இழப்பதற்கு நேரமில்லை. உடனடியாகச் செயற்பட வேண்டும் – There is no time to lose : த ஜெயபாலன்

John_Holmes_UNஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காது போயின. நேற்று (பெப்ரவரி 27)ல் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு Under-Secretary-General for Humanitarian Affairs ஜோன் ஹொல்ம்ஸ் தனது இலங்கை விஜயம் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தினார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த அழுத்தங்கள் வழங்கப்பட்ட போதும் பாதுகாப்பு கவுன்சில், சிறு நிலப்பரப்பிற்குள் சிக்குண்டுள்ள மக்களின் பாதுகாப்புப் பற்றியே கவலை கொண்டுள்ளதாக தங்கள் கரிசனையை வெளிப்படுத்திக் கொண்டதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். பாதுகாப்பு கவுன்சிலின் மூடிய அறைக்குள் இடம்பெற்ற ஜோன் ஹொல்ம்ஸ் உடனான சந்திப்பு இலங்கை அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து உள்ளது. http://www.un.org/apps/news/story.asp?NewsID=30046&Cr=sri+lanka&Cr1=

அங்கு ‘There is no time to lose.’ என்று ஜோன் ஹொல்ம்ஸ் சரியாகவே சுட்டிக்காட்டிய போதும் யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் அவலத்தை மட்டுப்படுத்த உருப்படியான ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த பாதுகாப்பு கவுன்சிலின் சந்திப்பில் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை. ரஸ்யப் பிரதிநிதி ‘இது ஒரு தடவையே கேட்கப்படும்’ என்று தெரிவித்து உள்ளார். பிரித்தானியா அழுத்தங்கள் எதனையும் வழங்கவில்லை. இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாதத் தலைமை ஏற்றுள்ள ஜப்பானியத் தூதுவர் யுக்கியோ ரக்காசு பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகக் கூறி உள்ளார்.

இதற்கிடையே இன்று (பெப்ரவரி 28) இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி இலங்கை அரசு எல்ரிரிஈ இன் யுத்த நிறுத்த அழைப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிடம் இருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் பலமுடையதா அல்லது சர்வதேச கண்டனங்களுக்காக விடுக்கப்பட்ட கண்துடைப்பு வேண்டுகோளா என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் தெரியவரலாம்.

இந்த அரசியல் சதுரங்கத்தினிடையே வன்னியில் நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசம் 14 சதுர கிலோ மீற்றர்களாக குறுகியுள்ளது. இந்த 14 சதுர கி.மீ பரப்பளவில் 300 000 மக்கள் உள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். 200 000 மக்கள் இங்கு சிக்குண்டு உள்ளதாக யூஎன் மற்றும் சர்வதேச அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 70 000 மக்களே அங்கு சிக்குண்டு உள்ளதாக இலங்கை இந்திய அரசுகள் தெரிவிக்கின்றன.

யுத்தத்திற்கு முன்னான வன்னி மக்களின் சனத்தொகைப் பரம்பலுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பும் அதன் சனத்தொகைப் பரம்பலும் வருமாறு. மன்னார் – 100 000 (1 996 சதுர கி.மீ) கிளிநொச்சி – 142 000 (1 279 சதுர கி.மீ) முல்லைத்தீவு – 145 000 (2 617 சதுர கி.மீ) வவுனியா – 164 000 (1 967 சதுர கி.மீ). மொத்த வன்னி நிலப்பரப்பு 7 859 சதுர கி.மீ. வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551 000. (மூலம்: Department of Census and Statistics, Sri Lanka (web) – 2006).

இன்று 2 617 சதுர கி.மீ பரப்பளவுடைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வெறும் 14 சதுர கி.மீ பரப்பளவிலேயே கிளிநொச்சி (சனத்தொகை 142 000) – முல்லைத்தீவு (சனத்தொகை 145 000) மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இந்த மரணப் பொறிக்குள் சிக்குண்ட மக்களின் அவலம்  தாங்கொண்ணாதது.

”53 வயதானவருடைய குடும்பம் ஒரு நாள் முழுவதையும் சாப்பாடு தண்ணீர் இன்றி பங்கரில் கழித்தது. பசியின் கொடுமையிலும் தாகத்தின் தவிப்பிலும் செல்கள் வந்துவிழுவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பங்கரை விட்டு வெளியே வந்து சாப்பாட்டைத் தேடிய போது 15 பேருள்ள குடும்பத்தில் மூவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  அவருடைய மகள் மோசமான பாயத்திற்கு உள்ளாகி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய சில உறவுகள் வன்னியிலேயே தங்க வேண்டியதாகி விட்டது. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் இந்த வயதானவருக்குத் தெரியாது. இது ஒரு உதாரணமே. பலரும் இவ்வாறான சொந்த சோகக் கதைகளுடனேயே இருக்கின்றனர்.”
Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) / Feb 26, 2009 : http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3440&cat=field-news&ref=home-center

”மருத்தவமனையில் சிறுவர்கள் துணையின்றி உள்ளனர். அவர்கள் வீரிட்டு அம்மாவைத் தேடி அழுகின்றனர். வயதானவர்களும் துணையின்றி உள்ளனர். சிலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு அவயவங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. அல்லது மிகவும் மோசமாக கூர்மையாக வெட்டப்பட்டு உள்ளது. யுத்த பிராந்தியத்தில் இருந்து தப்பி தஞ்சம் கேட்க முற்படும் 10 பேரில் ஆறு பேர் கொல்லப்படுகின்றனர்.”
Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) / Feb 13, 2009 : http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3403&cat=field-news&ref=related-sidebar

பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடந்த இரு வாரங்களில் யுத்தப் பகுதியில் இருந்து வந்த காயப்பட்ட மக்களுக்கு 300 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளதாகவும் இது உருகும் பனிப்பாறையின் ஒரு சிறு பகுதியே எனவும் தெரிவிக்கின்றனர். ஏனைய மனிதாபிமான அமைப்புகள் போன்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரும் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் யுத்த பிராந்தியத்தின் எல்லையாக உள்ள வவுனியாவில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அண்மைய வாரங்களில் 35000 பேர் வரை யுத்தப் பகுதிகளில் இருந்து தப்பித்து வந்துள்ளனர். இவர்களிலும் நோயாளிகள் காயப்பட்டோர் அடங்குகின்றனர். மேலும் 2000 நோயாளிகள் காயப்பட்டோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இந்தக் காயங்கள் சில வாரங்களாக சிகிச்சையளிக்கப்படாததால் தொற்று ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியும் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் அவயவங்களைத் துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யுத்த பிராந்தியத்தின் அயலில் உள்ள திருகோணமலை வவுனியா மருத்துவமனைகள் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு இருப்பதுடன் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறிக் கொண்டிருப்பதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

இவ்வாறு மனித அவலங்கள் மிக மோசமாகிக் கொண்டு உள்ளது. செல் வீச்சில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சிதறிய உடலை பதினாறுவயதுப் பையன் பையினுள் அள்ளிச் சென்றதாகவும் உடல்கள் வீதிகளில் அனாதரவாக கிடப்பதாகவும் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசு சர்வதேச செய்தியாளர்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் யுத்தப் பகுதிக்குள் அனுமதிக்காத போதும் தகவல் தொடர்பின் வளர்ச்சியும் மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சியும் ஓரளவுக்காவது தகவல்களை வெளியே கொண்டு வருகின்றன. இந்த அவலங்களை புலிகளின் சார்பு ஊடகங்கள் வெளிக் கொணருவதில் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்த போதும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்கின்ற உண்மை ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வரப்பட்டதில் அந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

வன்னி யுத்தமானது மனித நாகரிகத்தின் அனைத்து பண்புகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுள்ளது. நவீன ஆயுதங்களுடன் நடத்தப்படும் காட்டுமிராண்டித் தனமான யுத்தத்தில் அவலங்கள் அரசியலாக்கப்படுகிறது. தமிழ் மக்களின் அவலத்தின் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொள்ளும் இராணுவ வெற்றி சிங்கள மக்களின் வெற்றியாக கற்பிதப்படுத்தப்படுகிறது. தனது குழந்தைக்கு பால் மா வாங்கப் பணமில்லாத ஏழைத் தொழிலாளிக்கு ஜனாதிபதி ரம்போவாகவும் பிரபாகரனை வில்லனாக்கியும் பிலிம் காட்டுகிறார்.

‘உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை துரத்தினனாங்கள்’ ‘மோட்டுச் சிங்களவனுக்கு பாடம் படிப்பிக்கிறோம்’ என்று மாவிலாற்றில் ஆரம்பித்த புலிகளின் இராணுவ அணுகுமுறை அவர்களுக்கே வினையாக வந்த நிற்கிறது. பொங்கு தமிழ் வைத்து யுத்தத்திற்கு அறைகூவிய புலம்பெயர் தொப்புள் கொடிகள் இன்றைக்கு யுத்தத்தை நிறுத்தச் சொல்லி பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் சொல்லி ஆயிரம் பத்தாயிரம் நூறாயிரம் என்று திரண்டு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவில்லை என புலம்புகின்றனர்.

மறுதலையாக யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள். வலியோடு வலியாக புலிகளை அழித்துவிட்டு மற்றையவை பற்றிச் சிந்திப்போம் என்று புலியெதிர்ப்பு ஜனநாயகம் புலம்புகிறது. நண்பர் சேனன் இதனை சரியாகவே தனது கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளார். வன்னியில் எஞ்சியவர்கள் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்றும் களத்தில் போராடுபவர்களும், தலித்துக்கள் என்றும் மாநாடுகளில் ஓங்கி ஒலித்த குரல்களை இப்போது கேட்க முடியவில்லை. அவர்களும் புலி எதிர்பு ஜனநாயகத்தினுள் மூழ்கிவிட்டனர்.

சமூக ரிதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இன்று வன்னியில் சிக்குண்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களே. வே பிரபாகரன் என்ற அரசியல் தலைமையின் முடிவுகளுக்காக வன்னி மக்களையும் போராளிகளையும் பலி எடுக்கும் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அதற்காக பெப்ரவரி 27 மற்றும் 13ம் திகதிகளில் யுத்தத்தை நிறுத்தி நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிகையின் அடிப்படையில் Forum for Peace, Democracy and Permanent Political Solution என்ற அமைப்பு பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னால் கண்டணப் போராட்டங்களை நடத்தியது. இன்னும் நடத்த உள்ளது.

இதனை மாற்றுக் கருத்துத் தளத்தில் உள்ளவர்களே மேற்கொண்டும் இருந்தனர். ஆனாலும் நடைபெற்ற போராட்டங்களில் ‘மாற்றுக் கருத்து’ப் புலியெதிர்ப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மீண்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்று புலியெதிர்ப்பு அணியும் மக்களை வெளியேற்றச் சொல்வதால் புலிகளை அழிக்க முற்படுகிறீர்கள் என்று புலி அதரவு அணியும் இந்தக் கண்டணப் போராட்டத்தை எதிர்த்ததாக ஏற்பாட்டாளர் மனவருத்தத்துடன் தெரிவித்தார். ‘இன்றைக்கு உள்ள நிலையிலும் இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றால் இவர்கள் என்ன ஜனநாயகம் பேசுகின்றனர்’ என்றும் அவர் நொந்துகொண்டார்.

சர்வதேச நாட்டு அரசுகள் முதல் சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவு – ஜனநாயக அமைப்புகள் வரை தங்களுடைய அரசியல் பின்னணி மற்றும் அரசியல் நலனில் நின்றே வன்னி மக்களின் அவலத்தை பார்க்கின்றனர். இவர்களுக்கு பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை. அதனால் புலத்தில் உள்ள புலி அதரவாளர்கள் தமிழ் மானம் பற்றியும் தன் மானம் பற்றியும் தமிழீழம் பற்றியும் ‘நெஞ்சுரத்துடன்’ பேசுவார்கள்.

அதேபோல் புலத்தில் உள்ள புலிஎதிர்ப்பாளர்களும் இந்த அரசினை நம்ப முடியாது என்று தெரிந்தாலும் யுத்தத்தின் அவசியத்தையும் புலிகள் அழிக்கப்படுவதன் அவசியத்தையும் மிகவும் ‘உறுதியுடனும் தெளிவாகவும்’ பேசுவார்கள். ஏனெனில் இவர்களுக்கும் பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை.

வன்னியில் நடப்பது ஒன்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான யுத்தம் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தமல்ல. சரிகளையும் தவறுகளையும் வேறு பிரித்தது ஆராய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான கூர்மையான அரசியல் முரண்பாடு உடையவர்களுக்கிடையே நடைபெறுகின்ற ஈவிரக்கமற்ற யுத்தம். இந்த யுத்தத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்களின் பெயரிலேயே நடைபெறுகின்றது. அந்த மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

நேற்று (பெப்ரவரி 27) பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை நிலைமை பற்றி எடுத்தக் கூறிய ஜோன் ஹொல்ம்ஸ், ‘எல்ரிரிஈ வன்னி மக்களின் நடமாட்டத்தை இப்பவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சிறு சிறு குழுக்களாக வெளியேறுபவர்கள் மீதும் எல்ரிரிஈ துப்பாக்கிப் பிரயோகம் செய்து உள்ளதாகவும்’ அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மென்போக்கை கொண்டிருந்த ஜோன் ஹொல்ம்ஸ் பெருமளவான பொது மக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கத்தின் தாக்குதல்கள் காரணமாக இருந்தது பற்றி அழுத்தமாக எதனையும் குறிப்பிடவில்லை. பொது மக்களின் உயிரிழப்புகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் வழங்கவில்லை.

‘பொது மக்கள் பாதுகாப்பாக அப்பிரதேசங்களில் இருந்த வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும்’ என்ற மென்மையான வேண்டுகோளே விடுக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு சண்டையை சற்று நிறுத்தி வைக்கலாம் அல்லது பாதுகாப்பாக மக்கள் வெளியேறுவதற்கான வழி ஒன்றை ஏற்படுத்தலாம் என்றளவில் சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

சர்வதேசமே அவதானித்துக் கொண்டிருக்க பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், புலியழிப்பு யுத்தம் என்ற பெயர்களில் தமிழ் மக்கள் வகைதொயின்றிக் கொல்லப்படுகின்றனர். இக்கொலைகள் பற்றி பல்வேறு தரப்பினரும் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினாலும் அந்த மக்களின் நலனின் அடிப்படையில் இருந்து குரல் கொடுப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே உள்ளனர்.

புலம்பெயர்ந்த புலி அதரவாளர்கள் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோருகின்ற அதேநேரம் வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கும்படி புலிகளுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை. வெளியெறுகின்ற மக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்காதது மட்டுமல்ல, அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே இருட்டடிப்புச் செய்ய முற்படுகின்றனர். இலங்கை அரசினால் கொல்லப்பட்டவர்களிலும் பார்க்க புலிகளால் கொல்லப்பட்டவர்கள் மிக மிகச் சிலரே. ஆயினும் எந்த மக்களுக்காகப் போராடுவதாகக் கூறினார்களோ அந்த மக்கள் மீதே ஒடுக்குமுறையையும் துப்பாக்கியையும் பயன்படுத்துவது அடிப்படைத் தவறு. புலிகளுடைய புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடைய அரசியல் நலன்களுக்கு அப்பால் மரணப் பொறிக்குள் உள்ள மக்களை காப்பாற்றுவதனை இலக்காகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட வேண்டும்.

பாதுகாப்பு கவுன்சிலில் ஜோன் ஹொல்ம்ஸ் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கையில் ‘எல்ரிரிஈ யின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள், மக்களை வெளியேற அனுமதிக்கும்படி எல்ரிரிஈ க்கு அழுத்தம் கொடுக்கும்படி’ கேட்டுக்கொண்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இழப்பதற்கு நேரமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள ‘ஜனநாயகவாதிகள்’, ‘மாற்றுக் கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’, ‘முற்போக்காளர்கள்’ அனைவரும் இன்று சர்வதேச ஏகாதிபத்தியங்களின் பாதுகாப்புச் சபை எடுக்கும் அதே நிலைப்பாட்டுக்கே வருகின்றனர். இன்றைய யுத்தத்திற்கு மௌனமாக ஆதரவு வழங்குவதன் மூலம் வன்னி மக்களின் படுகொலைகளையும் மௌனமாக அங்கிகரிக்கின்றனர்.
 
இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மிகக் குறைந்த இழப்புகளுடன் மேற்கொண்டிருக்க முடியும். இன்றும் இலங்கை அரசினால் வன்னியில் நடைபெறும் மனித அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இந்திய அரசும் சர்வதேசமும் கூட இலங்கையை அதற்கு வற்புறுத்தி இருக்க முடியும். ஆனால் இலங்கை அரசு தனது வெற்றியை நிலைநாட்டுவதில் காட்டும் அக்கறையை தமிழ் மக்களின் உயிர்கள் பற்றிக் கவலைப்படவில்லை என்பதே யதார்த்தம். சர்வதேசத்தைப் பொறுத்தவரை இலங்கை ஒரு கேந்திர முக்கியத்தவமான புவியியல் மையத்தில் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பிராந்திய வல்லரசான தனக்கு சவால் விடப்பட்டதற்கு பழிவாங்குகிறது மேலும் இந்தியாவுடைய நலன் இலங்கை அரசு சார்ந்து இருப்பதிலேயே தங்கி உள்ளது. இன்று புலிகளின் (வே பிரபாகரனின்) அரசியல் வறுமைக்கும் அரசியல் தவறுகளுக்கும் குறுகிய இராணுவக் கண்ணோட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் போராளிகளும் மிகப் பெரும் விலையைச் செலுத்துகின்றனர்.

