வித்தியாதரனை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

vithyatharan.jpgகடந்த வாரம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம செய்தி ஆசிரியர் என்.வித்தியாதரனை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாடட்த்திற்கான ஏற்பாட்டினை ஊடக அடக்கு முறைக்கு எதிரான முன்னணி மேற்கொண்டிருந்தது.எனினும் இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் மொத்தமாக 30 ற்கும் குறைவான ஊடகவியலாளர்களே கலந்து கொண்டனர்.

முறையாக ஒழுங்கமைப்பு செய்யப்படாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்ட என்.வித்தியாதரனை விடுதலை செய்யும்படி வலியுறுத்தினர்.

கடந்த 26 ம் திகதி கல்கிஸ்ஸ மஹிந்த மலர்சாலையில் வைத்து காலை 9.40 மணியளவில் என்.வித்தியாதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட என்.வித்தியாதரன் இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நடைபெற்ற அமைச்சாரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடவியலாளர் மாநாட்டில் என்.வித்தியாதரன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதன் போது உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் என்.வித்தியாதரன் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் கைது செய்யப்படவில்லை எனவும் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட விமான தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் அரசாங்க அமைச்சரவை பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் பிரதம செய்தியாசிரியர் என்.வித்தியாதரன் தற்பொழுது இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • murugan
    murugan

    யாழ்ப்பாணத்தில் இருந்து சீட்டுப் போட்டு சுருட்டிக் கொண்டு வந்த கோடிகள் பற்றி வித்தியாதரனிடம் விசாரணை நடக்குமா?

    பாதி யாழ்ப்பாணிகள் அழிக்கப்பட்டால் அன்னிய தலையீடு வந்து தமிழீழம் வரும் என ரிரிஎன் னுக்கு பேட்டியளித்த புண்ணியவான் என்பது யாருக்கும் ஞாபகம் உண்டோ?

    Reply
  • palli
    palli

    முருகா முருகா இது எப்போது நடந்தது? ஏன் இப்போது நினைவு வந்தது. ஆக உங்களுக்கு அரசை காப்பாத்தவேண்டிய பொறுப்பு கிடைத்துள்ளது. அது சரி இந்த விதவிதமான அறிவையெல்லாம் எங்குதான் வட்டிக்கு எடுத்து வந்து எழுதுவியளோ.

    Reply
  • vanavan
    vanavan

    வித்தியாதரன் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல. மாறாக கண்டிக்கப்பட வேண்டியவர். காரணம் புலிகளின் படுகொலைகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இரு ஊடகங்களின் பொறுப்பாளி. புதுக்குடியிருப்பில் நின்று கொண்டு எந்த ஊடகமும் சரி புலிகளுக்கு எதிராக குரல் எழுப்ப முடியுமா?… ஆனால் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாக எழுதி வருகிறது உதயன், மற்றும் சுடரொளி பத்திரிகைகள். ஆகவே அரசாங்கள் வழங்கிய ஊடக சுதந்திரத்தை வித்தியாதரன் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்.

    Reply
  • santhanam
    santhanam

    இது வித்தி பற்றிய பிழையான தகவல் அவரிற்கும் சீட்டு கம்பனிக்கும் சம்பந்தம் இல்லை இன்னோரு தரம் போய் திருப்பி வாசிக்கவும் முருகன்.

    Reply
  • palli
    palli

    வித்தி நல்லவரா கெட்டவரா என்பதை பின்பு பேசுவோம். இப்போது அவர் வெளியே வர அஸ்ராப் உதவுவாரா? மாட்டாரா?

    உனது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் உனது கருத்தைநீ சொல்லும் உரிமை போராட்டத்தில் எனது ஈரலையும் கொடுப்பேன் என்பதை பல அழிவு ஜீவிகள் எழுத பல்லி படித்தது. அதுவும் இதே தேசத்தில். வேலைக்கு போனால்தானே பணத்தின் அருமை தெரிய.

