தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் இருவரின் மேன்முறையீட்டை சவூதி அரேபிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதன் படி வெகுவிரைவில் இவர்களின் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஜோடா பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம் கொள்ளையிட்டது, வீட்டு உரிமையாளரை கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஹலீமா காதர் மற்றும் பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் சவூதி அரேபியாவின் ஜோடா நீதிமன்றம் 6 மாதங்களுக்கு முன் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தண்டனை அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இருவரும் மேன்முறையீடு செய்திருந்தனர். இதற்கு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரம் தேவையான உதவிகளை வழங்கியிருந்தது.
மேன்முறையீட்டை ஆராய்ந்த சவூதி அரேபியா ஜோடா நீதிமன்றம் மேன்முறையீட்டை நிராகரித்ததோடு தண்டனையை நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.