ஆனால் இலங்கை அரசையும் சர்வதேச சமூகத்தையும் பொறுத்தவரை புலிகள் பயங்கரவாதிகள் என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்துள்ளனர். அப்படியானால் சட்ட ரீதியான அரசுதான் அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பையும் உடையது. அதனைத் தட்டிக்கழிப்பதன் மூலம் இலங்கை அரசும் புலி எதிர்ப்பு அணியும் மறுதலையாக புலிகளைப் பலப்படுத்துகின்றனர். இந்த நச்சுச் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை அண்மைக் காலத்தில் தமிழ் மக்களது அவலம் தொடர்கதையாகும் அச்சம் உள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

56 Comments

  • murugan
    murugan

    இன்னும் இரண்டு விடயங்கள் மீதமிருக்கின்றன. ஒன்று தமிழர்களுக்கு வெளிநாட்டு படைகளைக் கொண்டு அடிக்க வைப்பது. இரண்டு ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமைக்கு தமிழ் மக்களை கொண்டு செல்வது. இதை செய்விக்கப் போவது வேறு யாருமல்ல புலித் தலைமையும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களும் தான். வீணாக கவலைப்படாமல் மனதை தேற்றிக் கொள்ளவும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கட்டுரையாளர் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பது போலவே கட்டுரையை தந்துள்ளார். அரசு மக்களைக் கொல்லுகின்றதென்றால் அதைத் தடுக்க வேண்டிய புலிகளும் மக்களைக் கொல்கின்றார்கள் என்றால் அந்த அப்பாவி மக்கள் யாரை நம்புவது. புலிகள் மக்களைக் கேடமாகப் பாவிப்பதாலேயே இந்த இழப்புகள் தொடர்வதை ஏன் மறந்து போனார் கட்டுரையாளர். சரி அரசும் தவறு செய்கின்றது புலிகளும் தவறு செய்கின்றது என்றால் இவர்களிடமிருந்து எப்படி மக்களைக் காப்பாற்றலாம் என்ற தனது அபிப்பிராயத்தை கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கலாமே?? வன்னி மக்களின் அவலங்களை “புலிகளின் சார்பு ஊடகங்கள் வெளிக் கொணருவதில் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்த போதும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்கின்ற உண்மை ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வரப்பட்டதில் அந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு” எனக் குறிப்பிடும் கட்டுரையாளர் இதே ஊடகங்கள் வன்னிப் பெண்கள் ஆயிரக் கணக்கில் கற்பழிக்கப் படுவதாகவும் கருக்கலைப்புச் செய்யப்படுவதாகவும் கிளப்பிவிடும் புரளிகளைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை. இப்படியான செய்திகளினால் அந்தப் பெண்களின் எதிர்காலம் எவ்வளவு மோசமாக பாதிக்கப்படும் என்ற எந்த ஆதங்கமுமின்றி வெறுமனே புலிகளைக் காப்பாற்றவும் வெளிநாட்டுத் தமிழர்களிடம் பணம் பறிக்கவும இப்படித் திட்டமிட்டுச் செய்திகளை மோசமாகப் பரப்புகின்றார்கள். சில நாட்களுக்கு முன் தீபம் தொலைக்காட்சியில் அரச கட்டுப்பாட்டினுள் வந்த மக்களின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அதில் பலரின் பேட்டிகளிடையே ஒரு இளம்பெண் குறிப்பிட்டார் தாம் இப்போது யுத்த பயமும் புலிகளின் கெடுபிடியுமில்லாமல் நிம்மதியாக இருப்பதாகச் சொல்லியவாறே தொடரும் போது உடன் அதனைத் துண்டித்தார்கள். பின் மறுநாள் அதே பேட்டிகள் திரும்பவும் இடம்பெற்ற போது குறிப்பிட்ட அப்பெண்ணின் பேட்டி முற்றாக நீக்கப் பட்டிருந்தது. இதைக் கட்டுரையாளர் உட்பட பலர் கவனித்திருப்பார்கள் என்று நம்புகின்றேன். இப்படிப் புலிசார்பு ஊடகங்கள் செய்வது யாரைக் காப்பாற்ற என்பதையும் கட்டுரையாளர் குறிப்பிடலாமே.

    இன்று புலியெதிப்பாளர்கள் கூட வன்னியில் புலிகளிடம் மாட்டுப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டுமென்றே கோரிக்கைகள் வைக்கின்றார்கள். இந்தியா, அமெரிக்கா மற்றும் இணைத்தலைமை நாடுகள் இணைந்து வன்னியில் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக செய்திகள் வந்த போது இவர்கள் எல்லோரும் அதை ஆதரித்தார்கள். ஆனால் எந்த மக்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று இன்று உலகம் சுற்றும் புலிகளின் ஏஜண்டுகளாகச் செயல்ப்படும் கூத்தமைப்பினர் சிலர் தான் அந்த மக்கள் காப்பாற்றப் படுவதை எதிர்க்கின்றனர். இதன் நோக்கம் என்ன?? எனவே இன்று மக்கள் அழிவை வைத்து தமது பிழைப்புகளை நடாத்திக் கொண்டிருப்பவர்கள் புலிகளும் அவையின் ஆதரவாளர்களுமே என்பதே உண்மை.

    Reply
  • Thambiah Sabarutnam
    Thambiah Sabarutnam

    Racist policies are on the wane as in today’s USA with Barak Obama being elected as the President. India has risen over insular politics having appointed Muslims as presidents. Today’s Prime Minister is minority Sikh. Remember Tamil speaking Sri Lankan Kumar Ponnampalam made a bid for the presidency. Soon the day will come when Sri Lanka will have a President from among the Tamil speaking Sri Lankans. Minorities should remember that nonviolence is power. Martin Luther King was very clear in recognizing that the minorities could never win their struggle for equality using violence. Violence would only drive the racial divide further and leave bitterness in its wake that would be extremely difficult to remove from the nation’s psyche. Martin Luther King chose to lead his people through non violence as the modus operandi of their struggle for equality. Though African Americans were challenged with State violence to contain their peaceful revolt through of marches etc., the African Americans were trained under Martin Luther King’s leadership to not retaliate, and even at the point that Martin Luther King was assassinated, African American leaders and the people did not abandon his message.
    The Tamil speaking Sri Lankans have political parties to identify themselves and maintain their separateness. In USA, the African Americans belong to the both mainstream political parties, the Republicans and the Democrats, and identified themselves as part of the mainstream. Barack Obama could never have been elected as a President if he belonged to a political party that was identified with African Americans alone. National acceptance can only happen through belonging to the mainstream parties and can never be achieved by members of the religious parties or the linguistic parties.

    Reply
  • accu
    accu

    ஜெயபாலன் உங்கள் ஆக்கம் இன்றைய நடைமுறையை அப்படியே எடுத்து வந்துள்ளது. வன்னியில் இன்று மனித அவலத்தின் உச்சம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஒரு கணமும் தாமதிக்காமல் இது தடுக்கப்படவேண்டும். இதற்க்கான வழிமுறைகள் என்ன என்பதை உங்கள் ஆக்கத்தில் என்னால் காணமுடியவில்லை. ஆக இதுவும் வீணாகிப் போகிறது. யுத்தநிறுத்தம்தான் இதற்க்கு ஒரே வழி. மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அதை யாரிடம்,எப்படி,யார்மூலம், யாரக எம்மை காட்டிக்கொண்டு கேட்பது? இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஊர்வலங்கள்,கவனயீர்ப்புக்கள் எல்லாமே புலி ஆதரவை வெளிப்படுத்தியே நடந்துகொண்டிருக்கிறது. புதினம் இணையத்தை திறந்தால் தெரியும். எங்கும் புலிக்கொடிகள். புலி செய்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை உலக நாடுகளின் மனிதாபிமான அமைப்புக்கள்,மற்றும் பல நாடுகள் வெளிப்படையாக சுட்டிக்காட்டுகின்றன. நாமோ வெறும் இணையங்களில் மட்டும் குசு குசுக்குறோம். எங்காவது ஒரு நிகழ்வில் புலியை எதிர்த்து ஒரு சுலோகத்தையோ,ஒரு கண்டனக் குரலையோ நாம் காணவோ,கேட்கவோ முடிகிறதா? இப்படியாக புலி முகத்துடன் புலம்பெயர் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை இலங்கை,இந்திய,மற்றும் உலக நாடுகள் கணக்கில் எடுக்குமா? இல்லை புலிகளின் பிழைகளை சுட்டிக்காட்டி யாரவது ஊர்வலம் வைக்க முயன்றால் தமது தோல்விகளால் கொதித்துப்போய் உள்ள புலி ஆதரவாளர்,மற்றும் புலிப் பெயரால் பணம் ஈட்டும் விடுதலை வியாபாரிகள் வன்முறையில் இறங்கமாட்டார்கள் என எண்ணவில்லையா?

    இலங்கை அரசை பொறுத்தமட்டில் மக்கள் அழிகிறார்கள் என்பதற்க்காக மூன்று தசாப்தமாக கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த புலிகளை அழியும் நிலையில் மீண்டும் ஆசுவாசப்படுத்தி எழும்ப சந்தர்ப்பம் கொடுக்கமாட்டார்கள். சிங்கள மக்களும் அதே நிலை. இலங்கை அரசை யுத்தநிறுத்தத்துக்கு வற்ப்புறுத்தும் வல்லமை இந்தியவுக்கு மட்டுமே உண்டு. ஆனால் புலிகளை அழிப்பதில் இலங்கை அரசுக்குள்ள அதே ஆர்வம் இந்தியாவுக்கும் உண்டு. சும்மாவேனும் புலிகளுக்காக குரல் கொடுக்க ஒரு நாடும் இல்லை. அந்தளவு நல்ல பெயர் புலிகளுக்கு. அப்போ எம் மக்களை காப்பாற்ற யாருமே இல்லையா? இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள். புலிகளால் மட்டும்தான் வன்னியில் உள்ள எமது மக்களின் பேரழிவைத் தடுக்கமுடியும். தற்ப்போதைய யதார்த்தத்தை உணர்ந்து எந்த மக்களை பாதுகாப்பதற்க்காக ஆயுதங்களை தூக்கினார்களோ அதே மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதங்களை போடவேண்டும். இந்த உன்னத செயலை புலிகள் செய்யவேண்டும். இதற்க்காக புலம்பெயர் மக்கள் புலிகளை தூண்டவேண்டும். இதை விடுத்து சும்மா யுத்தநிறுத்தம் யுத்தநிறுத்தம் என்பதால் என்ன நடக்கும். அப்படித்தான் ஏதோ வழியில் யுத்தநிறுத்தம் வந்தாலும் அடுத்த படி என்ன? மீண்டும் பேச்சுவார்த்தையென சுவிஸுக்கும் நோர்வேக்கும் பயணங்களா? ஏ ஒன்பது பாதையை திற,கருணாவை பிடித்துத் தா என நடேசனும் சிரிச்சபடி கேட்பதா? எனக்குத் தெரியவில்லை ஜெயபாலன் உங்களுக்கு? நன்றி.

    Reply
  • palli
    palli

    ஜெயபாலன் சில விடயத்தை நாம் மிக தாமதமாகதான் புரிந்து கொள்ள முடிகிறது. சிலர் அரசியல் செய்யும்போதும் பேசும்போதும் மக்களுக்குதான் தமது சேவை அதுக்காகவே தமது உழைப்பு என பேசுவார்கள். அதேபோல் தான் மக்கள்தான் எமது உயிரோட்டம் என புலிகளும். மக்களை காப்பாறுவதே அரசின் இன்றய கடமை (கொடுமை)என மகிந்தா மம்முவதும் தெரிந்ததே. ஆனால் இந்த ஜோன் கோம்ஸ்சும் இப்படியான ஒரு நாடகத்தைதான் அரங்கேற்றி உள்ளார் என்பது தெரிகிறது. இவர் தானாக இலங்கயில் நடக்கும் படுகொலைகளை பார்வையிட வந்தாரா?? அல்லது அரசின் அன்பான அழைப்பின் பேரில் வந்தாரா?? காரனம் இவர் கொழும்பில் வந்து இறங்கியவுடனேயே இங்கு நிலமை சீராக உள்ளதென பத்திரிகைகளுக்கு சொல்லிவிட்டார். அதன்பின் மகிந்தாவின் உடன்பிறப்புடன் சேர்ந்து சுற்றுலா போவதுபோல் அவர்கள் காட்டியதை பார்த்துவிட்டு பரவசபட்டதை ஜநாட்டு சபையில் 15 பேருக்கு பக்குவமாய் புரிய வைத்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் இவரது வாக்குமூலத்தில் இவர் போகாத இடத்தில் (புலிகள் கட்டுபாடு) புலிகள் மக்களை விடவில்லை. அடக்கிதான் வைத்திருக்கின்றனர் என்பதை துல்லியமாக (பத்திரிகையில் படித்திருப்பார் எனநினைக்கிறேன்) சொல்லியவர் இவர் நேரடியாக பார்த்த மக்களின் நிலையை எவ்வளவு இக்கட்டான நிலையில் அவர்கள் உரையாடினார்கள் என்பது புரியவில்லையோ??

    ஆக இவர் மிக சுவையான ஒரு விருந்துக்கு வந்து விருந்து வைத்தவர்களுக்கு தன்னால் முடிந்த ஒரு சின்ன பரிசு (புலி சரியல்ல) கொடுத்திருக்கிறார். வல்லரசுகளல்ல சின்ன சின்ன அரசுகள் கூட ஜ நாட்டு சபையை தமது தேவைக்கு பிரயோசன படித்திவிடலாமோ என பல்லிபோல் அறிவற்ற மக்கள் நினைக்க தொடங்கி விட்டனர். சிலர் வாதிடலாம் ஏன் புலிபற்றி அவர் சொன்னதில் என்ன தவறென. உன்மைதான் புலி பற்றி அவரது அறிக்கை மிக நியாயமானதுதான். ஆனால் அரசு பற்றியும் அரச கட்டுபாட்டுக்குள் வந்த மக்கள்படும் துன்பம் பற்றியும் இவர் தனது வரவை வீண் செலவு செய்து விட்டார் என்பதுதான் பல்லியின் வாதம்.

    Reply
  • santhanam
    santhanam

    விட்டு கொடுப்பவன் கெட்டுபோகான் கெட்டுபோகிறவன் விட்டுகொடான் புலி பற்றி அவரது அறிக்கை மிக நியாயமானதுதான் இதற்கு யார் காரணம் பல்லி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சிலர் வாதிடலாம் ஏன் புலிபற்றி அவர் சொன்னதில் என்ன தவறென. உன்மைதான் புலி பற்றி அவரது அறிக்கை மிக நியாயமானதுதான். ஆனால் அரசு பற்றியும் அரச கட்டுபாட்டுக்குள் வந்த மக்கள்படும் துன்பம் பற்றியும் இவர் தனது வரவை வீண் செலவு செய்து விட்டார் என்பதுதான் பல்லியின் வாதம்.//- பல்லி

    இப்ப பல்லி கூட கருத்தெழுதவது பத்திரிகைகள் இணையங்களில் வந்த செய்திகளை வைத்துத் தானே. அந்தச் செய்திகளில் எந்தளவு உண்மை பொய்யென அறிய பல்லி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று வரவில்லையே. ஜோன் கோம்ஸ் ஏற்கனவே இலங்கையிலுள்ள ஐ.நா பிரதிநிதிகளின் ஆதாரமான அறிக்கைகளை வைத்துத் தான் புலிகளின் செயல்களை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். அதுபோல் அவர் கொழும்பில் தங்கியிருந்த போது தான் 100 மீற்றர் தூரத்தில் புலிகளின் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்ட நிகழ்ச்சியும் நடந்தது. இவற்றையெல்லாம் அவர் கணக்கிலெடுத்திருப்பார் தானே?? அத்துடன் பல்லி சுட்டிக் காட்டும் அரச கட்டுபாட்டுக்குள் வந்த மக்கள்படும் துன்பம் என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள் என்பதையும் தெளிவு படுத்தினால் மற்றவர்களும் விளங்கிக் கொள்ளலாம் அல்லவா?? அரசு தப்பே செய்யவில்லையென்று இங்கே நான் குறிப்பிடவில்லை. ஆனால் அரசினால் இன்று கொல்லப்படும் மக்களின் நிலைக்கு புலிகளே காரணம் என்பதும் மறுப்பதற்கில்லை. ஏற்கனவே தீபம் தொலைக்காட்சி இருட்டடிப்புச் செய்த ஒரு பேட்டி பற்றியும் நான் குறிப்பிட்டிருப்பதை பல்லி பார்த்திருப்பாரென்றே நம்புகின்றேன். மேலும் ஜோன் கோம்ஸ் புலிகளிடமிருந்து தப்பி இராணுவப் பகுதிகளுக்கு வந்த மக்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடியதையும் பல்லி ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள் தானே. அப்போது அந்த மக்கள் தெரிவித் கருத்துகள் மூலமும் புலிகளின் தவறுகளை அறிந்திருக்கலாமல்லவா??

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துடன் பல்லி மல்லுகட்ட தயாராக இல்லை. ஆனால் தாங்கள் சொல்லும் காரனம் (மேல் பின்னோட்டத்தில்) அனைத்தும் புலி விடும் தவறை சுட்டி காட்டவே உள்ளது. ஆனால் அரசு தவறு செய்கிறது என்பதை சுட்டிகாட்டும் தாங்கள் ஏன் அந்த தவறை சுட்டிகாட்ட மறுக்கிறியள். /பல்லியும் ஊடகங்களை பார்த்துதானே எழுதுகிறது./ஆம் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் பல்லியின் கருத்து சர்வதேசத்துக்கு அல்லது ஒரு பிரச்சனைக்கோ ஒரு சாட்ச்சியல்ல ஆனால் ஜோன் கோம்ஸ் அப்படியல்ல அவரது வாக்குமூலம் ஒரு சர்வதேசத்துக்கு ஒரு பதிவென்பதை நாம் மறுக்கமுடியுமா? இன்று தாங்கள் சொல்வதுபோல் இந்த நிலைக்கு புலிதானே காரனம். யார் பல்லி இல்லையென சொல்லவில்லையே. அதேபோல் மக்கள் புலியுடன் இருக்க புலியின் மிரட்டல் மட்டும்தானா காரனம். இதுவரை வந்தமக்களை (அரச கட்டுபாட்டுக்கு) சரியான முறையில் கவனித்து இருந்தால் தொடர்ந்தும் மக்கள் வரதான் செய்வார்கள்.

    உதாரனத்துக்கு இந்தியாவிக்கு(மண்டபம்) மக்கள் உயிரை பயணம் வைத்துதான் இதுவரை லட்ச்சம் பேர் போயுள்ளனர். அங்கு போய்விட்டால் எப்படியும் உயிர்வாழ முடியும் என்னும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை அரசுமீதோ அல்லது ஏனைய தமிழ் அமைப்புகள்மீது இருக்க புலி காரனமா? புலி எமது மண்ணயும் மக்களையும் கேலிபொருள் ஆக்கிவிட்டது என்பது நிஜமானால் (நிஜம்தான்) அரசு என்ன செய்கிறது. நான் முன்பே சுட்டி காட்டினேன் கிழக்கின் ஒத்திகையை. ஆக எம்மல் முடிந்தது இப்போது புலியை எதிர்ப்பதல்ல அரசோ சர்வதேசமோ எம்மினத்தின் மீது செய்ய நினைக்கும் சவாரியை தடுக்க எதாவது எம்மால் முடிந்ததை செய்வதுதான். அந்த வகையில்தான் இந்த கட்டுரையாளர் இதை எழுதியிருப்பார் எனநினைத்து பல்லியும் தனது சிந்தனையையும் பதிவு (பின்னோட்டம் விட்டது) செய்தது. ஆனாலும் எனக்கு இதுவரை புரியாத விடயம் என்னவெனில் அரசு செய்யும் கோல்மால்களை எழுதினால் அவர்களுக்கு உடனடியாக புலியென பட்டம். இது எப்படி இருக்கு எனில் புலியால் மட்டும்தான் அரசை எதிர்க்க முடியும் என்பதுபோல் இலலையா?? அரசும் சர்வதேசத்துக்கு அரசுக்கும் தமிழர்க்கும் நல்லிணக்கம் உண்டு. ஆனால் புலி மட்டும் தான் தமக்கு பிரச்சனை என்பதுபோல் ஆகிவிடாதா?? புலி தான்தோன்றிதனமாக தமிழர் பிரச்சனையை நாட்டாண்மை பண்ணுவதை எதிர்ப்பது நியாம். அதுக்காக தமிழர் பிரச்சனையை அரசு சரிசெய்கிறது என்பது சீரழியும் எம்மினத்துக்கு நாம் செய்யும் தவறல்லவா??

