![]()
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். மேடையி்ல வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியையும் அவர் போட்டார்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. மாலை 5 மணி வரை ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.
உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இலங்கை-இது ஜெவின் 2வது உண்ணாவிரதம்:
இலங்கைப் பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2வது முறையாகும். கடந்த 1985ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனைக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். காவிரிப் பிரச்சனைக்காகவும் அவர் மெரீனா கடற்கரையில் திடீர் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
msri
இந்த உண்ணாவிரதப்பயறு நாடாளுமன்றத் தேர்தலில் அவியாது!
Suresh M.M.A
அப்படியெல்லாம் சொல்ல மடியாது நண்பரே! பயறு சிலவேளை தறுக்கணிததுப் போகலாம் ஆனால் அவிந்தாலும் அவியும். ஏன் சொல்கிறேனென்றால்:
1:அம்மைக்கு பார்ப்பனரின் செல்வாக்கு உண்டு.
2:தாழ்த்தப்பட்ட மக்களின் மதுரைவீரன் எங்கசாமியாக எம்.ஜி.ஆர் விதைத்துவிட்டுப்போன பக்தி இன்னமும் அந்த மக்களிடம் உண்டு.
3: இருபெரும் தமிழகத்துக் கம்யூனிசக் கருங்கற்கள் அம்மையின் இடம் வலமாக இன்று அமர்ந்து கலைஞரை மிக வக்கிரமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
4:அண்மையில் ஈழத்தமிழரைக் குறித்து கலைஞரின் ஆட்சிமீது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கசப்பு நிலை.
இப்படி சில தணல்கள் சரியாக ஊதப்பட்டால் நின்றெரிந்து பருப்பு வேகக்கூடுமா இல்லையா?!
சுரேஸ் டபுள் எம்.ஏ