நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது – ஐ.தே.க

ravi-karunanayaka.jpg இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் முதனிலை நிறுவனங்களாகக் கருதப்படும் 41 நிறுவனங்களில் 37 நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து 182 பில்லியன் மேலதிகப் பற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை குறைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply to Kusmpan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusmpan
    Kusmpan

    இவர்களும் அடிக்கடி இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு போருக்கு ஊக்குவிக்கப்ட்டார்கள். தாமாகவே போய் அறிவுரை பெற்றாகள். பேச்சுவார்த்தை என்ற போர்வையில் போருக்குத்தாயாரானார்கள். அதேபோரையே வைத்து மகிந்த ஆட்டம் காட்டிவிட்டாரே. அடுத்த முறையும் மகிந்ததான். ஜெய் மகிந்த. தமிழர்களுடன் சிங்களவரும் சேர்ந்து நடத்தப்போகும் போராட்டத்துக்கு வழிவகுக்கும் மகிந்த வாழ்க வருக

    Reply