    பார்த்திபன் ஒரு சின்ன தகவல் வஸ்த்தியாம்பிள்ளை தமிழர் அனைவரும் அறிந்த ஒரு அரக்கன். அவர் ஒரு முறை குட்டிமணியின் வீட்டுக்கு சென்று குட்டிமணியை தேடிய போது அவர் அங்கு இல்லை. ஆண்களே இல்லாத அந்த வீட்டில் அவரது சகோதரியை அவரது மேலாடையை கிழித்து அவமானபடுத்தி இப்படி சொன்னாரம். அவனை (குட்டிமணியை) அழித்து விட்டால் உங்களை இதை விடமோசமாக ஏதாவது செய்தாலும் கேக்க யாரும் இல்லைஎன. இன்று அந்தநிலையைதான் அரசும் நினைக்கிறது.

    குறிப்பு. இன்றய நிலையில் வஸ்த்தியாம்பிள்ளை யார்?? குட்டிமணி யார்?? அவரது சகோதரி யார்?? என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்.

    Reply
  • accu
    accu

    பல்லி உங்கள் பின்னூட்டமும் ஜெயபாலனின் கட்டுரையின் இன்னொரு வடிவமாகவே தெரிகிறது. புலியின், அரசின், ஐ நா வின் குற்றங்களை காட்டுகிறீர்கள் ஆனால் தற்ப்போது உள்ள நிலையில் யார் என்ன செய்யவேண்டுமென்று கூறுவதை தவிர்த்துவிடுகிறீர்கள். எல்லோரும் நியாயமாக நடந்தால் உலகில் எங்குமே பிரச்சனையிராது. //ஜெயபாலன் சில விடயத்தை நாம் மிக தாமதமாகதான் புரிந்து கொள்ள முடிகிறது. // பல்லி இலங்கை அரசையோ அன்றி புலிகளையோ புரிந்துகொள்ள உங்களுக்கு ஏன் தாமதம்? ஐ நா என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். பல்லி இடம் பெயர்ந்த மக்களின் வசதிக் குறைவுகள் தற்க்காலிகமானவை. வன்னியில் அகப்பட்டு இருக்கும் மக்களின் நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இது படிப்படியக நிவர்த்தி செய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு. வெகு விரைவில் முற்றாகத் தீரும். தற்ப்போதய நிலையில் நாம் முக்கியமாக கவனமெடுக்கவேண்டியது மக்கள் அழிவைத் தடுக்கும் வழி. புலித்தலைமையால் வலிந்து இணைக்கப்பட்ட போராளிகளும் மக்களே. நன்றி

    Reply
  • palli
    palli

    அச்சு திரும்பவும் பல்லியின் பின்னூட்டத்த படிக்கவும் எனதுநோக்கம் புலியையோ அல்லது அரசையோ படம்பிடித்து காட்டுவதல்ல எமது மக்கழுக்கு சாதகமாக ஜநாட்டு சபையும் இல்லை என்பதே.
    வன்னியில் உள்ள மக்களை விட அரசிடம் வந்தவர்கள் பரவாயில்லைதானே. இது அச்சு.
    அச்சு எயிட்ஸ் என்னும் நோயை விட கான்சர் பரவாயில்லைதானே என்பது உமது வாதம். இதை கான்சர் உள்ளவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனாலும் புலி எதிர்ப்பு நியாயமானது. அரசை ஆதரிப்பது கொடூரமானது எம் மக்களை பொறுத்த மட்டில்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி
    எமது வீட்டிலுள்ளவர்களே தவறுகள் செய்து கொண்டிருக்கும் போது அடுத்த வீட்டுக்காரனின் தவறை எம்மால் கதைக்க முடியுமா ?? அதுபோல்த் தான் அடிப்படையில் புலிகளே பல தவறுகளைச் செய்வதாலேயே அரசும் அதனைச் சாட்டாக வைத்து பல தவறுகளைச் செய்கின்றது. உங்களுடனும் முரன்பட்டு என் கருத்துகளை நானும் வைக்கவில்லை. சில விடயங்களில் தெளிவான பதில்களைப் பெற வேண்டுமென்பதற்காகவே எனது பதிவையும் வைத்தேன். ஒரு காலத்தில் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க பல தமிழ்மக்களை பணம் வாங்கிக் கொண்டு அகதிகளாக புலிகளே தமிழகத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய நிலையில் எவரும் தமிழகத்திற்கே அகதிகளாகச் செல்ல முடியவில்லையே?? கிளிநொச்சி பிடிபட்டபோது சில குடும்பங்கள் 5 ரைக்டர் ரியூப்புகளுக்கு கைப்பம்மால் காத்தடித்து அதனைப் பாவித்து கடல் மார்க்கமாக இராணுவக் கட்டப்பாட்டுக்குள் வந்திருந்தார்கள். இதனை இணையத்திலே காகொளியாக நான் பார்த்திருந்தேன். எவ்வளவு மன உழைச்சல் இருந்திருந்தால் இப்படி அவர்கள் வந்திருப்பார்கள். கைப்பம்மால் ரைக்டர் ரியுப்புகளுக்கு காத்தடிப்பதென்பது இலகுவான விடயமா?? இன்று இராணுக்கட்டப்பாட்டுக்குள் வந்த மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்ததை விட சிறப்பாகவே இருக்கின்றார்கள் என்பது அவர்களின் முகங்களிலேயே தெரிகின்றது. பல சிறார்கள் தமக்கு எனி கல்வி கற்கவே வழியில்லை என ஏக்கத்திலிருந்ததாகவும் தற்போது கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்கள். தற்போதுள்ள ஒரேயொரு பிரைச்சினை அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாமலிருப்பதே. தற்போதய நிலையில் அதை தவறென்று கூற முடியாது. நாளாவட்டத்தில் நிச்சயம் இந்த நிலைமைகள் மாறும்.

    மேலும் பஸ்த்தியாம்பிள்ளை, குட்டிமணி விடயத்தையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இருவரினதும் சரித்திரம் நானும் அறிந்தது தான். ஆனால் இறுதியில் குட்டிமணி யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதையும் குறிப்பிட மறந்து விட்டீர்களே??

    Reply
  • damilan
    damilan

    //ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காது போயின.//
    இலங்கை அரசுக்கு எதிராக யாரால் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது? யாரால் முயற்சி செய்யப்பட்டது? யாரால் முயற்சிகள் பயனளிக்காது போயின? என்ன தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது? விளக்க முடியுமா ?

    //ஜோன் ஹொல்ம்ஸ் உடனான சந்திப்பு இலங்கை அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து உள்ளது//
    இலங்கை அரசு சட்ட ரீதியானது மக்களால் தெரிவு செய்யப்பட்டது.ஜனநாயக வரைமுறைக்குள் ஆட்சி செய்யப்படுவது. தன்னாட்சி இறைமை உள்ள நாடு. சர்வதேசத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடு உள்ளது
    புலிகள் சட்டரீதியற்ற அமைப்பு ஜனநாயக தன்மையற்றது மக்களால் தெரிவு செய்யப்படாதது யாருக்கும் பொறுப்புக் கூறத் தேவையற்றது

    இந்த நிலையில் ஐ.நா.வின் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக அமையும் அமைய வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பொருத்தமானது. தமது உழியர்களையே புலிகள் தடுத்தும் இயக்கத்திற்கு சேர்த்து இருக்கும் போது ஜோன் ஹொல்ம்ஸின் சந்திப்பு எப்படி இலங்கை அரசுக்கு பாதகமாக அமையும் ?

    //புலத்தில் உள்ள புலிஎதிர்ப்பாளர்களும் இந்த அரசினை நம்ப முடியாது என்று தெரிந்தாலும் யுத்தத்தின் அவசியத்தையும் புலிகள் அழிக்கப்படுவதன் அவசியத்தையும் மிகவும் ‘உறுதியுடனும் தெளிவாகவும்’ பேசுவார்கள். ஏனெனில் இவர்களுக்கும் பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை..//

    ஆம் தற்போது புலத்தில் பசிக் கொடுமை இல்லைதான். கடற் தொழிலுக்கு இரவில் விடுகிறார்கள் கூடியளவு பகுதியில் விவசாயம் செய்ய விடுகிறார்கள். பெற்றோலுக்கு பாஸ் முறை இல்லை புலிகளால் தகர்க்கப்பட்ட தண்ணீர் தாங்கியை புதிதாக கட்டி விட்டார்கள் தண்ணீர் மூன்று வேளையும் கிடைக்கிறது. செல் ரேஞ் இப்போது எமது பகுதிக்குள் இல்லை. ஒரு துப்பாக்கி வேட்டைக் கூட காதல் கேட்க முடியவில்லை. பிஸ்டல் குறுப் பயம் இல்லை புலியின் வரி இல்லை கப்பம் இல்லை. அநியாயமாக யாரும் கொல்லப்படுவதில்லை. புதிதாக பாதைகள் அமைக்கிறார்கள் பாலம் கட்டுகிறார்கள் (மன்னாரில்) 8 மணி மட்டும் கடை திறந்திருக்கிறது ஏன் இதெல்லாம் கூடாதா? எமது வாழ்வில் நிம்மதியை சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடாதா? இதெல்லாம் எதனால் சாத்தியமானது? இதை திரு. ஜெயபாலன் அவர்கள் விரும்பவில்லையா?

    Reply
  • accu
    accu

    பல்லி புலியை எதிர்ப்பதென்பது அரசை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. வெற்றியின் விளிம்பில் நிற்க்கும் அரசு,ஜேவிபி கிளர்ச்சியின் போது தமது சொந்த மக்களையே அழித்தொழித்த அரசு,புலிகளினால் மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்தவர்களால் யுத்தத்தை வழிநடத்தும் அரசு,சர்வதேசத்தின் எந்தவொரொ நிர்ப்பந்தத்தையும் பெறாத அரசு,இந்தியாவின் முழு உதவியையும் பெறும் அரசு, எப்படி யுத்தத்தை நிறுத்துமென நாம் எதிர்பார்க்கலாம். அதற்க்காக அது சரியென்பதோ அதை நான் ஆதரிப்பதாகவோ அர்த்தப்படுத்த வேண்டாம். இங்கு நாம் நியாயத்தை பார்க்கமுடியாது. நடக்கக்கூடிய யதார்த்தைதான் பார்க்க வேண்டும்.வன்னியில் மக்களை கேடயமாக வைத்திருப்பதாகவும் வெளியேற முனையும் மக்களை சுட்டுக் கொல்வதாகவும் மனிதாபிமான அமைப்புக்களாலும் பல நாடுகளாலும் குற்றம் சாட்டப்படும் புலிகள், தமது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் புலிகள், உலகின் பல நாடுகளாலும் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட புலிகள், எந்தவொரு நாட்டினதும் ஆதரவையோ உதவியையோ பெறாத புலிகள், தமது தீர்க்கதரிசனமற்ற, வன்முறையை மட்டும் நம்பிய,ஏகபிரதிநிதித்துவத்துக்காக கொடுங்கொலைகள் புரிந்து எமது போராட்டத்தையே சிதைத்து எமது மக்களை இந்த இழி நிலைக்கு கொண்டுவந்த புலிகள் இப்படிப்பட்ட புலிகளை இனி இவர்களால் எமக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபின் எமது மக்களின் அழிவைத் தடுப்பதற்க்காகவும் அவர்களால் வலிந்து இணைக்கப்பட்ட போராளிகளை காப்பாற்றுவதற்காகவும் நாம் அனைவரும் இணந்து குரல் கொடுப்பதில் தவறேதும் உண்டா?
    பல்லி எயிட்ஸ்ஸை விட கான்சர் நல்லதல்ல. ஆனால் இது கான்சர் இல்லை வெறும் காய்ச்சல் தடிமன் தான். நன்றி.

    Reply
  • palli
    palli

    //எமது வீட்டிலுள்ளவர்களே தவறுகள் செய்து கொண்டிருக்கும் போது அடுத்த வீட்டுக்காரனின் தவறை எம்மால் கதைக்க முடியுமா ?? //
    இது சரியான உதாரனம் அல்ல. அரசு ஒன்றும் பக்கத்துநாடல்ல. புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குகூட அரசுதான் படி அளக்கவேண்டும். மகிந்தா குடும்பத்துக்கு இலங்கையில் எந்த அதிகாரம் உண்டோ அதே அதிகாரம் எம்மவர்க்கும் உண்டு.

    //ஆனால் இறுதியில் குட்டிமணி யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார் //
    மக்களால் அல்ல என்பது பல்லியின் கருத்து.
    பார்த்திபன், பல்லிக்கு பார்திபனுடன் புலி அமைப்பு சார்ந்த கருத்தில் உடன்பாடுதான். அதை பல்லியின் பல பின்னோட்டத்தில் பார்க்கலாம். ஆனால் இன்றய சூழலில் அரசுக்கு கொடியேர்த்த பல ஊடகஙகளும்; கல்விமாண்களும் ஏன் சர்வதேசம் கூட உண்டு. அதேபோல் புலிக்கும் அரசு போல் இல்லாவிட்டாலும் புலிக்கும் அவர்களை தாங்கி நிற்க்கும் சக்த்திகள் இல்லை என சொல்ல முடியாது. ஆனால் மக்கள்நிலை சர்வதேசத்துக்கோ அல்லது அவர்களது உறவாலிய புலம் பெயர் உறவுகளுக்கோ எடுத்து சொல்ல மிக குறைந்த ஊடகம்தான் செயல்படுகிறது. இதில் சிலதுகூட தற்ப்போது ஏதோ காரனத்தால் சண்டயென்றால் ரத்தம் வரதானே செய்யும் என்னும் போக்கில் அவர்கள் செயல்பாடுகள் இருக்கிறது. ஆனால் தேசம் அப்படியல்ல அப்படிதான் தேசம் போனாலும் பின்னோட்டம் விடும் நாம் எமது கருத்தை தெளிவுபடுத்தலாம். அதன் அடிப்படையில்தான்
    பல்லியின் கருத்து அமையும். புலியை பாதுகாப்பது பல்லியின் வேலையல்ல. அரசை பாராட்டுவதும் பல்லியின் நிலையில்லை. ஆனால் மக்களின் துன்பத்தை ஒரு வீதமாவது வெளிகொனருவது பல்லிபோன்றோரின் கடமை.

    Reply
  • palli
    palli

    அச்சு அரசின் இன்றயநிலை அவர்கள் செயல்திறன் பற்றியும். புலிகளின் அன்றயநிலை அவர்களின் கொடுமை தான்தோன்றிதனம் பற்றியும். மிகநிதானமாக யோசிக்கும் நீங்கள் இரு மிருகத்துக்கும் இடையில் வாழ்வா சாவா?? கொலையா கற்பழிப்பா?? இறந்தது மகனா மகளா?? இப்படி எதுவும் தெரியாமல் இருக்கும் மக்கள்பற்றி கவலைபடவோ அல்லது செயல்படகூடிய ஜ நாட்டுசபை கூட எனோதானோ என செயல்படுவதை ஜெயபாலனோ பல்லியோ எழுதினால் புலிபாதுகாப்பு என சொல்வது நியாயமாக பல்லிக்கு படவில்லை. புலியை அழிக்க எந்த விலை கொடுக்கவும் அரசு தயார். அதேபோல் புலிக்காக எமது மக்களையும் பலி கொடுப்பதுக்கு ஆதரவு கொடுக்க பலர் தயார் என்பது வேதனையான விடயம்.

    Reply
  • palli
    palli

    //. புதிதாக பாதைகள் அமைக்கிறார்கள் பாலம் கட்டுகிறார்கள் (மன்னாரில்) 8 மணி மட்டும் கடை திறந்திருக்கிறது ஏன் இதெல்லாம் கூடாதா? எமது வாழ்வில் நிம்மதியை சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடாதா? //

    நீண்ட காலத்துக்கு பின் காதுக்கு இனிமையான செய்தியை டமிலன் சொல்லியது இனிக்கிறது. அத்துடன் அரச கட்டுபாட்டுக்குள் வந்த வன்னிமக்கள் வாழும் இடங்கழுக்கு மின்சாரவேலி போட்டு கொடுத்திருக்கு. வயோதிபரை தனியாக பிரித்து வைத்திருக்கு. யுவதிகள் ராணுவ சேவையில் கலக்கபட்டிருக்கு. இளம் சமுதாயம் புதைக்கபடுகிறது. இப்படி இன்னும் எத்தனையோ நல்ல திட்டங்களை அரசு செய்கிறது என்பதை பின்னோட்டத்தில் சேர்த்திருக்கலாம். இறைச்சி கடையில் தொங்கும் ஆட்டை இரு விதமாக பார்க்கலாம். உயிர்களை நேசிப்பவர்கள். ஆட்டின் உயிர் போய்விட்டதே என கவலை கொள்ள கூடும். சாப்பாட்டு பிரியர்கள் அந்த ஆட்டின் எந்த இடத்து இறைச்சி திறமானது என வாயூற கூடும். ஆகவே ஒரே செயலில் இரு பார்வை உண்டு.

    Reply
  • santhanam
    santhanam

    இனி புலிகளால் போராடி மீள முடியாதளவுக்கு பலமான முற்றுகை இடப்பட்டிருக்கிறது புலிகள் இறுதி ஆள் வரை போராடி மடிவோம் என்று எழுப்பும் கோஷத்துக்கு பின்னால் உள்ள அவலம் மறைக்கப்படுகிறது. இந்த இறுதிவரை போராடி மடியப்போவது யார்? புலிகளால் கட்டாயமாக இணைத்துக்கொள்ளப்பட்ட, அரைகுறைப் பயிற்சியுடன் துப்பாக்கி திணிக்கப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள பிள்ளைகள் தானே? இந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் உறவினரும் இந்த பாசப்பிணைப்புக் காரணமாகவும், இதிலுள்ள அபாயம் காரணமாகவும் வன்னியை விட்டு வர அஞ்சி விரும்பாமல் இருக்கின்றனர். போராடி மடிவதில் அவர்களும் அடங்குவர்.

