இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பல்வேரு விதங்களில் போராடி வருகின்றன. திமுக மற்றும் பாமக தலைமையிலான பல்வேறு கட்சிகள் தனித் தனியாக அமைப்புகளைத் தொடங்கி பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.
ஆனால் அதிமுக பெரிய அளவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக போராட்டம் எதையும் நடத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
palli
அம்மா இது ஒருநல்ல சந்தர்ப்பம். கருனானிதியை வீழ்த்த நீங்க எந்த ஆயுதமும் சரிவராது. இந்த ஈழ பிரச்சனையை உங்கள் பாணியில் சடாரென முடித்தால் முதல் போடாத லாபம் கிடைக்கும். அத்தோடு ஈழ மக்களுக்கும் ஏதாவது வழி பிறக்கும். எதுக்கும் முதல் சோவிடம் சொல்லி ஒரு அறிக்கை விட சொல்லுங்கோ. அந்த மனுசன் உங்களுக்கு எதிராய் ஏதாவது சொல்லி விட போகிறார். அதுசரி மத்தியில் நிங்கள் யாருடன் கூட்டு.