தீவிர வாதத்துக்கு எதிராக தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார். மங்களூரில் பள்ளி மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார். அப்போது “நானும் எனது இந்தியாவும்” என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :
தீவிரவாதம் நமது நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை வேருடன் அழிக்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அளவில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தில் சில இளைஞர்கள் ஈடுபட வறுமை, வேலையின்மையும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் அரசியல் நோக்கத்தோடு தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதத்துக்கு எதிராக தனிப்படையை ஏற்படுத்த வேண்டும். எங்கு தீவிரவாதம் தலைதூக்கினாலும் அங்கு ஐ.நா. சபை அனுப்பிவைக்கப்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதற்கு இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் கலாம்.
palli
//தீவிரவாதத்தில் சில இளைஞர்கள் ஈடுபட வறுமை, வேலையின்மையும் ஒரு காரணமாகும்//
புரியுதில்லை அதுக்கான திட்டங்களை போடுங்களேன். அதை விட்டு ராணுவத்துக்கு கொட்டி கொட்டி ஏன் நாடுகளை வறுமையின் எல்லைக்கு கொண்டுபோறியள். இதுதானையா ஈழ பிரச்சனையும். வறுமை காரணமாக புலிக்கு சிறுவர்கள் போகிறார்கள் என்பதை ஏன்தான் எமது இனமும் அரசும் பார்க்கவில்லை.
vanthiyadevan
இதுதானையா ஈழ பிரச்சனையும். வறுமை காரணமாக புலிக்கு சிறுவர்கள் போகிறார்கள்
mr. palli you are 100% wrong
children being brainwashed by ltte that all sinhalese are enemies
பார்த்திபன்
ஆம் வந்தியத்தேவன் சொல்வது போல் பல்லி சொல்வது தவறு. ஆனால் ஆரம்பத்தில் இலங்கை அரசாலும் இராணுவத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இயக்கங்களில் தாமாக முன் வந்து சேர்ந்தார்கள். ஆனால் தற்போதய நிலையில் பலரும் பலாத்தகாரமாகத் தான் சேர்க்கப்படுகின்றார்கள் என்பது பல்லிக்கும் தெரியும். ஆனால் பல்லியின் கூற்று வேண்டுமானால் இராணுவத்தில் சேரும் சிங்கள இளைஞருக்குப் பொருந்தும். காரணம் பல ஏழைச் சிங்கள இளைஞர்கள் பணத்திற்காகத் தான் இராணுவத்தில் சேருகின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை.
palli
பார்த்திபன் மிக தவறான கருத்து. மிக குறைந்த அளவிலேயே பாதிப்புள்ளாகி அன்று இயக்கத்தில் சேர்ந்தார்கள் என உறுதியாக சொல்லமுடியும். ஏன் எந்த இயக்க தலமை கூட பாதிப்பால் இயக்கம் தொடங்கவில்லை. ஒருசிலர் உனர்வுடன் செயல்பட்டாலும் பலர் தம்மை பாதுகாக்கவே இயக்கத்தில் சேர்ந்தனர். இயக்கத்தை பிரித்தனர். அதேபோல் வறுமையால் புலி அமைப்புக்கு போகவில்லையென்பதும் மிக தவறான கருத்து. வலோக்காரமா சிறுவர்களை புலி கொண்டு போகவில்லை என பல்லி சொல்லவில்லை. ஆனால் வறுமைதான் மிக மோசமாக சேர்த்தது. இது கிழக்குக்கு மிக பொருந்தும். எல்லாத்துக்கும் மேலாக அன்று இயக்கத்துக்கு பலர் இயக்க போலிபிரசாரத்தால் போனதை யாரும் மறக்க முடியாது.