    Reply
  • palli
    palli

    சந்தானம் சொல்வதில் யதார்த்தம் இருக்கிறது.
    அதுதான் வன்னி வாழ் தமிழரின் நிலை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வன்னிமக்கள் வாழும் இடங்கழுக்கு மின்சாரவேலி போட்டு கொடுத்திருக்கு. வயோதிபரை தனியாக பிரித்து வைத்திருக்கு. யுவதிகள் ராணுவ சேவையில் கலக்கபட்டிருக்கு. இளம் சமுதாயம் புதைக்கபடுகிறது. இப்படி இன்னும் எத்தனையோ நல்ல திட்டங்களை அரசு செய்கிறது என்பதை பின்னோட்டத்தில் சேர்த்திருக்கலாம்.//- பல்லி

    புலி ஆதரவு ஊடகங்கள் கிளப்பிவிடும் புரளிகளை பல்லியும் நம்புகின்றதா?? அல்லது எத்தகவல்கள் அடிப்படையில் பல்லி சொல்கிறதென்பதை பல்லி தெளிவுபடுத்தினால் நாமும் அறிந்து கொள்ளலாம். மேலும் பலாத்தகாரமாக போராளிகளாக்கப்பட்டு மாட்டுப்பட்டவர்கள் கூட வெளியேறவே விரும்புகின்றார்கள் என்பதை பிபிசி போன்ற ஊடகங்களில் வெளியேறிய மக்களே தெரிவித்திருக்கின்றார்களே !! அரசும் புலிகளும் குறைந்தது 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்து புலிகள் மக்களினுள் ஊடுருவாமல் அவர்களைச் சுயமாகச் சிந்தித்து விரும்பியது போல் முடிவெடுக்க அனுமதித்தால் உண்மை தெரிந்துவிடும். ….

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    பார்த்தீபன் நீங்கள் இலங்கையில் நடைபெறுகின்ற அரசியல் நகர்வுகளை கறுப்பு வெள்ளையாக தரம் பிரித்துப் பார்க்கலாம் என நினைக்கிறீர்கள். ஆனால் துரதிஸ்ட வசமாக அரசியல் போக்குகளை அவ்வாறு வகைப்படுத்திவிட முடியாது. இன்ன இன்னார் நல்லவர்கள். இன்ன இன்னார் கெட்டவர்கள். என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் குறிப்பிட்டு உள்ள ”பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்” என்ற பழமொழியும் இவ்விடத்திற்குப் பொருந்தமில்லாதது என்றே நினைக்கிறேன்.

    உங்களுடைய வாதப்படி இன்று வன்னியில் மக்களுக்கு ஏற்பட்டு உள்ள அவலத்திற்கு புலிகள் மட்டுமே காரணம் என்கிறீர்கள். ஆனால் இலங்கை அரசுக்கும் அதில் முக்கிய பொறுப்பு உண்டு என்பதே எனது கருத்து. இலங்கை உட்பட சர்வதேச சமூகமே புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு உள்ளனர். அப்படியானால் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க முற்படும் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி வகைதொகையின்றி மக்களைக் கொல்வது எவ்வகையில் நியாயம்?

    ஒரு உதாரணத்திற்கு ஆயிரம் வரையான புலிகள் ஒரு சிஙகளக் கிராமத்தை சுற்றி வளைத்து அந்த மக்களைப் பணயமாக வைத்துக் கொண்டு இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் இலங்கை விமானப்படை அந்தக் கிராமங்கள் மீது பறந்து குண்டு வீசுமா? இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படைகள் கண்மூடித்தனமாக அந்த சிங்களக் கிராமத்தின் மீது தொடர்ச்சியாக செல் வீச்சு நடத்துமா?

    தமிழ் மக்களாகிய நாங்கள் வீடுதலைப் புலிகளை விமர்சிப்பதற்கு முக்கிய காரணம் ‘தமிழ் மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம்’ என்று கூறி தாங்களே ‘தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்’ என்று சொல்வதால். ஆனால் இலங்கை அரசு புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டது. அதற்கு அப்பால் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் என்னத்தை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. ஆகவே இன்றைய தமிழ் மக்களின் இழப்புகளை குறைத்து அவர்களை பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒரு பயங்கரவாத அமைப்புக்கு இருக்கிறதா? அல்லது ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கு இருக்கிறதா?

    புலிகளுடைய ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை அவற்றுக்கு அரசியல் உள்நோக்கம் உண்டு என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளேன். சர்வதேச ஊடகங்களுக்கு வன்னிக்குள் அனுமதி இல்லை. தேசம்நெற் போன்ற ஊடகங்களுக்கும் வன்னியில் செய்தியாளர்கள் இல்லை. புலிசார்பு ஊடகங்கள் செய்திகளை வெளியே கொண்டுவராது இருந்திருந்தால் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் செய்திகளை வைத்துக் கொண்டு அங்கு பயங்கரவாத அழிப்பு யுத்தம் நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் அழிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டடுமே அறிந்திருக்க முடியும். இதுவரை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று இலங்கை அரசு ஒத்துக் கொண்டு உள்ளதா? கொல்லப்பட்ட 2000 பொது மக்களும் என்ன புலிகளா?

    சர்வதேச ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட பல ஒளிப்பதிவுகள் புலிசார்பு ஊடகங்களினாலேயெு பதிவு செய்யப்பட்டவை. அவை மிகைப்படுத்தப்பட்டவை என்பதற்காக அவ்வாறான சம்பவங்களே நடைபெறவில்லை என்று வாதிட முடியாதல்லவா?

    //இன்று புலியெதிப்பாளர்கள் கூட வன்னியில் புலிகளிடம் மாட்டுப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டுமென்றே கோரிக்கைகள் வைக்கின்றார்கள். இந்தியா, அமெரிக்கா மற்றும் இணைத்தலைமை நாடுகள் இணைந்து வன்னியில் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக செய்திகள் வந்த போது இவர்கள் எல்லோரும் அதை ஆதரித்தார்கள்.// பார்தீபன்

    இவ்வளவு கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு விசுவாசமானவர்கள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் இலங்கை அரசுக்கு என்ன பிரச்சினை? ஏன் இந்த அவலத்தில் இருந்து மக்களை விடுவிப்பதற்கு தனக்கு விசுவாசமாக உள்ள கொழும்புத் தலைமைகளுடன் கலந்துரையாடவில்லை.

    பார்த்தீபன் இலங்கை அரசு திட்டமிட்டமுறையில் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துகிறது. அதன் செயற்பாடுகளும் பயங்கரவாதமாகவே உள்ளது.

    தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //Martin Luther King was very clear in recognizing that the minorities could never win their struggle for equality using violence. // Thambiah Sabarutnam

    தமிழீழம் சாத்தியமில்லை என்பதற்கு 1976ல் நாங்கள் வைத்த காரணம் தமிழ் மக்களுடைய எண்ணிக்கை அவர்களுடைய பிரதேசம் அவர்களுடைய வாழ்க்கை இவையெல்லாம் சுயமாகப் போராடி தமிழீழத்தை பெறக்கூடிய சூழ்நிலை என்றைக்குமே இருக்கவில்லை. இதையெல்லாமீறி தமிழீழம் அமைக்கப்படுமாக இருந்தால் அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது இன்னுமொரு அந்நிய சக்தியின் மூலம்தான் ஒரு ஏகாதிபத்தியத்தினாலயே சாத்தியம். ஆனால் இதே கோரிக்கையை அந்நிய சக்திகள் பயன்படுத்தும்.
    : சி கா செந்திவேல் – பொதுச்செயலாளர், புதிய ஜனநாயகக் கட்சி

    புலிகள் விட்ட மிகப் பெரும் தவறு வெறுமனே ஆயுத வன்முறையில் மட்டும் நம்பிக்கை வைத்து போராட்டத்தை கொண்டு சென்றது. வன்னியில் வைத்து வழங்கிய மாவீரர் தின உரைகளில் சக இன மக்கள் பற்றி எவ்வித கரிசனையும் இருக்கவில்லை. ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கபட்ட சகல இன மக்களையும் நட்புடன் அணுகிப் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் புலிகள் பல விடயங்களைச் சாதித்திருக்க முடியும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    அக்கு //வழிமுறைகள் என்ன என்பதை உங்கள் ஆக்கத்தில் என்னால் காணமுடியவில்லை.//

    வழிமுறைகள் தீர்வு என்று நாங்கள் பலவற்றைச் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய கலந்தரையாடலில் ‘இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்தற்கு தீர்வுகளுக்கும் மாதிரிகளுக்கும் குறைவேயில்லை. ஆனால் தீர்க்கப்ட வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம் தான் இல்லாமல் இருக்கின்றது’ என்று கல்வியியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். இது தான் யதார்த்தம். இப்படித்தான் தீர்க்க வேண்டும் என்று ஒரு தீர்வை நான் எழுதலாம். ஆனால் அதனை செயற்படுத்தும் அதிகாரம் என்னிடமோ தேசம்நெற்றிடமோ இல்லை.

    ஆனால் //ஆக இதுவும் வீணாகிப் போகிறது.// என்ற அடிப்படையில் நான் இதனைப் பார்க்கவில்லை. இன்றைக்கு நான் முன் வைக்கும் இதே கருத்தக்களை 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான தேசம் சஞ்சிகையின் முதலாவது இதழிலும் குறிப்பிட்டு உள்ளேன். சமூக மாற்றத்தை ஒரே கட்டுரையில் ஒரே நபரால் ஏற்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை. பல்வேறு தளங்களில் செயற்படுபவர்களும் தங்கள் தங்கள் பங்களிப்புகளை வழங்குவார்கள்.

    இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு இராணுவரீதியாக தீர்வு காண முடியாது. இன்றைய இராணுவச் சமநிலை எதிர்காலத்தில் மாறலாம். விடுதலைப் புலிகளால் ஒரு பிரதேசத்தை கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் இல்லாமல் போகலாம். ஆனால் இராணுவ ரிதியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இருக்கும்.

    அதனால் யுத்த நிறுத்தம் மூலம் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதன் மூலமே அழிவுகளைத் தவிர்து நாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியும். இலங்கை அரசு புலிகள் ஏனைய தமிழ் அமைப்புகள் முஸ்லீம் கட்சிகள் அனைவரும் ஒரு win : win வெற்றியாகக் கருதும் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். அது இராணுவ ரிதியாக சாத்தியமற்றது. அதனை நானும் நீங்களும் வைக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் அடைய வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஒரு உதாரணத்திற்கு ஆயிரம் வரையான புலிகள் ஒரு சிஙகளக் கிராமத்தை சுற்றி வளைத்து அந்த மக்களைப் பணயமாக வைத்துக் கொண்டு இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் இலங்கை விமானப்படை அந்தக் கிராமங்கள் மீது பறந்து குண்டு வீசுமா? இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படைகள் கண்மூடித்தனமாக அந்த சிங்களக் கிராமத்தின் மீது தொடர்ச்சியாக செல் வீச்சு நடத்துமா?//- Jeyabalan

    முதலில் நீங்கள் பொறுப்பாக பதில் அளித்திருப்பதற்காக எனது நன்றிகள். ஆனால் மேலே நீங்கள் காட்டியுள்ள உதாரணம் ஒரு ஆய்வாளராக நீங்கள் தடுமாறியுள்ளதையே காட்டுகின்றது. சிங்களக் கிராமத்தை புலிகள் சுற்றிவளைத்திருந்தால் அங்கே இராணுவத்திற்கு; புலிகளையோ அல்லது சிங்கள மக்களையோ இனம் காணுவதற்கு சிரமம் இருந்திருக்காது. ஆனால் இன்று புலிகள்; பொதுமக்களுக்கும் ஆயுதங்களை பலாத்தகாரமாக கையில் திணித்துவிட்டு அவர்களிடையேயே பதுங்கியிருக்கும் போது இராணுவத்தால் எப்படி புலிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியும். இந்த நிலையில் தாக்குதலின் போது பொது மக்களின் இழப்பும் தவிர்க்க முடியாததாகின்றது. இந்த இழப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால் ஒன்றில் புலிகள்; பொதுமக்களைத் தாமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் அல்லது புலிகளை எதிர்த்துக் கொண்டு பொதுமக்கள் வெளியேறத் தொடங்க வேண்டும். சிலர் குறிப்பிடுவது போல் பொதுமக்கள் விரும்பித் தான் புலிகளோடு இருக்கின்றார்கள் என்பது தவறான செய்தி என்பதை, சில வாரங்களுக்கு முன் நடேசன் விட்ட அறிக்கையே தெளிவு படுத்திவிட்டது. ஐ.நா அமைப்பு; புலிகள் மக்களை வெளியேற விடாது தடுக்கின்றார்கள், மீறி வெளியேறுபவர்களை சுடுகின்றார்கள் என்று விட்ட அறிக்கையை விமர்சித்த நடேசன் அது பொய்யான தகவல் என்றார். ஆனால் பின்பு இதே குற்றச் சாட்டை அனைத்துலக அபய நிறுவனம் வெளியிட்ட போது பொதுமக்களின் நன்மை கருதித் தான் தாம் பொதுமக்களை வெளியேற விடாது தடுக்கின்றோமென்று நடேசன் அறிக்கை விட்டார். இதன் மூலம் நடேசன் பொதுமக்கள் வெளியேற விரும்புகின்றார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் தான் தமது பிழைப்புக் கெட்டுவிடும் என்பதால் போலியான அறிக்கைகளை வெளியிட்டு மேலும் மேலும் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். சரி பொதுமக்களுக்கு இழப்பில்லாதவாறு இராணுவத்தால் எப்படி யுத்தத்தை தொடர முடியும் என்ற உங்கள் கருத்தையும் இங்கே நீங்கள் தந்திருக்கலாமே. இழப்பில்லாமல் யுத்தம் செய்ய ஏதாவது வழி இருந்து அதை அரசாங்கம் மேற்கொள்ளாது விட்டால் அது தவறு. ஆனால் அந்த வழியை நீங்களோ அல்லது மற்றவர்களோ இதுவரை ஏன் சுட்டிக் காட்டவில்லை. முடிந்தால் அதைச் செய்யுங்கள். புலிகள் தற்போது இராணுவத்துடன் செய்யும் சண்டையை பூநகரியிலோ அல்லது கிளிநொச்சியிலோ தொடர்ந்து செய்திருந்தால் பொதுமக்களுக்கு இவ்வளவு இழப்பும் ஏற்பட்டிருக்காது. புலிகள் தந்துரோயப் பின்வாங்கல் என்று மற்றவர்களுக்கு பூச் சுற்றி இறுதியில் மக்களைப் பலிக்கடாக்களாக்கி தம்மை பாதுகாக்கலாம், இதனால் எப்படியும் வேறு நாடுகள் தலையிட்டு போர் நிறுத்தத்தை கொண்டு வந்து மக்களையும், தம்மையும் காப்பாற்றி விடலாம் என்ற நப்பாசையில் இருந்தார்கள். ஆனால் புலிகள் விடயத்தில் எந்நாடும் தலையிட விரும்பவில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதனால் பாதிப்படைவது பெரும்பாலும் பொதுமக்கள் தான்.

    அமெரிக்கா, இந்தியா, இணைத்தலைமை நாடுகள் பொதுமக்களை மீட்கப் போவதாக சொன்ன போது அதனை இலங்கை அரசு நிராகரிக்கவில்லையே. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று இன்று உலகம் சுற்றிவரும் கூத்தமைப்பினர் சிலர் தான் அதனை எதிர்க்கின்றனர். மேலும் யுத்த பிரதேசத்தில் பணியிலிருந்த ஐ.நா உத்தியோகத்தர்களையும் போரிடுமாறு புலிகள் பிடித்துச் சென்றதும் தாங்கள் அறியாததல்ல.

    சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு சாதகமாக நடந்த நிகழ்வுகள் குறைவு தான். அதனால் மாறி மாறி வந்த அரசாங்களைப் பொறுத்தவரை அவர்களை எதிரிகளாகவே நாம் பார்க்கின்றோம். ஆனால் எமது பாதுகாவலர் என எண்ணிய விடுதலைப்புலிகளே மக்களுக்கு எதிரிகளாக மாறித் துரோகம் செய்வதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 2002 இல் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் புலிகள் செய்த மக்களுக்கான செயற்பாடுகள் என்ன?? பொதுமக்களை பலாத்தகாரமாகக் கடத்தி பயிற்சி வழங்கியது . தமக்கான நீச்சல் தடாகம் மற்றும் ஆடம்பரமான பங்களாக்களை அமைத்தது. வரி என்ற பெயரில் தினமும் கோடிக் கணக்காக பணம் அறவிட்டது. இதற்காகத் தானா புலிகள் தமிழீழம் கேட்கின்றார்கள்??

    தற்போதாவது புலிகளுக்கு மக்களைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் ஆயுதங்களைப் போட்டுவிட்டு இலங்கை அரசிடம் சரணடையாமல் வேண்டுமானால் ஏதாவதொரு சர்வதேச அமைப்பிடம் சரனடையலாம். இவற்றைச் செயல்படுத்த ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம் போன்றனவும் முன்வரலாம். அதே நேரம் சர்வதேசத்தின் தலையீட்டுடன் தமிழ் மக்களுக்கு போதுமான அதிகாரங்களுடனான ஒரு தீர்வையும் அரசு முன்வைக்க ஒரு அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியும். இதற்கு பல நாடுகள் ஒத்தழைப்புத் தரும். புலிகளுக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்க முன்வர வேண்டும் அல்லது புலிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்காது சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உட்படுத்தலாம். இவற்றை முன்னெடுப்பதென்றால் இலங்கை அரசு புலிகளை தோற்கடிக்க முன் செய்ய புலிகள் முன்வர வேண்டும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //அவனை (குட்டிமணியை) அழித்து விட்டால் உங்களை இதை விடமோசமாக ஏதாவது செய்தாலும் கேக்க யாரும் இல்லைஎன. இன்று அந்தநிலையைதான் அரசும் நினைக்கிறது.// பல்லி

    இந்தக் கருத்துடன் உடன்பாடாமலிருப்பதற்கு தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு எந்த நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதனால் புலிகளை அரசினால் வேரறுக்க முடியாது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை முன் வைக்கும் வரை புலிகளை இல்லாதொழிக்க முடியாது. நோய்க்கான காரணியை நீக்காமல் நோயைக் குணப்படுத்த முடியாது.

