புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் பயன்படுத்தப்பட்ட 13 ஏவுகணை களின் வெற்றுக் கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறுகையில்
இந்த ஏவுகணைகள் எப்போது யாரால் எந்த இலக்குக்குப் பயன்படுத்தப்பட்டன போன்ற தகவல்கள் அந்து வெற்றுக் கூடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி முதலாவது ஏவுகணை இராணுவத்துக்கு எதிராகப் பயன்படுத்ப்பட்டுள்ளது. கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமி 23 ஆம் திகதி பாவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான இரு ஏவுகணைகளை அண்மையில் கிழக்கில் தொப்பிகலைப் பிரதேசத்தில் படையினர் கண்டுபிடித்தனர் என்றும் பிரிகேடியர் கூறினார்.
palli
சரி இதை ஏன் புலிகள் சேகரித்தார்கள் யாரிடமாவது கொடுத்து கணக்கு காட்ட வேண்டுமா?? அல்லது உதயநாணயகாரா காட்டுகிறாரா கணக்கு சர்வதேசத்துக்கு?? என்னமாய் பிளான் பண்ணி (அந்த பண்ணியல்ல) ஆட்டோ ஓட்டுறாங்க.
பார்த்திபன்
ஆமா எல்லோரும் இப்ப படம் காட்டுறதிலையே குறியாக இருக்கினம்.
nadesh
தொப்பிகலைப் பிரதேசத்தில் படையினர் கண்டுபிடித்த ஏவுகணைகளை அரசு இந்த அடிஅடிக்கவும் புலிகள் ஏன் பாவிக்காமல் இருந்தார்கள். அரசும் புலியும் சேர்ந்து விளையாடுதா.