முல்லைத் தீவு பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆறு படகு கள் மூலம் தப்பி வந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படு காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
ஆறு படகுகள் மூலம் தப்பிவந்த பொதுமக்கள் மீது பின் தொடர்ந்து சென்றே தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து ஆறு படகுகளில் சென்ற போது மக்கள் மிகவும் அச்சத்துடன் தட்டுத்தடுமாறியுள்ளனர்.
ஆறு படகுகளில் இரண்டு படகுகள் கெவில் மற்றும் சுண்டிக்குளம் கரையை சென்றடைந்துள்ளது. இவர்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.ஏனைய, நான்கு படகுகளும் கடற்படையினரின் உதவியுடன் முனை பிரதேசத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதென்றார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி நேற்று 200 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களை இலக்கு வைத்து புலிகள் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள படையினரை இலக்கு வைத்து புலிகள் 130 மி. மீ. ரக மற்றும் 120 மி.மீ. ரக பீரங்கிகளை பயன்படுத்தி நேற்றும், நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தினர். புலிகள் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது படையினரின் ராடார் கருவிகளில் தெளிவாக பதிந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
Suresh M.M.A
ம்… ம்… எல்லோரும் சொல்லுவதையும் எழுதுவதையும் கேட்டுக் கேட்டே ம்.. கொட்டிப் பழக்கப் பட்டு விட்ட கூட்ம்தானே சாமீ நாங்க. பொதுமக்களை புலிகள் தாக்குகிறது என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள்தான் பொதுசனத்தைக் கொல்வதாக புலிகள் சொல்வார்கள். ம்.. சொல்லிக்கொண்டே இருக்கிறோம். “ஆத்தில போற வெள்ளம் அண்ணை குடி தம்பி குடி” என்ற கணக்காக சனங்களின் உயிர்களை அண்ணன் தம்பி நீங்கள் இரு பகுதியும் (நக்கீரனின் ஆய்வின்படி) மாறி மாறிக் குடிக்கிறீர்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் மறைவில் வைத்து ம்..கொட்டுகிறோம். ஆக முடிவாக சனத்தை மொத்தமாக அழிக்க வேண்டுமென்பதில் எல்லாத் தரப்பும் கவனமாக இருக்கிறீர்கள்.
சுரேஸ் டபுள் எம்.ஏ
Kusumpan
ஏன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்கள் தப்பி ஓடுகிறார்கள்? அங்கு அவர்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்க வேண்டும். இவர்களை புலிகள் ஏன் சுடவேணும். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள். எங்கள் புலிகள் எமது பக்கத்தில் இருந்து ஓடினால் தான் சுடுவார்களே தவிர ஏன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து?
accu
நண்பர்களே புலி தப்பி வெளியேற நினைக்கும் மக்களை சுட்டுக் கொல்வதற்க்கான காரணம் தேசத்தில் பின்னூட்டம் விடும் பலருக்குத் தெரியும். இருந்தும் மீண்டும் நானும் ஒருமுறை சொல்லுகிறேன். இப்படியாக தப்பி வரும் மக்களுக்கு இராணுவமும் தமிழ்க் குழுக்களும் கொலை, கற்பழிப்பு, கருக்கலைப்பு, சித்திரவதையென அனைத்து அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதற்க்கு யுனிசெப், செஞ்சிலுவைச்சங்கம், ஐ.நா உறுப்பினர்கள், இன்னும் அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச பிரதிநிதிகள் எல்லாமே ஊக்கமும் ஆதரவும் கொடுக்கின்றன. இதை அறியாத அந்த அப்பாவி மக்கள் வெளியேறி இப்படியான கொடுமைகளுக்கு ஆளாகாமல் தடுப்பதற்க்காகவும், அவர்களை தம்மோடு வைத்து அவர்களுக்கு தாம் கேடயமாக இருந்து பாதுகாக்க வேண்டுமென்ற ஒரே நல்ல நோக்கத்தில்தான் புலிகள் இந்தக் கொலைகளை செய்கிறார்கள். அவர்களின் இந்த மனிதாபிமான பணிகளை தேசம் வாசகர்களான நாமும் ஊக்கமும் ஆதரவும் கொடுத்து போராட்டங்களும் நடத்தி வெற்றிபெறச் செய்வதே முக்கிய பணியாகும்.நன்றி.
Suresh M.M.A
அச்சு! முதலில் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள டெக்கோடர் யாருடையது என்று பாருங்கள். அதை உங்களுக்கு விற்றவர் யாரென்று பாருங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் தவறாமல் பார்க்கும் சணல் எதுவென்று பாருங்கள். அது யாருடைய சனல் என்று பாருங்கள். இப்படி நீங்கள் பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
சுரேஸ் டபுள் எம்.ஏ