    அது எல்லாம் தமிழ் ஈழத்திற்கான போராட்டம்தான்! அங்கை இங்கை என்று அடிச்சப் பார்த்து குறுட்டு லக்கில தமிழ் ஈழம் வந்திடாதோ எனற ஒரு நப்பாசையில் முயன்று முயன்று முயற்சிக்கிறது தானே போராட்டம்.

    Reply
  • murugan
    murugan

    மக்களோடு மக்களாக வந்த குழந்தைப் பெண்புலி தற்கொலைக் குண்டாக வெடித்து தப்பி வந்த மக்களும் செத்துப்போனபோது சொன்னார்கள் அது அப்படி தற்கொலைக் குண்டுதாரி ஒன்றும் வெடிக்கவில்லை ராணுவம்தான் சுட்டுவிட்டு சும்மா சொல்கிறது என்றார்கள்.”

    புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலி எதிர்ப்பாளர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். புலி செய்திருநதால் ஒரு குண்டு வெடிப்போடு நின்றிருக்குமா? அரசு செய்தபடியால் தான் ஒன்றோடு நின்று விட்டதாம். கேட்க கேட்க கண்ணைக் (வடிவேல் மொழியில்) கட்டுது.

    Reply
  • துறை
    துறை

    ……………………பிடிச்ச சனத்தை பிரபா கருவாடா கடற்கரையிலை காயப் போட்டிருக்கிறார் கருவாடகும் சனத்தை வத்தலாக்க கப்பல் வந்தால் பிரபா அடிப்பார்தானே.

    Reply
  • padamman
    padamman

    கப்பலை புலிகள் தாக்கவில்லை மக்கள்தான் தாக்கினார்கள்

    Reply
  • sapi
    sapi

    Relief ship “not targeted” – ICRC
    The International Committee of the Red Cross (ICRC) says that a ship carrying its flag came close to being hit by artillery shells in north-east Sri Lanka.

    ICRC has been assisting the evacuation of civillians injured in the war in addition to providing essential supplies to those caught in the war.After arriving with food supplies and aid for civilians, the ship, anchored off the coast at Puthmatalan, was unloading its cargo on to small boats when, the ICRC said, shells fell two-to three-hundred metres away.

    “We have no reason to believe the ship flying the ICRC flag was targeted by shells which were falling around it while trying to unload supplies”

    ICRC
    Carla Haddad, Deputy Head of communications of ICRC speaking to BBC Sandeshaya from Geneva said that that the ship had unloaded 144 metric tons of essential supplies since it arrived in Puthumatalan on Sunday.

    LTTE blamed
    Although the Sri Lankan military blamed Tamil Tiger rebels for the incident, the ICRC said it had no reason to believe the ship was targeted.
    “We have no reason to believe the ship flying the ICRC flag was targeted by shells which were falling around it while trying to unload supplies,” said Carla Haddad.

    Ship withdrawn
    The ship had to withdraw off the coast of Puthumathalan back to Trincomalee without unloading the whole 500 metric tons of supplies “due to severe weather conditions”. This decision was made in consultation with the Sri Lankan Navy, the ICRC spokesperson added.

    Reply
  • palli
    palli

    யார் செய்திருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றமல்ல மன்னிக்க முடியாத மனிதர்கள் இவர்கள்.

    Reply