    //புலியை அழிக்க எந்த விலை கொடுக்கவும் அரசு தயார். அதேபோல் புலிக்காக எமது மக்களையும் பலி கொடுப்பதுக்கு ஆதரவு கொடுக்க பலர் தயார் என்பது வேதனையான விடயம்.// பல்லி
    மிகவும் வேதனைக்குரிய உண்மை.

    //இடம் பெயர்ந்த மக்களின் வசதிக் குறைவுகள் தற்க்காலிகமானவை. வன்னியில் அகப்பட்டு இருக்கும் மக்களின் நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இது படிப்படியக நிவர்த்தி செய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு. வெகு விரைவில் முற்றாகத் தீரும். // அக்கு

    அக்கு நீங்களென்ன ஹொலிவூட் படத்துக்கு திரைக் கதைசனசம் எழுதினமாதிரி முற்றும் சுபமாக முடியும் என்று சொல்கிறீர்கள். ‘இடம்பெயர்ந்த மக்களின் வசதிக்க குறைவுகள் தற்காலிகமானவை’ என்று சொல்கிறீர்கள். 2000 பேர் கொல்லப்பட்டதும் 7000 பேர் காயப்பட்டதும் அங்கவீனர்களானதும் தற்காலிகமான வசதிக் குறைவுகள் அல்ல. மேலும் இந்த மக்கள் கடந்த இரு தசாப்தங்களாகக் காலத்திற்குக் காலம் இடம்பெயர்கிறார்கள். இது ஒரு குறுகிய காலம் அல்ல.

    அக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் ‘இது படிப்படியக நிவர்த்தி செய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு. வெகு விரைவில் முற்றாகத் தீரும்.’ ஆக இருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் யதார்த்தம் அப்படி அல்ல என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //இலங்கை அரசுக்கு எதிராக யாரால் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது? யாரால் முயற்சி செய்யப்பட்டது? யாரால் முயற்சிகள் பயனளிக்காது போயின? என்ன தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது? விளக்க முடியுமா ?// டமிழன்

    நீங்கள் என்ன நோக்கத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினாலும் பதிலளிக்க வேண்டியது கட்டுரையாளன் என்ற வகையில் என்னுடைய பொறுப்பு. இலங்கை அரசு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்கிறது. இனப்படுகொலை செய்கிறது. மனித உரிமைகளை மீறுகிறது என்ற அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற பிரித்தானிய தமிழர் பேரவை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் போன்ற அமைப்புகள் முயற்சி எடுத்தன. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் எந்த ஒரு உறுப்பு நாடும் அதனைக் கவனித்தில் எடுக்கவில்லை.

    //சர்வதேசத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடு உள்ளது.// டமிழன்
    ஆனால் பொறுப்பாக நடந்த கொள்ளவில்லை என நான் மட்டும் கூறவில்லை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளே தெரிவிக்கின்றன.

    ‘இலங்கை அரசு சட்ட ரீதியானது மக்களால் தெரிவு செய்யப்பட்டது.’ அதனால் தான் இலங்கை அரசைத் தட்டிக் கேட்கிறோம். இலங்கை அரசுக்கு தனது மக்கள் மீது கூடிய பொறுப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    ‘புலிகள் சட்டரீதியற்ற அமைப்பு ஜனநாயக தன்மையற்றது மக்களால் தெரிவு செய்யப்படாதது யாருக்கும் பொறுப்புக் கூறத் தேவையற்றது.’ அதனால் தான் புலிகள் மீது குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்கிறோம்.

    டமிழன் ‘ஒரு துப்பாக்கி வேட்டைக் கூட காதால் கேட்க முடியவில்லை. பிஸ்டல் குறுப் பயம் இல்லை’ இவ்வளவு அமைதிகொண்ட அந்த இடம் சொர்க்கத்தில் தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இலங்கையில் உள்ளது என்பதை நம்ப முடியாமலுள்ளது. புலிகளற்ற வடக்கு கிழக்கில் அமைதியும் சமாதானமும் பொங்கினால் நானும் உங்களுடன் சேர்ந்து மகிழ்வேன் ஆனால் எனது பின்புத்தி யதார்தத்தைப் பார் என்று தடுக்கிறது. டமிழன். மற்றும்படி உங்கள் நம்பிக்கையைக் குலைப்பது எனது நோக்கமல்ல.

    Reply
  • damilan
    damilan

    தமிழரின் பிரச்சினையை மிருகங்களுடன் உவமை காட்டி ஒப்பிட்டு தெளிய வைக்க வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்காது என நம்புகிறேன். நான் சொல்லிய விடயம் 01.03.2009 ல் நடந்து கொண்டிருப்பதை சென்ற வருடம் மக்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் கொல்லப்பட்டிருக்கலாம். தற்போது அவ்வாறு நடைபெறுவது இல்லை. ………………..

    Reply
  • palli
    palli

    பல்லி நினைக்கிறது இந்த கட்டுரையின் பின்னோட்ட வடிவம் முடிவுக்கு வருகிறது என. நல்லதுதான் ஆனால் இதில் வேதனை என்னவெனில் மிக ஆக்கபூர்வமான கட்டுரை இருந்தும் பல அனுபவம் வாய்ந்தவர்களின் பின்னோட்டம் ஆனால் முடிவு?? பார்த்திபன் பல்லி சொல்லி பார்த்திபன் தெரிந்து கொள்ளகூடிய எந்த சம்பவத்தையும் இதுவரை பல்லி பின்னோட்டம் விட்டத்தில்லை. பலருக்கு தெரிந்த தெரிய கூடியதையே பல்லி தனது கருத்தாக இங்கே கொண்டு வந்துள்ளது. பல்லி எழுதிய சம்பவம் ஏதும் வன்னியில் நடக்கவில்லை என பார்த்திபன் சொன்னால் பல்லி ஏற்று கொள்கிறது. காரனம் பார்த்திபனுக்கும் தமிழமக்கள் மீது அக்கறை உண்டு என்பதை பல்லி பல பின்னோட்டத்தில் தெரிந்துகொண்டேன். பார்த்திபன் பல்லியை பொறுத்தமட்டில் புலியா அரசா என்பதல்ல. மக்கள் சார்பாகவே பல்லியின் கருத்து இருக்கும்.

    டமிலன் எனது பின்னோடம் அனைத்திலும் மனிதரை நான் மதிக்க தவறவில்லை. ஆனால் ஒரு உயிரின் பெறுமதி தெரியாத மகிந்தாவையும்; பிரபாவையும் என்னால் மனிதராக பார்க்க முடியவில்லை. அது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆனால் பல்லியின் விமர்சனம் தொடர்ந்தும் உயிரை மதிக்காத யாரையும் மனிதனாக மதிக்காது.

    ஜெயபாலன் எனது பின்னோடம் எதுக்கும் எப்போதுமே தாங்கள் விளக்கம் அழிப்பதில்லை. காரனம் இது எல்லாம் ஒரு பின்னோடம் என்பதாலோ அல்லது விளக்கினாலும் பல்லிக்கு விளங்கதென்பதாலோ பல்லிக்கு தெரியாது. ஆனாலும் கீழே கவனிக்கவும்.

    //இந்தக் கருத்துடன் உடன்பாடாமலிருப்பதற்கு தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு எந்த நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதனால் புலிகளை அரசினால் வேரறுக்க முடியாது//

    இது சமீபகாலத்தில் இராக் சர்வதேசத்துக்கு கற்றுதந்த பாடம். இருப்பினும் நான் எதை சொல்லவந்தேன் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இது எனது கருத்தல்ல. ஜெ வி பி யின் கருத்து போர் முடிந்து விட்டால் இந்தியா சொல்வது போல் தமிழருக்கு எதுவும் கொடுக்க தேவையில்லை ஏதாவது பாத்து கொடுத்தால் போச்சு என்பது போல் இல்லையா?? அந்த கருத்தை அரசுடன் அரசு ஏதாவது தரும்என ஏப்பம் விடுபவர்கள் சிந்திக்கட்டும்.

    //அரசும் புலிகளும் குறைந்தது 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்து புலிகள் மக்களினுள் ஊடுருவாமல் அவர்களைச் சுயமாகச் சிந்தித்து விரும்பியது போல் முடிவெடுக்க அனுமதித்தால் உண்மை தெரிந்துவிடும்.

    இதுவே பல்லியின் கருத்தும் அல்ல அவாவும்கூட.
    பல்லி.

    Reply
  • accu
    accu

    ஜெயபாலன் நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்துள்ளீர்கள். உங்கள் கட்டுரையின் சாராம்சமான வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் அவலநிலையும் வகை தொகையான அவர்களின் இறப்பும் உடன் நிறுத்தப்படவேண்டுமென்ற அடிப்படையிலேயே நான் என் பின்னூட்டத்தை விட்டேன்.//வழிமுறைகள் என்ன என்பதை உங்கள் ஆக்கத்தில் என்னால் காணமுடியவில்லை.//
    இதில் நான் கேட்ட வழிமுறைகள் என்பது அந்த மக்களின் அழிவைத் தடுக்கும் வழிமுறையே அன்றி இலங்கைத் தமிழர்க்கு என்ன தீர்வு வைக்கப்படவேண்டுமென்பதல்ல.

    அடுத்து //இடம் பெயர்ந்த மக்களின் வசதிக் குறைவுகள் தற்க்காலிகமானவை. வன்னியில் அகப்பட்டு இருக்கும் மக்களின் நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இது படிப்படியக நிவர்த்தி செய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு. வெகு விரைவில் முற்றாகத் தீரும். //
    இதை நீங்கள் முற்றிலும் தவறாய் புரிந்துகொண்டுள்ளீர்கள்.நான் இடம்பெயர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டது புலிக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து தப்பி வந்து அகதிமுகாமில் தங்கியிருக்கும் மக்களையே. இவர்களின் வசதிக்குறைவுகள்தான் தற்க்காலிகமானவை என்றேன். நீங்கள் கூறிய 2000 இறப்பு, 7000 காயங்கள், இங்கே நடக்கவில்லை தானே! ஏனெனில் இப்படி வந்தவர்களை ராணுவம் கொலை, கற்பழிப்பு, கருச்சிதைவு, சித்திரவதையென ஒட்டுமொத்த அநியாயத்துக்கும் ஆளாக்குவதாக ஒரு செய்தி விசமத்தனமாகப் பரப்பப்படுகிறது. இது புலம்பெயர் மக்களை ஏமாற்றவும், புலிக்கட்டுப்பாட்டில் உள்ள மக்களை பீதிக்குள்ளாக்கி வெளியேறாமல் தடுப்பதற்க்குமான உத்தியென்பதே என் எண்ணம். இது தவறாகவும் இருக்கலாம். இது தொடர்பாய் சிலருடன் இன்றும் பேசினேன். இந்த முகாமிலுள்ள ஒரு பெண் இரு பெண்குழந்தைகளுடன் இருப்பவர்[12,9 வயது] என் நண்பரின் மைத்துனி யுனிசெப் உறுப்பினர்கள் வந்து நிறைய உதவிகள் செய்வதாகக் குறிப்பிட்டார்.

    ஜெயபாலன் ஹொலிவூட் படத்துக்கு கதை வசனம் எழுதுபவனல்ல நான் எமது மக்களின் சிதைவில்லாத வாழ்வுக்கு என்ன வழியெனத் தேடும் சாதாரண அகதித்தமிழன்.
    //தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு எந்த நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதனால் புலிகளை அரசினால் வேரறுக்க முடியாது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை முன் வைக்கும் வரை புலிகளை இல்லாதொழிக்க முடியாது.//ஜெயபாலன் உங்களுக்கும் புலிகளின் பின்னடைவு ஜீரணிக்கக் கஷ்டமாய் உள்ளது போல் தோன்றுகிறது. உங்களின் இந்தக் கருத்தை நான் மறுதலிக்கிறேன். என் பார்வையில் எமக்குக் கிடைத்த,கிடைக்கவிருந்த பல தீர்வுகளை தடுத்தவர்கள் புலிகள். இனியும் கிடைக்காமல் இருக்க பல செயல்கள் செய்துவிட்டார்கள். இவர்கள் இப்போ செய்யக்கூடிய ஒரே நல்ல செயல் மக்களுக்காக ஆயுதங்களை கீழே வைப்பதே. மீண்டும் பேசுவோம்.நன்றி.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //ஜெயபாலன் எனது பின்னோடம் எதுக்கும் எப்போதுமே தாங்கள் விளக்கம் அழிப்பதில்லை. காரனம் இது எல்லாம் ஒரு பின்னோடம் என்பதாலோ அல்லது விளக்கினாலும் பல்லிக்கு விளங்கதென்பதாலோ பல்லிக்கு தெரியாது. ஆனாலும் கீழே கவனிக்கவும்.// பல்லி

    நண்பர் பல்லிக்கு நான் பெரும்பாலும் எனது கட்டுரைகளில் எனது கருத்துக்களுடன் யாராவது முரண்பட்டு இருந்தால் பெரும்பாலும் அதற்கு பதிலளிக்க விரும்புவேன். நீங்கள் அவ்வாறான ஒரு முரண்பாடான கருத்தை வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. மேலும் என்னை நோக்கி நீஙகள் கேள்வி எழுப்பவும் இல்லை. அதனால் உங்களை நோக்கி நான் கருத்துப் பதிவு செய்யவில்லை.

    ஆனால் சில தினங்களுக்க முன் உங்களுடைய கருத்துப் பதிவொன்று தொடர்பாக தனிப்பட்ட முறையில் நீஙகள் தேசம்நெற்றுக்கு வழங்கிய மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். ஆனால் பதிலில்லை. முடிந்தால் பாவனையில் உள்ள ஒரு மின் அஞ்சலை எமக்கு அறியத்தரவும்.

    உங்கள் பதிவுகளை நான் பார்க்கத் தவறுவதில்லை. நான் மறந்தாலும் நண்பர்கள் சுட்டிக்காட்டதத் தவறுவதில்லை. உங்கள் பங்களிப்பிற்கு நன்றிகள். உங்கள் பதிவுகளை தொடருங்கள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    அக்கு நாம் இருவரும் வேறுபடும் புள்ளி ஒன்று. அது நீங்கள் புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு பொறுப்பு என்கிறீர்கள். எனது அபிப்பிராயம் புலிகளும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு பொறுப்பானவர்கள் என்பது. மற்றும்படி எனது எழுத்துக்கள் உங்களை பாதித்து இருந்தால் மன்னிக்கவும்.

    //ஜெயபாலன் உங்களுக்கும் புலிகளின் பின்னடைவு ஜீரணிக்கக் கஷ்டமாய் உள்ளது போல் தோன்றுகிறது.// அக்கு.
    புலிகளுடைய பின்னடைவு அல்ல எனது பிரச்சினை. தமிழ் மக்கள் நலனில் அது ஏற்படுத்தும் தாக்கம் தான் முக்கியமானது. இலங்கை அரசு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்பது மிக முக்கிய விடயம்.

    //இதில் நான் கேட்ட வழிமுறைகள் என்பது அந்த மக்களின் அழிவைத் தடுக்கும் வழிமுறை// அக்கு.
    http://thesamnet.co.uk/?p=8230
    PEARL அமைப்பின் கோரிக்கை முல்லையில் உள்ள வன்னி மக்களின் பாதுகாப்பு சார்ந்ததாக இருந்தால் PEARL பின்வரும் கோரிக்கைகளையே முன் வைத்திருக்க வேண்டும்.
    வெளியெற்றப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் சர்வதேசமும் பொறுப்பேற்க வேண்டும்.
    வெளியேற்றப்படும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
    எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
    தற்காலிகமான முகாம்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
    மிக விரைவில் சில மாதங்களுக்குள் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
    இந்த யுத்தத்தில் உயிரிழப்புகள், அங்கங்களை இழந்தவர்கள் உடமைகளை இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். PEARL

    Reply
  • murugan
    murugan

    “புலிகளுடைய பின்னடைவு அல்ல எனது பிரச்சினை. தமிழ் மக்கள் நலனில் அது ஏற்படுத்தும் தாக்கம் தான் முக்கியமானது.”

    இது குறித்து ஜெயபாலன் மட்டும் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழ மக்களில் பெரும்பான்மையோர் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம். ஒரு சமூகம் தனது சிந்தனை திறனின் மூலமே வளர்ந்து செல்லும் அல்லது சிதைந்து செல்லும். தமிழ் சமூகம் சரியாக சிந்திக்கின்றதா?

    Reply
  • palli
    palli

    // தமிழ மக்களில் பெரும்பான்மையோர் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம்//

    இது யாரை குறிப்பிடுகிறது??
    புலம் பெயர் பெரும்பாண்மையா??
    ஊடக பெரும்பாண்மையா?
    பின்னோட்ட ஈழ மக்கள் பெரும்பாண்மையா??
    வன்னி மக்கள் பெரும்பாண்மையா??
    அரச கட்டுபாட்டுக்குள் பெரும்பாண்மையா??
    அமைப்பை சார்ந்த பெரும்பாண்மையா??
    மக்களால் தெரிவு செய்யபட்ட பெரும்பாண்மையா??

    இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது ஜெயபாலன் தனியாக சிந்திப்பதில் தவறு இல்லை ஆனால் அப்படி பலர் சிந்திக்க அவரது சிந்திப்பு ஒரு வழிகாட்டியாக இருக்கட்டுமே.

    Reply
  • murugan
    murugan

    தமிழ மக்களில் பெரும்பான்மையோர் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம்//

    இது யாரை குறிப்பிடுகிறது??-பல்லி

    புலம் பெயர்நாடுகளில் லட்சக் கணக்கில் அணிதிரண்டு எங்கள் தலைவன் பிரபாகன் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம் போகுதே அந்த பெரும்பான்மைதான்.

    இந்த புலிஆதரவாளர்களாலேயே வன்னி மக்களை காப்பாற்ற முடியும். அவர்களே இந்த அவலங்களின் விதைநெல்லு. அவர்கள் விதைத்தது வன்னியில் பிணங்களாக விளைந்து கொண்டிருக்கிறது.

    Reply
  • ashroffali
    ashroffali

    இழபபதற்கு நேரம் மட்டுமில்லை எதுவுமே இல்லை என்ற நிலையில் தான் வன்னியின் விடுவிக்கப்படாத பிரதேச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புலிகளால் பலாத்காரமாக இடம் பெயர வைக்கப்பட்ட அவர்கள் இப்போதைக்குத் தம்மிடமிருந்த அனைத்தையும் இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்கு உயிரைத் தவிர ஒன்றுமேயில்லை.அதையும் இழந்து அதன் மூலம் தமது இயக்கத்துக்கு வருமானம் கிடைக்க வழி செய்து தரும்படி தான் அந்த மக்கள் புலிகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அதுதான் களத்தின் யதார்த்தபூர்வமான உண்மையாகும்.

