கோல்டன் கீ கடனட்டை மோசடி வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரபல வர்த்தக பிரமுகரான லலித் கொத்தலாவல வெளியில் சொல்லமுடியாத நோயொன்றின் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதை சிறைச்சாலை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.மேற்குறித்த மோசடி வழக்கின் கீழ் லலித் கொத்தலாவலவை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு கல்கிஸை பிரதான நீதிவான் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்ததன் பேரில் அவர் அன்றைய தினம் மாலை மகஸீன் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் அவருக்கு நோயொன்று ஏற்பட்டிருப்பது நேற்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து 70 வயதான லலித்கொத்தாவெல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோல்டன் கீ மோசடி வழக்கின் கீழ் லலித் கொத்தலாவெலவுடன் மேலும் சிலரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.