கடந்த காலங்களில் கொழும்புத் துறைமுகத்தின் சுங்கப் பகுதியினூடாக உலகின் அதி நவீன ஆயுதங்கள், அச்சக நவீன உபகரணங்கள், மற்றும் மிகவும் விலை மதிப்புள்ள தொலைத் தொடர்புச் சாதனங்கள் விசேட கொள்கலன்கள் மூலம் புலிகளுக்குச் சென்றடைத்துள்ள தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
இப்பெரும் மோசடி எவ்வாறு நடைபெற்றது? இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார்? என்பதைக் கண்டறிய துரித விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,
2002 ஆம் 2004 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நடைபெற்றுள்ள இந்த மாபெரும் மோசடியின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற விபரத்தை இன்னும் சில தினங்களில் அரசாங்கம் வெயிடும்.
நாளை கிழக்கில் ஒரு மங்களகரமான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வாகும். தோற்கடிக்கப்படும் புலிகளால் இனி தமக்கு உயிராபத்து இல்லை என அந்த அமைப்பு கருதுவதாலும் அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பதில் நம்பிக்கை கொண்டதாலும் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுகின்றது. இது மிகவும் பாராட்டுக்குரியது
கிழக்கில் கப்பம் கோரல், ஆட்கடத்தல் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றனர் என சில ஊடகங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
palli
பல்லிக்கு என்னமோ பசில் பக்ஸ்சாமீதுதான் சந்தேகமாய் இருக்கு. காரனம் அவர்தான் புலியிடம் உள்ள் ஆயுத கணக்கை நம்ம விஜயகாந் போல் சொல்லுகிறார். அதுக்காக பல்லி குடுமத்தில் குளப்பத்தை விளைவிக்குதென அஸ்ராப் பல்லியை திட்ட கூடாது. இதெல்லம் பதவி போரில் நாட்டில் நடப்பதுதானே.
பகீ
வித்தியாதரனும் பூபாலசிங்கம் புத்தகக்கடைகாரரும் என சொல்லாமல் விட்டால் சரிதான்!