    புலிகள் எப்போதும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மற்றும் தகவல்கள் மூலமாகவே தமது இயக்கத்தைக் கட்டியெழுப்ப முயன்றுள்ளார்கள். முயற்சி செய்துள்ளார்கள். மற்றபடி யதார்த்தத்தில் புலிகள் என்பது வெறும் காற்றடைத்த பலூன் என்பதுதான் எனது கருத்து. ஒரு இடத்தில் ஓட்டை போட்டுவிட்டால் அதன் மொத்த உருவமும் சிதைந்து போய் விடும். அது தான் புலிகளுக்கு இன்று நடந்துள்ளது.

    ஆனாலும் தங்கள் அவலங்களை முடிந்தளவுக்கு மறைத்து தொடர்ச்சியாக தங்களது வருமானத்திற்கான வழியைத் தேடிக் கொள்வதிலேயே புலிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.அதற்காகவே மக்களின் துன்பங்களை மிகைப்படுத்தி அவலங்களாக சித்தரிக்க முற்படுகின்றனர்.அதன் மூலம் இறுதி மூச்சு விடும் தறுவாயிலிருக்கும் தங்களுக்க யாராவது ஒட்சிசன் தர மாட்டார்களா என்று புலிகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது வரை காலமும் புலிகளுக்காக வக்காலத்து வாங்கி தங்களை ஹீரோக்களாக சித்தரித்துக் கொண்டிருந்தவர்கள் அல்லது அப்படி தங்களை முன்னிறுத்த முயற்சி செய்தவர்களும் அதற்குத் துணை போகின்றனர்.ஏனெனில் புலிகளின் அழிவின் பின் தங்களைப் பற்றிய விம்பமும் சிதைந்து போகும் என்பது அவர்கள் அறியாத விடயமல்ல. எனவே அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக புலிகள் அழியக் கூடாது என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக எத்தனை ஆயிரம் பொது மக்களையேனும் பலி கொடுப்பதற்குத் தயாராக உள்ள புலிகளுடன் தாங்களும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.

    இலங்கையின் மட்டுமன்றி வெளிநாடுகளில் வெளிவரும் தமிழ் ஊடகங்களும் ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றன. அதுதான் காலத்திற்கேற்றவாறு வருமானத்திற்காக வால் பிடித்தல் மற்றும் கயிறு திரித்தல் என்பனவாகும். இந்த ஊடகங்கள் புலிகளின் வெற்றியில் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றி ஒரு போதும் சிந்திப்பதேயில்லை.மாவிலாற்றுத் தண்ணீரை புலிகள் இரண்டு வார காலத்துக்கும் மேலாக தடுத்து வைத்திருந்ததை வெற்றியாக கொண்டாடிய இவர்கள் அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. ஆனால் மாவிலாற்றுத் தண்ணீரை திறந்து விட இராணுவம் நடவடிக்கை எடுத்தபோது அது புலிகளுக்குத் தோல்வியாக அமையத் தொடங்கியதும் மக்களின் அவலங்கள் பற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள். வன்னியிலும் அதுதான் நிலை. வவுனியாவுக்கு மேற்கே பாலமோட்டையில் ஒரு வருட காலம் மட்டில் இராணுவ முன்னகர்வு முயற்சிகள் தடைப்பட்டபோது அதை வெற்றியாகக் கொண்டாடியவர்கள் அக்கால கட்டங்களில் பொதுமக்கள் பற்றிக் கதைப்பதையே மறந்துவிட்டிருந்தனர்.மடு புனித பூமிக்குள் ஆயுதங்களுடன் புலிகள் முகாம் அமைத்துக் கொண்டு அராஜகம் செய்த போது மடுவை மீட்க முடியாமல் இராணுவம் திணறுவதாக செய்தி எழுதியவர்கள் அதன் மூலம் பல்லாயிரம் பக்தர்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டிருப்பதை கண்டும் காணாமல் நடந்து கொண்டார்கள்.இந்த நிலை கிளிநொச்சியை இராணுவம் மீட்கும் வரையும் தொடர்ந்தது. அதுவரை எத்தனை இராணுவத்தினர் பலி என்பது பற்றிய செய்திகளை மட்டுமே முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்தவர்கள் இப்போது எத்தனை பொதுமக்கள் பலி என்று நாளாந்தம் ஸ்கோர் சொல்வது போன்று பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.எப்படியோ பிணங்களை வைத்து அரசியல் செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.

    இப்போது கூட அரசாங்கம் வன்னி மக்களுக்கு தேவையான உணவு வகைகளை ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் என்பன ஊடாக விநியோகம் செய்து வருகின்றது. ஆனால் அந்த உணவு வகைகளை பறித்தெடுத்துக் கொண்டு மக்களை விரட்டி இடம்பெயர வைத்து அவல நிலைமையைத் தீவிரப்படுத்துவதில் தான் புலிகள் முனைப்புக் காட்டுகின்றனர். அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்கும் போர்வையில் தாங்களும் பாதுகாக்கப்படலாம் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.

    மாவிலாற்றுத் தாக்குதலை அடுத்து மூதூர் மக்களை புலிகள் கேடயமாக பிடித்து வைத்திருந்தார்கள். அந்த மக்கள் என்றைக்கு புலிகளின் பிடியை விட்டு வெளியேறினார்களோ அடுத்த இரண்டாவது நாளில் புலிகள் மூதூர் மற்றும் கட்டைப்பறிச்சானிலிருந்து தலைதெறிக்கத் தப்பியோடியதை நேரில் கண்ட அனுபவம் எனக்குண்டு. அந்த அனுபவம் தான் புலிகள் இதுவரை வன்னி மக்களை கிடுக்கிப் பிடியாக தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கான அடிப்படைக் காரணமாகும். அதனை மறைக்கவும் மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்பவுமே அவர்கள் பொதுமக்களின் அவலங்களை முதன்மைப்படுத்துகின்றார்கள். அதே நேரம் இராணுவத் தாக்குதல்களில் பாதிக்கப்படுகின்றவர்கள் எல்லாம் பொதுமக்களாக இருக்கும் பட்சத்தில் புலிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றார்கள்? இராணுவத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கலையை பொதுமக்களுக்கும் அவர்கள் கற்றுக் கொடுக்கலாமே? இராணுவம் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குமாயின் இன்று வன்னியில் ஒருவரும் எஞ்சியிருக்கப் போவதில்லை. எப்போதோ ஒட்டுமொத்த வன்னி மக்களையும் அழித்து விட்டிருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே?

    எனவே இன்றைக்கு வன்னி மக்களின் ஒட்டுமொத்த அவலங்களுக்கும் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் புலிகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.எனவே இனியாவது புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்கள் உண்மை நிலை அறிந்து எழுத முன் வரவேண்டும். அதுதான் மக்களின் அவலங்களைத் தீர்ப்பதில் ஓரளவுக்காவது பங்களிப்பை நல்கும்.

    திரு ஜெயபாலன் அவர்களே……..இந்த வேண்டுகோள் உங்களுக்கும் சேர்த்துத் தான்.ஏனெனில் நான் மட்டுமல்ல நாங்கள் பலரும் உங்கள் மீது நல்லபிப்பிராயத்தைக் கொண்டுள்ளோம். உங்கள் கருத்துக்களில் சில தவறுகளைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன். தவறாக எண்ணாமல் சீர்தூக்கிப் பார்க்கும்படி தயவாய் வேண்டிக் கொள்கின்றேன்.

    //இவ்வாறு மனித அவலங்கள் மிக மோசமாகிக் கொண்டு உள்ளது. செல் வீச்சில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சிதறிய உடலை பதினாறுவயதுப் பையன் பையினுள் அள்ளிச் சென்றதாகவும் உடல்கள் வீதிகளில் அனாதரவாக கிடப்பதாகவும் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
    இலங்கை அரசு சர்வதேச செய்தியாளர்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் யுத்தப் பகுதிக்குள் அனுமதிக்காத போதும் தகவல் தொடர்பின் வளர்ச்சியும் மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சியும் ஓரளவுக்காவது தகவல்களை வெளியே கொண்டு வருகின்றன. இந்த அவலங்களை புலிகளின் சார்பு ஊடகங்கள் வெளிக் கொணருவதில் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்த போதும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்கின்ற உண்மை ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வரப்பட்டதில் அந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.//

    புலிகளின் ஊடகங்கள் அந்த அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் வேறு நோக்கம் கொண்டவை என்பதை ஏற்றுக் கொண்டமைக்காக உங்களைப் பாராட்டுகின்றேன்.அப்படிப்பட்ட ஊடகங்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? மேலும் ஒரு சடலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாற்பது பேர் அல்லது ஐம்பது பேர் தினமும் கொல்லப்படுவதாக பிரச்சாரம் செய்பவர்கள் அந்த உடல்களை காட்சிப்படுத்தலாமே? இராணுவத்தினரின் உடல்களைக் காட்சிப்படுத்துகின்றவர்களுக்கு அது ஒன்றும் பெரிய விடயமல்லவே? சாட்சி இல்லாத விடயங்களை நம்ப முற்படும் பிற்போக்குத் தனம் காரணமாகவே புலிகள் இதுவரை தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    //இலங்கை அரசாங்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மென்போக்கை கொண்டிருந்த ஜோன் ஹொல்ம்ஸ் பெருமளவான பொது மக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கத்தின் தாக்குதல்கள் காரணமாக இருந்தது பற்றி அழுத்தமாக எதனையும் குறிப்பிடவில்லை//

    அதற்கான காரணம் புலிகள் பொதுமக்களைப் பலாத்காரமாக தடுத்து வைத்திருப்பதுதான் என்ற உண்மை தெரிந்த பின்பும் அப்படியொரு அறிக்கையை நீங்கள் அவரிடம் எதிர்பார்க்கலாமா? தவிரவும் பொய்யான தகவல்களை நீங்கள் நம்புவதற்காக அடுத்தவரும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?

    //அரசு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்கிறது. இனப்படுகொலை செய்கிறது. மனித உரிமைகளை மீறுகிறது என்ற அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற பிரித்தானிய தமிழர் பேரவை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் போன்ற அமைப்புகள் முயற்சி எடுத்தன. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் எந்த ஒரு உறுப்பு நாடும் அதனைக் கவனித்தில் எடுக்கவில்லை//

    ஆதாரத்துடன் சமர்ப்பித்திருந்தால் அனைத்து நாடுகளினதும் ஆதரவை பெற்றிருக்கலாமே? அதற்குப் பதிலாக ஆதாரமற்ற எந்த விடயத்துக்காகவும் யாரும் முன்வரமாட்டார்கள் தானே?

    //இலங்கை அரசினால் கொல்லப்பட்டவர்களிலும் பார்க்க புலிகளால் கொல்லப்பட்டவர்கள் மிக மிகச் சிலரே.//

    உங்களால் பட்டியலிட முடியுமா? இது எனது சவால் என்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

    பல்லி………………..

    //ஆனால் பல்லியின் கருத்து சர்வதேசத்துக்கு அல்லது ஒரு பிரச்சனைக்கோ ஒரு சாட்ச்சியல்ல//

    இப்படித்தான் நீங்கள் இதை சாட்சியாக கருதாவிட்டாலும் உங்கள் பின்னூட்டத்தை வாசிப்பவர்கள் அதை உண்மையொன்று நம்பத்தானே செய்வார்கள்? அப்படித்தான் நீங்களும் அடுத்தவரின் பொய்யை நம்பிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

    //அரச கட்டுபாட்டுக்குள் வந்த வன்னிமக்கள் வாழும் இடங்கழுக்கு மின்சாரவேலி போட்டு கொடுத்திருக்கு. வயோதிபரை தனியாக பிரித்து வைத்திருக்கு. யுவதிகள் ராணுவ சேவையில் கலக்கபட்டிருக்கு. இளம் சமுதாயம் புதைக்கபடுகிறது//

    கடந்த ஞாயிற்றுக் கிழமை வீரகேசரி பத்திரிகை பாருங்கள். உண்மை தெரியும்.

    Reply
  • murugan
    murugan

    அஸ்ரப் அலி குறிப்பிடும் சில விடயங்கள் கவனத்திற்குரியன. வன்னியில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடிய உறவினர்கள் தமக்கு கிடைத்த தகவல்களால் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். புலிகள் ஒருவர் இறந்தால் அதை பல கோணங்களில் படமெடுத்து பல பேர் இறந்து விட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.

    தமிழில் பரப்பப்படும் செய்திகள் தமிழ்நெற்றில் வருவது இல்லை.

    Reply
  • palli
    palli

    வீரகேசரி என்ன வன்னி மக்களின் வாக்கு மூலமா?? வீரகேசரியை பல்லி குறைவாக பார்க்கவில்லை. ஆனால் தேசத்தை குறைத்து எடை போடாதீர்.

    //ஆனால் பல்லியின் கருத்து சர்வதேசத்துக்கு அல்லது ஒரு பிரச்சனைக்கோ ஒரு சாட்சியல்ல//

    இதை பல்லி சொன்னதன் நோக்கம். பல்லி போன்றோர் தவறுவிட்டாலும் (விடப்படாது) பாதிப்பு இல்லை. ஆனால் ஜோன் கோம்ஸ் போன்ற மக்களுக்காக செயல்படுபவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சர்வதேசத்துக்கு சாட்சியாக மாறிவிடும். திரும்பவும் பல்லியின் பலனை வாசிக்கவும்.

    Reply
  • செல்லாச்சி
    செல்லாச்சி

    முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாமில் இடம்பெயர்ந்த மக்கள்.
    http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/03/090302_vavuniacamp.shtml

    இவ்விபரமான ஒலிவடிவமும் அதிலுள்ளது.
    http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2009/03/090302_kathircamp?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1

    இந்தப் பின்னூட்டம் நான் யாருக்கும் சார்பாக இடவில்லை. ஒரு தகவல்தான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    செல்லாச்சி இணைத்துள்ள பிபிசியின் இணைப்புகளைக் கேட்டாவது தெளிவு பெற யாராவது முயல்வார்களா?? அல்லது இவற்றையும் விமர்சித்து புலிகளுக்கு கொடி பிடிப்பதற்காக மக்களை பலி கொடுக்கப் போகின்றோமா ??

    Reply
  • ashroffali
    ashroffali

    தேசம் நெற்றில் கருத்துப் பரிமாற வருகின்றவர்கள் விடயத்தை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் என்ற கருத்தையே இதுவரை காலமும் நான் கொண்டிருந்தேன். இப்போதைய நிலையில் அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்.

    வன்னி விடுவிக்கப்படாத வரை அங்கு ஏராளமான கூண்டுச் சிறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தனித்தனியாக முட்கம்பி வேலியால் பிணைக்கப்பட்டு புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்த கூண்டுச் சிறைகளில் நிற்கும் ஒருவருக்கு உடலை அசைக்கவோ தலையை நிமிர்த்தவோ கூட முடியாதளவுக்கு அது குறுகலானதாக இருந்தது. ஆனால் இதுவரை அது பற்றி யாரும் வாய் திறக்கக் காணோம்.தேசம் நெற் கூட அந்த விடயத்தை போதுமான அளவில் கண்டு கொள்ளவில்லை. மற்றவர்கள் புலிக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு தேசம் நெற் இதுவரை மாற்றமடையாத போதிலும் முற்றுமுழுதாக புலிகளின் தவறுகளை விமர்சிக்கவோ சுட்டிக் காட்டவோ தேசம்நெற் கூட இதுவரை முன்வரவில்லை என்பதே யதார்த்தம்.

    வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களைச் சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருப்பது குறித்து இப்போது எல்லோரும் விமர்சிக்கின்றார்கள். ஆனால் அதன் உள்ளார்த்தம் என்ன என்பதை எவருமே ஆராய்ந்து பார்ப்பதாக இல்லை.

    இடம்பெயர்ந்த மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் புதியவர்கள் என்ற வகையில் சில அசெளகரியங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத விடயம் தான். ஆனால் அரசாங்கம் அவர்களுக்குப் போதுமான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. அதனை யாராலும் மறுக்க முடியாது. சமைத்த உணவு வழங்கப்படுவதில் ஒரு சில குறைபாடுகள் நிலவுவது சுட்டிக்காட்டப்பட்ட உடனேயே அரசாங்கம் அந்த மக்களுக்கு தாமே சமைத்துச் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது. அது பற்றி இதுவரை தேசம் நெற் கூட விரிவான செய்தியைத் தரவில்லை. ஆனாலும் ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிட வேண்டும். தேசம் நெற் திரு. ஜெயபாலன் உள்ளிட்ட ஒரு சிலரின் கட்டுரைகள் தவிர தேசம் நெற்றின் செய்திகள் காத்திரமானவை. ஏனைய இணையத்தளங்களை விட சுடச்சுட செய்திகளை முந்திக் கொண்டு தருவதில் தேசம் நெற் முத்திரை பதித்து வருகின்றது. ஆனாலும் ஒரு சில கட்டுரைகளின் வாயிலாக இதுவரை காலமும் வெளிக்காட்டிய நடுநிலைமைக்குப் பதிலாக புலி ஆதரவுப் போக்கை நோக்கி மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

    மீண்டும் விடயத்துக்கு வருகின்றேன். அதாவது வன்னி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு ஏனைய மக்கள் சென்று வருவதற்கோ அல்லது அந்த மக்கள் கட்டுப்பாடற்று வெளியில் சுற்றி வருவதற்கோ அனுமதி வழங்கப்பட்டால் அது அப்பாவி வன்னி மக்களை ஏனையவர் சுரண்டி வாழ வழியேற்படுத்தி விடும். எனவேதான் அந்த மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் மோதல் நிலவும் பிரதேசங்களில் கொடிகட்டிப் பறக்கும் குழந்தை வியாபாரம் நலன்புரி நிலையங்களையும் ஆக்கிரமித்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் வெகு கவனமாக இருந்து வருகின்றது.இல்லாவிட்டால் இதுவரை காலமும் அந்த மக்களின் ஏராளம் குழந்தைகள் பலவந்தமாகவேனும் கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பார்கள். அதனை யாராலும் மறுக்க முடியாது. கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது கல்முனையில் சுனாமி பேபி என்று பெயர்பெற்ற அபிலாஷ் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.அந்தக் குழந்தையின் பெற்றோர் தமது குழந்தையின் உரிமையை நிரூபிக்க எத்தனை சிரமங்களை எதிர்கொண்டார்கள் என்பது யாருக்காவது ஞாபகம் இருக்கின்றதா? தமது குழந்தை இல்லை என்பது நிரூபணமாகத் தெரிந்த நிலையிலும் எத்தனையோ பேர் அந்தக் குழந்தையை உரித்தாக்கிக் கொள்ள மல்லுக்கட்டவில்லையா? அதன் நோக்கம் சுனாமியின் பெயரால் அந்தக் குழந்தையை வைத்து பொருளாதார வளம் தேடும் நோக்கமின்றி வேறென்ன? அதுபோல வன்னியின் இடம்பெயர்ந்த மக்களை வைத்து அந்த மக்களின் துன்பங்களை வைத்து வெளியார் யாரும் சுரண்டல்களை மேற்கொள்ளக் கூடாது என்பதே அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நோக்கமாகும். எனவே அந்த மக்களின் நலன் கருதியே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதால் அந்த மக்களும் அதனை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கின்றார்கள்.