    Reply
  • accu
    accu

    சீட்டுக் கொம்பனி நடத்தி காசு சுத்தியது வித்தியாதரனின் மச்சான் சரவணபவான் அவர்தான் உதயன்,சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளர், மகிந்தாவுடனும் உறவு வைத்திருப்பவர் மற்றும் வித்தியின் கைதுக்கு அரசு கூறும் காரணம் புலிகளின் விமானத் தாக்குதலோடு தொடர்பு இருப்பதாக. மேலும் புலியுடன் உறவு வைத்திருந்த வித்தி இப்போ புலியின் பின்னடைவுகளுக்குப் பின் தனது நண்பர் வட்டாரத்தில் புலிக்கு எதிராகக் கதைத்ததாகவும் இதை அறிந்த புலிகள் அவரை வேண்டுமென்றே தமது விமானத் தாக்குதலோடு தொடர்புள்ள்து போல் தடயங்களை ஏற்ப்படுத்தியதாகவும் ஒரு செய்தி கசிகிறது. எது உண்மையோ அவனுக்குத்தான் வெளிச்சம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    நண்பர் திரு வித்தியாதரன் கடத்தப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கையில் அது பற்றிய தகவல் எனக்கும் கிடைத்தது. நான் உடனடியாக அது பற்றி அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்தேன். அன்னாரது உடனடி பணிப்புரையின் பேரில் கொழும்புக்கு வெளியே செல்லும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் திரு வித்தியாதரனை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் படி பொலிஸ் மா அதிபருக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.அப்படி இருக்கையில் தான் அவர் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் விடயம் தெரிய வந்தது.இப்போது கூட தினமும் அந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். எனவே விசாரணைகளை அடுத்து தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர் மீது குற்றம் சுமத்துவதற்கான ஆதாரம் வலுவற்றதாக இருந்தால் அடுத்த கணமே விடுவிக்கப்படுவார். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.அது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மிகவும் கரிசனையுடன் உள்ளார்.

    Reply
  • santhanam
    santhanam

    அக்கு எழுதிய விடயத்தையும் நானும் அரசல் புரசலாக கேள்விபட்டேன் இதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பது தெரியாது ஆனால் இப்படி ஆனாவர்களை அப்படிதாமாட்டுவது இது சரியல்ல

    Reply
  • palli
    palli

    ஆக புலியின் மாட்டலை புரியாத ஒரு ஊடகவியாளரும். புலியின் மாட்டலை நம்பி நண்பனையே(அப்படிதான் கதைக்கினம்) வெள்ளை வானை விட்டு தூக்கி பின்பு அரச வாகனத்தில் மாலை மரியாதையுடன் சிறை வைக்கும் ஜனாதிபதியும் (பார்த்திபன் சரிதானே) நமது நாட்டின் பிதா மகனகளென பல்லி சொல்லவில்லை. அக்கு.சந்தானம் சொல்லுகினம். இருவரும் பல்லி காட்டி கொடுத்து கருனாவின் இடத்தை பிடித்து விட்டதாக தப்பாக நினைக்க வேண்டாம். பல்லிக்கு தற்பெருமை பிடிக்காது. பல்லிக்கு மீண்டும் ஒரு முறை சவுக்கடி உறுதி. ஆனாலும் பல்லி ஊரதான் செய்யும்.

    Reply
  • accu
    accu

    பல்லி வித்தியாதரனுக்கு மகிந்தவுடன் மட்டுமல்ல பிரபாகரன், கருணா,உட்பட பலருடன் உறவு உண்டு. இங்கே நான் உறவு என்பது நட்பு அல்ல. அது அவரின் தொழில் நிமித்தம் அதுவும் இலங்கை போன்ற நாட்டில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலயில் கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர் இப்படியாக எல்லோரையும் சமாளித்தால் மட்டுமே முடியும். எமது நாட்டில் எவனை எவன் எப்போ போட்டுத்தள்ளுவான் என்று தெரியாத நிலையில் எல்லோரையும் எல்லோரும் சந்தேகமாய் பார்க்கிறார்கள். இங்கே எதிரி நண்பனாவதும் நண்பன் துரோகியாவதும் சாதாரண நடைமுறை. இந்த நிலையில் வித்தி போன்ற ஒருவரை சந்தேகம் கொள்வதோ அல்லது மாட்டிவிடுவதொ இலகுவாக நடக்கக்கூடியதே.

    பல்லி நான் புலிகளை கடுமையாக விமர்சிப்பதால் என்னை மகிந்தாவின் விசுவாசி என எண்ணுகிறீர்கள். அப்படியில்லை அதேநேரம் அவரை கெட்டவன்,கயவன் என்று கூறவும் பலமான காரணங்களை நான் காணவில்லை. அதே போல் புலிகளை ஆதரிப்பதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ எந்தவித சிறிய காரணங்களையும் என்னால் காணமுடியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் புலிகளின் காலத்தை ராஜீவுக்கு முந்திய மற்றும் ராஜீவுக்கு பிந்திய என இரண்டாகப் பார்க்கிறேன். ராஜீவ் கொலை என்பது பிரபாகரன் செய்த ஒரு சூதாட்டம் போன்றதொன்று. அந்த சூதாட்டம் இன்று தோல்வியில் முடிகிறது.பிரபாகரன் பகடைகாயாக வைத்தது ஒட்டுமொத்த தமிழரின் வாழ்வு.

