இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கோரியும் தமிழர்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கது
என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடந்த அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி ஆகியவற்றை புறக்கணித்த ஜெயலலிதா இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்தவர் இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்று தெரிவித்துள்ளார்.
palli
இந்த புரிந்துனர்வு விட்டு கொடுப்பு அனைத்து தலைவர்களும் பின்பற்ற கூடியது. தமிழகத்தில் மட்டுமல்ல ஈழத்திலும் குறிப்பாக புலம் பெயர் தேசத்திலும். நாம் தான் மக்களை காக்க வேண்டும் என்னும் சின்ன புத்தி கைவிடபட வெண்டும்.