நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தியும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் நிலை பெற வேண்டி கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று புத்த பெருமானின் புனித தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தமது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டார். விசேட சமய வழிபாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இன்று மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பக்தர்கள் இதனை பார்வையிட முடியும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் புத்த பெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இதனை பார்வையிட நாடு முழுவதிலுமிருந்து சுமார் 10 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் புனித மாளிகை வளாகத்தையும் நகரத்தையும் அசுத்தப்படுத்தா வண்ணம் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
palli
(மன்னிக்கவும் இதுநாத்திகமல்ல) இந்த வன்னிபோரில் மகிந்தா வெற்றி பெற்று விட்டால் புத்தரே மகிந்தாவின் காலை தொட்டு வணங்குவாரென பிக்குகள் பிராத்திப்பது பல்லியின் பலனில் தெரிகிறது.
என்ன தில்லு முல்லு சர்வதேசத்தை இதுவரை ஏமாற்றி வந்த மகிந்தா குடும்பம் முதல் முதலாக புத்தரையும் ஏமாத்த புறப்பட்டு விட்டதை அறிய தருகிறோம். (இதுவும் பல்லியின் பலன் மட்டுமே)
பகீ
எத்தனை மக்களின் ‘தந்தங்கள்’ புத்தனின் பெயரால் புனிதமாக்கப்பட்டுவிட்டன என்பதை புத்தர் அறியமாட்டார்!
a.a.kumar
பொலன்னறுவவில் பழைய புத்த சிலைகளை மகிந்த அரசு சேமிக்கின்றார்களாம். அண்மைய பெளத்த நாட்டு விஜயமும் பழைய சிலைகள் வாங்கத்தானாம். எதிர்காலத்தில் தள்ளாடி தொடக்கம் புதுக்குடியிருப்பு வரை நிலத்துக்கடியில் இருந்து போதிசத்துவர்களும் கிடைக்கலாம்.
பகீ
பரிநிர்வானம் அடைந்தவரின் புனித தந்தத்தை காட்டுகிறார்கள் ஆனால் புத்தரின் நிகழ்கால அவதாரம் என திபெத்தியர்களால் நம்பப்படுபவரும் அகிம்சாவாதியும் சமாதான நோபல் பரிசுபெற்றவரும் உயிரோடிருப்பவருமான தலே லாமாவுக்கு விசா கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. ஒருவேளை உயிருடன் உள்ள புத்தர் உண்மையை சொல்லி ஸ்ரீலங்காவின் புத்தாகளை பரிநிர்வானம் அடையச்செய்து விடுவார் என்கின்ற பயமோ?
Kullan
பகீ சொல்வதுதான் முழு உண்மை. புத்தரோ தன்கடமையை மறந்து கொண்டவளுக்கே சொல்லாமல் வீட்டை விட்டு ஓடியவர். அன்று ஆர்வத்தில் இயக்கத்துக்கு ஓடிப்போன சிறியவர்கள் கூட ஒரு துண்டு எழுதிவைத்துவிட்டுத் தான் போனார்கள். புத்தர் இதைக்கூடச் செய்யவில்லை. புத்தரின் கடமை உணர்வு எங்கே போனது? தன் கடமையிலேயே கருணையில்லாத புத்தராலும்: அவர் பக்தர்களாலும் எப்படி கருணைகாட்ட முடியும். யானைக்கு இருப்பது தந்தம் மனிதனுக்கு இருப்பது பல்லு. புத்தருக்கு எப்படி வந்தது தந்தம்?
Suresh M.M.A
அப்படியானால் புத்தனைவிட நாம் மேல் என்கிறீர்களா குலன். கேட்க சரியான சந்தேசமாயிருக்கு. எங்களக் கஷ்டப்பட்டு வளர்த்த அப்பு ஆச்சிமார் பதகளிச்சுப் போயிரக் கூடாதென கடிதத்தை எழுதி சீனிப் போத்தலுக்குள்ள வச்சுப்போட்டு இயக்கத்துக்கு ஓடிப்போய்; பிறகு புலிக்குப் பயந்து சொந்த இயக்கத்துக்குப் பயந்து நாடி நரம்பெல்லாம் செத்து தப்பியோடிவந்து… இப்பிடியே “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்” என்ற கணக்காய் வெளிநாடுகளுக்கு ஓடி வந்த பின்னும் ஆச்சி அப்புவை ஏமாற்றி விட்டோமோ என்ற குற்ற உணர்வு இருந்து கொண்டுதான் குலன் இதுவரை இருந்தது. ஆனால் இப்போ புத்தனின் பொறுப்புணர்வற்ற தன்மையைச் சொல்லி எம்மைக் கடமை வீரர்களாக்கி விட்டீர்கள். எங்கள் பாவங்கள் கழுவப்பட்டு விட்டன என்ற திருப்தியில் இன்று புளித்த பழரசம் அருந்திக் கொண்டாடுவோம். குலனுக்கு என்போன்ற …பிள்ளைகளின் நன்றிகள்!
சுரேஸ் டபுள் எம்.ஏ