    பிரபாகரனும் பொட்டம்மானும் கொல்லப்பட்டாலோ அன்றி சரணடந்தாலே மட்டும்தான் எமக்கு எந்தவித தீர்வையும் இந்தியா தரும். புலிகள் இவ்வளவு காலமும் நடந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உண்மையான மனசுத்தியுடன் தமிழர்க்கு ஒரு தீர்வு வேண்டுமென்ற எண்ணத்தில் பங்குபற்றவில்லை. தனிநாடு தவிர்ந்த எந்தத் தீர்வும் பிரபாகரனை இந்தியாவின் கையில் சேர்த்துவிடும். இது பிரபாகரனுக்கு நன்கு தெரியும். தனிநாடும் கிடைக்காது என்பதையும் பிரபாகரன் ஓரளவில் உணர்ந்திருப்பார். எனவே இந்தப் பிரச்சனையை போர் சமாதானமென இழுப்பதை தவிர வேறு எந்த வழியும் அவருக்கு இருக்கவில்லை. அந்த இழுவையின் கடைசிக்கட்டமே இன்றைய இந்த அவலம்.

    மகிந்தாவை பொறுத்தவரை இந்தியாவின் துணை அவருக்கு பெரிய பலம். யாரையும் பொருட்படுத்தத் தேவையில்லை. மற்ற நாடுகளும் அவருக்கு உதவி செய்கின்றனவே ஒழிய எவரும் கண்டிக்கவில்லை. இந்தப்போர் தொடங்கிய நேரத்தில் மகிந்தாவின் அமைச்சர் ஒருவர் கூறியது “பிரபாகரனுடன் இலங்கையின் பல ஜனாதிபதிகள் பேசினார்கள்,பலநாட்டு இராஜதந்திரிகள் பேசினார்கள்,ராஜீவ்காந்தி பேசினார், அவருக்கு எதுவும் புரியவில்லை எனவே நாம் இனி அவருடன் அவரின் பாசையில் பேசப்போகிறோம் நிச்சயம் அவருக்குப் புரியும்” அதைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். இரண்டு மாதத்துக்கு முன் இலங்கையில் இருந்து வந்த ஒருவரை சந்தித்தேன். வெள்ளவத்தையில் 15 வருடம் கடை நடத்தியவர். அவர் கூறினார் கொழும்பில் நடந்த கடத்தல்களில் பல காசுக்காக ஆமி,பொலிஸ்,சிங்களவர்,தமிழர் என பலரின் பங்கு உண்டு. ஆனால் புலிகளையும் அவர்களுக்கு துணைபுரிபவர்களையும் மட்டும் இலக்காகக்கொண்டு வெள்ளைவானில் நடத்தப்பட்ட கடத்தல் மிகத்துல்லியமாக நடந்ததாகவும் இப்படிக் கடத்தப்பட்டவர்கள் அனேகமாக எல்லோரும் கொல்லப்பட்டதாகவும் எஞ்சியவர்கள் கொழும்பை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறினார். இன்று கொழும்பில் குண்டுகள் வெடிக்காததற்க்கு இதுதான் காரணமென நான் நினைக்கிறேன்.இப்படிக் கொல்லப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகளாகவும் இருக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிச் செய்வது எந்தவிதத்திலும் நியாயமாகாது. ஆனால் இந்தநிலையை ஏற்ப்படுத்தியது புலிகளே. இதேபோல் தான் இன்று வன்னியில் நடக்கும் யுத்தத்தில் புலிகளை கொல்வதற்க்காக ஏவப்படும் குண்டுகளுக்கு அப்பாவிகளும் பலியாகிறார்கள். இது பிழையாக இருந்தாலும் இந்நிலைக்கும் புலிகளே காரணம்.

    நான் முதலில் கூறியது போல் தனிநாடு தவிர்ந்த எந்தத் தீர்வுக்கும் பிரபாகரன்[புலிகளல்ல] வரப்போவதில்லை. பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லவோ,தப்பியோடவோ,அன்றி சரணடையவோ மட்டும் இந்திய மற்றும் இலங்கை அரசுக்கள் இந்தப் போரை நிறுத்தப்போவதில்லை. மக்களை காப்பாற்ற உள்ள ஒரேவழி வேறு நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களின் உதவியுடன் போர்ப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி அதே நாடுகள் மற்றும் அமைப்புக்களின் உதவியுடன் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே.

    எல்லாம் துரிதமாக நடந்து எம் மக்களுக்கு மகிந்த ஒரு நல்ல தீர்வையும் தந்தால் அவரை பிதாமகனாக ஏற்பதிலும் எனக்குத் தயக்கம் இல்லை. அதேபோல் தனது இருப்பை முன்னிலைப் படுத்தாது உண்மைநிலையை உணர்ந்து மக்களின் பாதுகப்புக்காக ஆயுதங்களை போட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் பிரபாகரனை பணிந்து வணங்குவதிலும் எனக்கு வெட்கம் இல்லை.நன்றி.

    Reply