முல்லைத் தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒன்பதாவது தடைவையாக 406 பேர் நேற்று (06.03.2009) இரவு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
கிறீன் ஓசன் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளவர்களில் நோயாளர்கள் காயமடைந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 2700 பேருக்கு மேற்பட்டோரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.