    நலன்புரி நிலையங்களில் இளைஞர்கள் யுவதிகள் கடத்தப்படுவதாகவும் யுவதிகள் கற்பழிக்கப்படுவதாகவும் தேசம் நெற்றில் கூட பலர் பின்னூட்டம் விட்டிருந்தார்கள். அதுதான் வீரகேசரி பத்திரிகையை வாசிக்கும்படி கூறியிருந்தேன். வீரகேசரியில் வெளிவந்திருந்த ஒரு கட்டுரையில் நலன்புரி நிலையமொன்றின் உள்ளே இளைஞர் யுவதிகள் கூட்டமாக நிற்கும் காட்சி புகைப்படமாக்கப்பட்டிருந்தது. அதனால் தான் அதனைக் குறிப்பிட்டிருந்தேன். புலிகளின் பிரச்சாரத்தை உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கும் பல்லி போன்றவர்களும் அதை ஆதாரமாக வைத்து கட்டுரை எழுதும் ஜெயபாலன் அவர்களும் வன்னிக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானிக்க இலங்கை வரத் தயாராக இருந்தால் நான் அவர்களை நேரில் வன்னிக்கு அழைத்துப் போகத் தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா?

    Reply
  • murugan
    murugan

    நலன்புரி நிலையங்களில் இருப்பவர்கள் சுரண்டப்படும் அபாயத்தை விட அவர்களுள் புலி புகுந்து விடும் என்பதும் உண்மையானது.

    மேலும் புலி பிழை அரசு பிழை என சிந்தனையற்று சமப்படுத்தி எழுதுபவர்கள் தமிழ் நாட்டிலுள்ள குறுகிய ஆதரவுடைய திருமா வை.கோ போன்றவர்களுக்கு சமமானவர்கள்.

    சிறிது காலத்திற்கு முன் வரையில் நானும் அரசு தொடர்பாக மிகக் குழப்பத்துடன் இருந்தேன். என்றைக்கு புலம் பெயர் தமிழர்கள் பிரித்தானியாவில் பிரபாகரனை காப்பாற்ற (தெரியாமல் போனோம் என ஒரு பகுதி சொன்னாலும்- இது கூட மிக ஆபத்தானதுதான்) லடசக்கணக்கில் அணிதிரண்டார்களோ அன்றே நான் தெளிந்து விட்டேன். தமிழ் மக்கள் கிட்லரையே வேண்டும் என்கிறார்கள். அழியத்தான் போகிறோம் என அடம்பிடிக்கும் சமூகத்தை ஒன்றும் செய்ய முடியாது.

    அத்தோடு ஜிரிவி யை கவனித்துப்பாருங்கள். புலிகள் தேர்தலுக்கு வந்தாலும் அவர்களுக்கே ஓட்டுப் போட தமிழர்கள் தயாராக உள்ளனர். இவைபற்றி தேசம் நெற்றும் சிந்திப்பதில்லை.புலி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன ஆகும்?

    Reply
  • செல்லாச்சி
    செல்லாச்சி

    /புலிகளின் பிரச்சாரத்தை உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கும் பல்லி போன்றவர்களும் அதை ஆதாரமாக வைத்து கட்டுரை எழுதும் ஜெயபாலன் அவர்களும்/
    அஸ்ரப் அவர்களே நீங்கள் புலிகளின் ஜபிசியை தொடர்ச்சியாய் கேட்டிருக்க வேணும். முக்கியமாய் நேற்று. அதுகளை ஆதாரமாய் வைத்து ஜெயபாலன் கட்டுரை எழுதினால் அவருடைய டொக்டரே அவரை மென்டல் கொஸ்பிட்டலில் சேர்த்துப் போடுவார். களநிலைகள் விழங்காமல் எழுதுறீங்கள்.

    மற்றது நீங்கள் யார்? என்ன மாதிரியான வேலை பார்க்கிறீங்கள்? இலங்கையில் எந்தெந்தப் பாகங்களுக்கு, என்ன வாகனத்தில், என்ன மாதிரிப் பாதுகாப்புடன் மற்றும் என்ன உத்தரவாதத்துடன் கொண்டு போவீங்கள் என்பதை வலுவிளக்கமாய் சொன்னீங்கள் எண்டால் உங்களோட வர விரும்புபவர்களுடன் நானும்- பிரிட்டிஸ் பாஸ்போட் கோல்டரான நானும்- வாறன்.

    Reply
  • palli
    palli

    அஸ்ராப் வணக்கம்.
    தங்கள் பின்னோடம் பலது பல்லி படித்தும் எதுக்கும் பலன் சொன்னதில்லை. காரனம் முடியாதன நினைத்தல்ல. அது வேறு திசைநோக்கி போய்விடும் என நினைத்ததால். ஆனால் பல்லியும் பரபரப்பை பார்த்துதான் பலன் சொல்லுவதாக(புலி சொல்லுவதைநம்பி) தாம் மனம் கலங்குவதால் சற்று ஆறுதலுக்காக பல்லி தங்களின் பின்னோட்டதை அறுவை சிகிச்சை செய்ய முற்படுகிறேன்.

    //தேசம் நெற்றில் கருத்துப் பரிமாற வருகின்றவர்கள் விடயத்தை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் என்ற கருத்தையே இதுவரை காலமும் நான் கொண்டிருந்தேன் இப்போதைய நிலையில் அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்//
    அவசரபட வேண்டாம். வன்னி நிலையையும் கிழக்கின் பட்டிமன்றமும்(கருனாவா? பிள்ளயானா?) அதன்பின் ஒரு முடிவுக்கு வாங்கோ. ஏனெனில் நீங்கள் ஓடும் குதிரை மீது பணம் கட்டும் வியாபாரிதானே.

    //வன்னி விடுவிக்கப்படாத வரை அங்கு ஏராளமான கூண்டுச் சிறைகள்//
    விடுவிக்கபட்ட பின் கிராமமே சிறைதானே பார்க்கிறோமே.

    //தேசம் நெற் கூட அந்த விடயத்தை போதுமான அளவில் கண்டு கொள்ளவில்லை. மற்றவர்கள் புலிக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு தேசம் நெற் இதுவரை மாற்றமடையாத போதிலும் முற்றுமுழுதாக புலிகளின் தவறுகளை விமர்சிக்கவோ சுட்டிக் காட்டவோ தேசம்நெற் கூட இதுவரை முன்வரவில்லை என்பதே யதார்த்தம்//
    தேசத்தின் பின்னோட்டம் ஆரம்பத்தில் இருந்து படிக்கவும். முடியாது போனால். பல்லி; துரை; பார்த்திபன்; அஸ்ராப் பின்னோட்டங்களையாவது பார்க்கபடதா?

    //வன்னி மக்களின் ஒட்டுமொத்த அவலங்களுக்கும் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் புலிகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது//
    அதெப்படி தாங்கள் சொல்ல முடியும். இதுவும் ஒரு அராசக போக்குதானே. பல்லிக்கு இருக்கு மாற்று கருத்து. தங்களுக்கே விளக்கம் சிறிது வில்லங்கம் போல் உள்ளது. வீரகேசரி மட்டும்தான் புரியுமோ?

    //புலி ஆதரவுப் போக்கை நோக்கி மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது//
    அந்த பயம் வேண்டாம் அதுக்கு பார்த்திபன்; அக்கு ;துரை இன்னும் பலர் விடமாட்டார்கள். ஆனால் தம்மை போன்றோர் மிக வேகமாக சென்று அரசின் நடு வீட்டில் இருப்பது பின்னோட்டத்தில் அல்ல தங்களது ஏக்கத்தில் தெரிகிறது.

    //இடம்பெயர்ந்த மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் புதியவர்கள் என்ற வகையில் சில அசெளகரியங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத விடயம்//
    இதை தேசம் கிட்னஸ் புத்தகத்துக்கு முடிந்தால் அனுப்பி விடவும்.

    அஸ்ராப் மிகுதியும் தொடர்வேன் நேரம் உள்ள போது படியுங்கோ. இந்த வித்தியாகரன் நிலை என்ன என்பதை ஒருக்கா கேட்டு சொல்லபடாதா??

    பல்லியை வன்னிவரை கூட்டி சென்று மிருக காட்சிசாலை காட்ட தகுதி உள்ள மனிதரிடம் கொழும்பில் இருக்கும் வித்தியாகரனை விடுவித்து தரும்படி பல்லி கேட்பது தவறா?? அல்லது வன்னிக்கு மட்டும்தான் உங்கள் செல் வாக்கு செல் படியாகுமா??

    // யுவதிகள் கடத்தப்படுவதாகவும் யுவதிகள் கற்பழிக்கப்படுவதாகவும் தேசம் நெற்றில் கூட பலர் பின்னூட்டம் விட்டிருந்தார்கள்//
    இதுகென்ன வையித்திய சாலையில் சான்றிதழா வேண்டிதர முடியும்.?

    //சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருப்பது குறித்து இப்போது எல்லோரும் விமர்சிக்கின்றார்கள். ஆனால் அதன் உள்ளார்த்தம் என்ன என்பதை எவருமே ஆராய்ந்து பார்ப்பதாக இல்லை//
    இப்படி சொல்லி சொல்லிதானே 1982ல் இருந்து ஆராய்ந்து அனியாயமாய் போனோம். இப்போதும் சிலர் ஆராய்கிறார்கள். இன்னும் சிலர் ஆராய ஆசைப்படுவதும் தெரியும். இந்த ஆராட்ச்சியெல்லாத்தையும் எங்கவது மக்கள் இல்லாத பூமியாக பார்த்து வைத்து கொல்லுங்கள்.
    தொடரும் பல்லி.

    Reply
  • indiani
    indiani

    இன்றுவரையில் புலிகள் சொல்லிவந்த கதைகள் போல் அஸ்ரப்அலி அரசாங்கத்திற்காக சொல்கிறார். எமக்கு வாசிப்பது என்ன என்றும், எழுதுவது என்ன என்றும் தெரியாது என்ற பதங்களை பாஸிஸ்டுக்களும் புலிகளுமே பாவித்துள்ளார்கள். கருத்து எழுதும் எமக்கு விளங்கவில்லை என்றால் நீர் அஸ்ரப்அலி எங்களுக்கு விளங்கவைக்கவும். உங்களிடம்தானே அரச உதவிகள் ஊடகங்கள் நிறையவே உண்டு ஏன் உம்மால் எமக்கு விளங்க கைக்க முடியாது. இதை இப்பவே இதே தேசம் நெற்றில் செய்யுவும். காரணம் ஜரோப்பாவில் உள்ள ஊடகங்களில்- தேசம் நெற்றில்- இருபக்க செய்திகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது; அதோட இருபக்க கருத்துக்களையும் வெளியிட அனுமதிக்கிறது.

    இலங்கையில் பத்திரிகையாளர்கள் கடத்தப்படல், கொலை செய்யப்படல் எல்லாம் ஏன்? இவை ஏன் நடக்கிறது?. அரசு தனது கருத்தை மட்டுமே வெளியிட அனுமதிக்கிறது; முன்னர் புலிகள் செய்ததை பின்னர் மகிந்தா அரசு செய்கிறது என்பதை அஸ்ரப் அலி புரிந்து கொள்ள வேண்டும்.

    விடுதலைப் புலிகள மிகவும் வெட்கக் கேடான செயல்களை செய்துள்ளனர். செய்தும் வருகின்றனர்; அதையும் அறிவோம். ஜரோப்பாவில் உள்ள பெரும்பான்மையினர் புலிகளின் ஊடகங்களை கேட்கின்றனர். பலர் அதையே நம்பி ஏமாந்தும் உள்ளனர். பல புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதுதான் இதை உணரத் தொடங்கியுள்ளனர்.

    புலிகளை வளர்த்து விட்டதில் பெரும்பகுதி அரசுக்குண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அதேவேளை அரசு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏன்அங்கீகரிக்கக் கூடாது; அல்லது அரசியல்த் தீர்வை முன்வைக்கக் கூடாது. இந்த அரசியல்ப் பிரச்சினை உள்ளவரை அரசின் மீதான நம்பிக்கையீனம் இருந்து கொண்டேயிருக்கும் என்பதை மறந்திட வேண்டாம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை முன்வைக்கும்படி தூண்டி இந்நிலை மாற்றம்பெற நீங்கள் ஏன் உதவக்கூடாது. இவையே அரசுமீது நம்பிக்கையை கொண்டுவரும்.(தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கண்ட பிற்பாடு சகோதர படுகொலை பற்றி விமர்சிப்போம் கதைப்போம் என்று புலிகள் கூறியதுபோல் புலிகளை அழித்தொழித்த பிற்பாடு தமிழர் பிரச்சனை பற்றி கதைப்போம் என்று பதில்தர வேண்டாம்)

    ஒன்றாக வாழ்ந்த மக்களை புலிகள் வதைத்தபின்பு தற்போது நீங்கள் கொடுக்கும் உதவிகள் தேவையே. ஆனால் அம்மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு வைத்துவிட்டதாக அரசு நினைத்தால் அது மட்டமான யோசனையே.

    Reply
  • ashroffali
    ashroffali

    பல்லி ………//முற்றுமுழுதாக புலிகளின் தவறுகளை விமர்சிக்கவோ சுட்டிக் காட்டவோ தேசம்நெற் கூட இதுவரை முன்வரவில்லை என்பதே யதார்த்தம்//
    தேசத்தின் பின்னோட்டம் ஆரம்பத்தில் இருந்து படிக்கவும். முடியாது போனால். பல்லி; துரை; பார்த்திபன்; அஸ்ராப் பின்னோட்டங்களையாவது பார்க்கபடதா?………..//

    நான் கூறியது தேசம் நெற்றின் கட்டுரைகள் தொடர்பானது. நீங்கள் கூறுவது பின்னூட்டம் தொடர்பானது.கட்டுரைகளும் பின்னூட்டங்களும் ஒன்றாகாது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

    //அதெப்படி தாங்கள் சொல்ல முடியும். இதுவும் ஒரு அராசக போக்குதானே// என் கணிப்பைத் தான் சொன்னேன்.

    மற்றபடி நண்பர் திரு வித்தியாதரன் அவர்கள் இப்போதைக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரிடமிருந்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.இது ஒரு வகையில் செளகரியமானது.அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் வழக்குத் தொடரப்படும். அல்லது நிரபராதியாக காணப்பட்டால் விடுவிக்கப்படுவார்.அவற்றில் ஒரு வழிமுறையைத் துரிதப்படுத்த இப்போதைய மாற்றம் உதவும்.

    நண்பர் வித்தியாதரன் அவர்கள் எனக்கும் மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி வித்தி அண்ணா என்று விளித்து தொலைபேசியில் உரையாடுவேன். அத்துடன் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மாதம் தோறும் நடாத்தும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்புக்கும் தவறாது சமூகமளிக்கும் ஒருவராக அவர் விளங்கினார். இப்போதைய நடவடிக்கை பொலிஸ் துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ஆனாலும் அவருக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.

    இந்தியானி..

    //அரசு தனது கருத்தை மட்டுமே வெளியிட அனுமதிக்கிறது; முன்னர் புலிகள் செய்ததை பின்னர் மகிந்தா அரசு செய்கிறது என்பதை அஸ்ரப் அலி புரிந்து கொள்ள வேண்டும்.//

    அரசு தனது கருத்தை மட்டும் தான் வெளியிட அனுமதிப்பதாக இருந்தால் இலங்கையில் வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் இப்போதைக்கு மூடுவிழா நடத்தப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் கூட இலங்கையின் அனைத்துப் பத்திரிகைகளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்கையே கொண்டுள்ளன.அது மட்டுமன்றி அடிக்கடி அதிமேதகு ஜனாதிபதி அவர்களையே வம்புக்கு இழுக்கும வண்ணமான கார்ட்டூன்களையும் வெளியிட்டு வருகின்றன.இருந்தும் அரசாங்கம் பொறுமையோடு தான் நடந்து கொள்கின்றது. ஊடக சுதந்திரத்தை மதிக்கின்றது. அரசாங்கத்தின் நெகிழ்ச்சியான போக்கின் காரணமாகவே அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்கும் நோக்கில் ஒரு சில சக்திகள் ஊடகத் துறையினரை இலக்கு வைத்து தமது தனிப்பட்ட கோபதாபங்களைத் தீர்த்துக் கொண்டு அரசாங்கத்தை இக்கட்டுக்குள் மாட்டி விடுகின்றார்கள்.அவ்வளவுதான்.

    Reply
  • indiani
    indiani

    அஸ்ரப்அலி வித்தியாதரன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது. ஆனால் அரசுக்கு தெரியுதில்லை. தமிழர் என்ற காரணத்தால் அவரும் புலியாக்கப்பட்டுள்ளார்.

    அடுத்து பத்திரிகையாளன் பயங்கரவாதியுடன்கூட தொடர்பு கொண்டு செய்திகளை வெளிக்கொணர அரசு ஒத்துழைக்க வேண்டும். அதை இலங்கை அரசு செய்ததா? அல்லது அந்த பத்திரிகையாளனையே பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்தான் வைத்திருப்பதா? இதுதான் இங்குள்ள கேள்வி.

    உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இன்னுமொரு தமிழர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வெலிக்கடையில் உள்ளார் (திசைநாயகம்) அவர் ஏன் இப்படி சிறையில் வாடவேண்டும்.

    பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதிலும் சிறையில் வைக்கப் படுவதிலும் இலங்கைதான் உலகில் முதலிடம் வகிக்கின்றது என்பதை மறவாதீர்கள் அஸ்ரப்அலி. அதிலும் தற்போதய அரசே இதில் பலவற்றை செய்துள்ளது.

    நீங்கள் அரசை ஆதரித்து எழுதுவது தொழிலுக்காகவே. அதனாலேயே பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கபடுவதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

    நீங்கள் அரசை ஆதரித்து எழுதுவது தொழிலுக்காகவே. அதனாலேயே தேசம்நெற்ருக்கும் புலிச்சாயம் பூசிப் பார்க்கிறீர். இலங்கையில் அரசை ஆதரிக்காத பத்திரிகையாளர்கள் அவர்கள் தமிழனோ சிங்களவனோ புலியாக்கப்படுகிறார்கள். அழிக்கப்படுகிறார்கள். உதாரணம் லசந்தா.

    நீங்கள் அரசை ஆதரித்து எழுதுவது தொழிலுக்காகவே. அதனாலேயே பத்திரிகையாளர் மீதான தாக்குதல்களையும் கைதுகளையும் கண்டிக்காது நியாயப்படுத்துகிறீர்கள்.

    நீங்கள் ஒரு பத்திரிகையாளன் என்றால் சிறையிலுள்ள இரு பத்திரிகையாளர்களையும் கண்டித்து எழுதவும். பதிலுக்கு காத்திருக்கிறேன்.

    Reply
  • palli
    palli

    ஊடகவியாளன் என்றால் சும்மாவா என்ன.

    Reply
  • anpu
    anpu

    புலிகளின் சிறைகளை சித்திரவதைகளை நாங்கள் காலங்காலமாய் கண்டும் கேட்டும் அனுபவ்த்தும் அதுக்குப் பிகுதானே வெளிநாட்டுகடகு ஓடியந்தம். இது ஒண்டும் புதிய விசயமல்ல தமிழ்சனத்துக்கு விமர்சிக்க. ஆனால் அஸ்ரப்அலி இது உங்களுக்கும் சிங்களவர்க்கும் புதுசுதானே. அதுதான் அங்கலாய்க்கிறியள்.

    அடுத்து போரில் தப்பிப் பிழைத்த தமிழ்ச்சனத்துக்கு சாப்பாடு போடுற விதத்தை பெரிசுபடுத்தி எழுதப்படேலை எண்டும் அங்கலாயக்கிறியள் அஸ்ரப். இது நல்லாயில்லை. ஒரு நாய் மனிசனைக் கடிச்சால் அதுஒரு விடயமேயில்ல. மனிசன் ஒருத்தன் நாயொணட கடிச்சால்தான் அது ஒருவிடயமாய்த்தான் பாக்கவேணும்.

    வன்னிமக்களுக்கு செய்யவேண்டிய பாதுகாப்பு உணவு வேறு என்னென்ன தேவையோ அதைச்செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. நல்லது செய்யிறியள் செய்யுங்கோ. அதுகளை பார்த்து மற்றவங்கள்தான் பாராட்டவேணும். சுயதம்பட்டம் செய்வது எடுபடாது. அதுக்காக அதைப்பார்க்க ஜெயபாலன்தான் வேணும் எண்டு அடம்பிடிக்கிறதும் நல்லாயில்லை. யாரும் வரலாம் வந்து பார்த்து கண்டு கேட்டு கதைச்சு எழுதுங்கோ எனவிடுங்கோ. நீங்கள் செய்யும் நல்லவிசயமெல்லாம் வெளில வரும். ஏன்தயக்கம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    இந்தியானி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும்….

    அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற புலிகளின் வான் தற்கொலைத் தாக்குதலுக்கு நிலத்திலிருந்து யாராவது ஒருவர் வழிகாட்டியதாகவே இதுவரை ஒரு சந்தேகம் நிலவுகின்றது.அந்த சந்தேகத்தின் மீதான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தான் சுடர்ஒளி ஆசிரியர் வித்தியாதரன் அந்த நேரத்தில் கூடுதலாக தொலைபேசி அழைப்பில் இருந்த விடயம் அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மூலமாக பொலிசாருக்குத் தெரிய வந்தது. அத்துடன் அது புலிகளின் பிரதான தலைவர்களில் ஒருவருடனான தொலைபேசி உரையாடல் என்பதாகவும் தகவல் கசிந்தது. அதன் காரணமாகவே சந்தேகத்தின் பேரில் திரு வித்தியாரன் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில் அவர் விடுதலை செய்யப்படுவார். மற்றபடி புலிகளுடன் தொடர்பு இருந்த குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்படவில்லை.சுடர்ஒளி ஆரம்பமான காலம் தொட்டே அது புலிகளுக்கு ஆதரவான முறையில் தமிழர் குரலாக வெளிவரப் போகும் ஒரு பத்திரிகை என்பது தெரிந்தே இருந்தது. அப்படியிருக்க இப்போது போய் அதைக் காரணமாக வைத்து திரு வித்தியாதரனை கைது செய்திருப்பதாக கூறுவது முட்டாள்தனம். அப்படியெனில் எப்போதோ கைது செய்யப்பட்டிருப்பார். எனவே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதை வேறு திசையில் திசை திருப்பி ஆதாயம் தேட வேண்டாம்.

    ஜசீதரன் விடயம் வேறானது.
    ஒரு தற்கொலைதாரிக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் நேரடியாக புலிகளின் தேவைகளுக்குத் துணை நின்றது என்பதோடு அவர்களுக்கான உதவிகளை வழங்கியது என்பன போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளர் என்பதற்காக அவருக்கு சட்டத்தில் விதி விலக்கு அளிக்க முடியாது. தவறு செய்து விட்டு தான் பத்திரிகையாளன் என்பதால் தப்பி விடவும் முடியாது. அது ஜசீகரனுக்கு அச்சொட்டாகப் பொருந்தும்.

    மற்றபடி நான் ஒன்றும் தொழிலுக்காக இங்கு எழுத வரவில்லை. உங்களை விட எனக்கு வரலாற்றைப் பதிந்து வைப்பதிலும் தேடியறிவதிலும் ஆர்வம் அதிகம். உண்மைகள் உறங்கி விடக் கூடாது என்பதே எனது நோக்கம். அதைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

    Reply
  • Indiani
    Indiani

    Ashroffali thank you for your informations and comments- lets keep on comments/talk

    Reply
  • SUDA
    SUDA

    //நீங்கள் யார்? என்ன மாதிரியான வேலை பார்க்கிறீங்கள்? இலங்கையில் எந்தெந்தப் பாகங்களுக்கு, என்ன வாகனத்தில், என்ன மாதிரிப் பாதுகாப்புடன் மற்றும் என்ன உத்தரவாதத்துடன் கொண்டு போவீங்கள் என்பதை வலுவிளக்கமாய் சொன்னீங்கள் எண்டால்….// செல்லாச்சி.

    அஸ்ரப்அலி! மேலே செல்லாச்சி கேட்ட சந்தேகங்கள் நீண்ட நாட்களாக எனக்கும் இருந்து வந்தது. தமிழ் மக்களுக்கெதிரான அரச வன்முறைகளை பட்டவர்த்தனமாக அங்கீகரித்தும், நியாயப்படுத்தியும் பின்னோட்டம் வைத்ததன் மூலமும், அரசபடை சார்ந்த சில முக்கிய தகவல்களை தெரிவித்துக்கொண்டதன் மூலமும் தாங்கள் யார்? எந்நோக்கத்திற்காக தேசம்நெற்றில் வலம் வருகின்றீர்கள்? போன்ற சந்தேகங்களைத் தீர்த்துவைத்தீர்கள். நன்றி.

    Reply
  • sapi
    sapi

    அஸ்ரப் அலி வித்தியாதரனும், ஜசிதரனும் புலிக்கு உதவினார்கள் கைது செய்ய பட்டார்கள் [உங்களைப் பொறுத்த வரை] அப்ப லசங்க விக்கிரமசிங்க என்ன புலியில் இருந்தவரே?

    Reply
  • palli
    palli

    இவர் தொலை பேசியில் புலி பிரமுகருடனோ அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களுடன் பேசியிருப்பார் என்னும் சந்தேகமா? அல்லது பேசியுள்ளார்
    என்பது நிருபனமா?? அப்படியாயின் அவரை மரண இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் போது கைது செய்ய மன்னிக்கவும் கடத்தி செல்ல காரனம் என்ன என்பதை அவசரம் இல்லை ஆறுதலாக யோசித்து விட்டு வந்து சொல்லவும். இதில் பல்லியின் கவலை என்னவெனில் போனில் பேசுவதை அரசு மோப்பம் பிடித்து விடும் என்னும் சின்ன விடயத்தை கூட தெரியாதவர்தான் இந்த பத்திரிகையாளன் என்பது போல் சிலர் சொல்லுவது. ஊடகதுறை மீதே சேறு பூசுவது போல் பல்லிக்கு படுகிறது. ஒரு ஊடகவியாளனுக்கே இந்த நிலையெனில் மக்களுக்கு??

    Reply
  • palli
    palli

    // அப்ப லசங்க விக்கிரமசிங்க என்ன புலியில் இருந்தவரே?//
    இல்லை இவர் வித்தியாதரனுக்கும், ஜசிதரனுக்கும் உதவியதாக அஸ்ரப் சொல்லுவாரென தெரிந்துதானே இந்த கேள்வி??

    Reply
  • ashroffali
    ashroffali

    என் கருத்துக்கு எதிர்க் கருத்தை முன் வைப்பவர்கள் முதலில் என் கருத்தை நன்றாக வாசித்து விட்டு தங்களது கருத்தை முன் வைத்தால் நன்றாக இருக்கும்.

    சுடர்ஒளி ஆசிரியர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமைக்காக ஒரு போதும் கைது செய்யப்படவில்லை. விமானத் தாக்குதல் நடந்த நேரத்தில் அவரது தொலைபேசி அழைப்புக்கள் சம்பந்தமாகவே சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றபடி அவர் மீது வேறு குற்றச்சாட்டுகள் இல்லை.

    திரு லசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகின்றது. எனவே அது பற்றி எதுவும் இப்போதைக்கு கூற முடியாதுள்ளது. ஆனால் அந்தக் கொலைச் சம்பவத்துடன் அரசாங்கத்துக்கு தொடர்பு இல்லை என்பது விசாரணை முடிவின் போது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும். அதற்கான சில தடயங்கள் இப்போதைக்குக் கிட்டியுள்ளன.

    திரு லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக மர்ம ஆசாமிகள் தன்னைப் பின் தொடர்வதாக தனது மனைவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கும் தொலைபேசி மூலம் அறிவித்ததாக சொல்லப்படுகின்றது. அப்படியென்றால் அது தொடர்பில் அவர்கள் இருவரும் ஏன் பொலிசாருக்கு உடனடியாக அறிவிக்கவில்லை? அது மட்டுமன்றி தன் மனைவிக்கு அறிவித்ததை ஏற்றுக் கொண்டாலும் ரவி கருணாநாயக்கவுக்கு அறிவிக்க வேண்டிய தேவை இல்லையே? அவர்கள் இருவருக்குள்ளும் அந்தளவுக்கு நட்பு இருக்கவுமில்லை. காரணம் ரவி அமைச்சராக இருந்த காலத்தில் நடாத்திய பல ஊழல்களை லசந்த அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தார். அப்படியிருக்க ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பு எடுத்து தன்னை யாரோ பின் தொடர்வதாக கூற வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

    ஏனைய நாட்களில் அவருடன் ஒன்றாகவே அலுவலகத்துக்குச் செல்லும் சொனாலி அன்று மட்டும் ஏன் அவருடன் கூடச் செல்லவில்லை? அதுவுமன்றி அன்றைக்கு சொல்லி வைத்திருந்தாற் போல இது நடக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படியான சில மர்மங்கள் லசந்த கொலையில் நீடிக்கின்றன. அவற்றை அவிழ்த்து விட்டால் கொலை பற்றிய சகல தகவல்களும் தானாகவே வெளி வந்து விடும். அதுவரை பொறுத்திருக்க நீங்கள் தயாரா?

    //தமிழ் மக்களுக்கெதிரான அரச வன்முறைகளை பட்டவர்த்தனமாக அங்கீகரித்தும் நியாயப்படுத்தியும் பின்னோட்டம் வைத்ததன் மூலமும்//

    அரச படையின் அப்படியான அட்டூழியங்களை ஆதாரத்துடன் முன் வையுங்கள். நானும் உங்களுடன் சேர்ந்து கண்டிக்கிறேன். வெறும் ஊகங்களை மட்டும் வைத்து எந்தத் தீர்ப்பும் எழுதப்படுவதில்லை. அது நியாயமான நீதியான தீர்ப்பாக இருக்கப் போவதுமில்லை.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    வணக்கம் நண்பர் அஸ்ரப் அலி
    உங்களுடைய சில கருத்தக்கள் தொடர்பாக என்னுடைய கருத்தை முன்வைக்கலாம் என கருதி இதை எழுதகிறேன். முதலில் உங்களுடைய தொடர்ச்சியான விவாத உரையாடலுக்கு நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

    //தேசம் நெற்றில் கருத்துப் பரிமாற வருகின்றவர்கள் விடயத்தை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் என்ற கருத்தையே இதுவரை காலமும் நான் கொண்டிருந்தேன். இப்போதைய நிலையில் அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்.//
    ஒருவருடைய கருத்தை நாம் எப்படி விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறோம் என்பது எமது அரசியல் நிலைப்பாட்டுடனும் சம்பந்தப்பட்டது.

    //ஆதாரத்துடன் சமர்ப்பித்திருந்தால் அனைத்து நாடுகளினதும் ஆதரவை பெற்றிருக்கலாமே? அதற்குப் பதிலாக ஆதாரமற்ற எந்த விடயத்துக்காகவும் யாரும் முன்வரமாட்டார்கள் தானே?
    //இலங்கை அரசினால் கொல்லப்பட்டவர்களிலும் பார்க்க புலிகளால் கொல்லப்பட்டவர்கள் மிக மிகச் சிலரே.//
    உங்களால் பட்டியலிட முடியுமா? இது எனது சவால் என்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள்.//

    யுத்த பிராந்தியத்தினுள் ஊடகவியலாளர்களோ சர்வதேச மனிதாபிமான அமைப்புகளோ அனுமதிக்கப்படாத நிலையில் ஆதாரத்தைக் கேட்பதும் பட்டியலைக் கெட்பதும் பொருத்தமற்றது நண்பர் அஸ்ரப் அலி அவர்களே.

    //புலிகள் எப்போதும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மற்றும் தகவல்கள் மூலமாகவே தமது இயக்கத்தைக் கட்டியெழுப்ப முயன்றுள்ளார்கள். முயற்சி செய்துள்ளார்கள். மற்றபடி யதார்த்தத்தில் புலிகள் என்பது வெறும் காற்றடைத்த பலூன் என்பதுதான் எனது கருத்து. ஒரு இடத்தில் ஓட்டை போட்டுவிட்டால் அதன் மொத்த உருவமும் சிதைந்து போய் விடும். அது தான் புலிகளுக்கு இன்று நடந்துள்ளது.//

    முழுமையாக உடன்படுகிறேன் அஸ்ரப் அலி. ஆனால் புலிகளுடைய பலூனைத் தரையிறக்கி அதில் உயிரைக் காப்பாற்ற தொங்கிக்கொண்டுள்ள மக்களை விடுவிக்க பல வழிகள் இருந்த போதும் அந்த மக்களைப் பற்றி அக்கறையில்லாமல் பலூணை ஓட்டையாக்குகிறேன் என்று பலூனுக்கு செல் அடிப்பதைத்தான் நான் இனவாதம் என்கிறேன். அரச பயங்கரவாதம் என்கிறேன். புலிகளைப் பயங்கரவாதிகள் என உலகமே சொல்கிறது. அதனால் அவர்களிடம் அரசாங்கம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களையும் ஆளும் அரசாங்கம் தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

    மேலும் புலிகள் பொய்யான மிகைப்படுத்திய செய்திகளைப் பரப்புகிறார்கள் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் வன்னி யுத்தத்தில் மக்கள் மரணப் பொறிக்குள் தள்ளபட்டு உள்ளனர். அவர்கள் சொல்லொனாத் தயரங்களை அனுபவிக்கின்றனர். அரச படைகளுக்கும் புலிகளுக்கும் அஞ்சுகின்றனர்.

    பாதுகாப்பு வலயங்களை முற்றிலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் கையளிப்பதில் இலங்கை அரசுக்கு என்ன பிரச்சினை. அதனை ஏன் இதுவரை மேற்கொள்ளவில்லை.

    //கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது கல்முனையில் சுனாமி பேபி என்று பெயர்பெற்ற அபிலாஷ் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். தமது குழந்தை இல்லை என்பது நிரூபணமாகத் தெரிந்த நிலையிலும் எத்தனையோ பேர் அந்தக் குழந்தையை உரித்தாக்கிக் கொள்ள மல்லுக் கட்டவில்லையா? அதன் நோக்கம் சுனாமியின் பெயரால் அந்தக் குழந்தையை வைத்து பொருளாதார வளம் தேடும் நோக்கமின்றி வேறென்ன?//
    நண்பர் அஸ்ரப் அலி இதுவொரு தவறான கருத்து என்பதே எனது கருத்து. சுனாமி பேபி பற்றி நான் அறிந்திருந்தேன். எழுதியும் இருந்தேன். குட் மோர்னிங் அமெரிக்கா – ஏபிசி தொலைக்காட்சியில் அக்குழந்தை தோன்றியது.

    சுனாமியில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை இழந்தனர். இழந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது குழந்தை தப்பி இருக்கக் கூடாதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்கிறது. அவர்களது அறிவுக்கு அது தங்களுடைய குழந்தை இல்லை என்று தெரிந்தாலும் அவர்களுடைய மனம் கேட்கவில்லை. இது உளவியல் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவு. இதனை பொருளாதார நோக்கத்திற்கு என கொச்சைப்படுத்துவது மிகத் தவறு. திட்டமிட்ட ஓரிருவர் அவ்வாறு முயற்சித்து இருக்கலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக அந்தப் பிரச்சினையை அக்கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது.

    தொடர்ந்தும் விவாதியுங்கள். தொடர்ந்தும் உங்கள் பங்குபற்றுதலை எதிர்பார்க்கிறோம்.

    த ஜெயபாலன்.

    Reply
  • ashroffali
    ashroffali

    மதிப்பிற்குரிய ஜெயபாலன் அவர்களுக்கு

    உங்கள் பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.

    அரசாங்கம் எப்போதும் பொதுமக்களை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. ஆனாலும் புலிகள் பொதுமக்கள் மத்தியில் நின்று கொண்டு தாக்குதல் நடாத்தும் போது எதிர்த்தாக்குதல் நடத்தாமலிருக்கவும் முடியாது. அப்படி எதிர்த்தாக்குதல் நடத்தாமலிருந்தால் இராணுவத்தினர் பெருமளவில் கொல்லப்பட்டு விடுவார்கள்.தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது.ஆனாலும் இராணுவத்தினர் பொறுப்புடன் நடந்து கொள்வதால் தான் வன்னியில் இன்றளவும் மக்கள் உயிர் பிழைத்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    பாதுகாப்பு வலயங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் மேற்பார்வைக்கு விடுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்துக் கொண்டுதான் இருக்கின்றது.ஆனால் புலிகள் அந்த இடங்களை இலக்கு வைத்து தாக்க மாட்டோம் என்று உத்தரவாதமளித்தால் தவிர அவை அவ்வாறான பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டுகின்றன. அதுதான் உண்மை.

    Reply