இலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமானங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை இது பொய்யான தகவல்” என அவர் தெரிவித்தார்
santhanam
A Sri Lanka Air Force (SLAF) bomber was shot down in Mullaiththeevu Friday at 11:25 a.m., sources in Ira’naippaalai told TamilNet. The SLAF bomber was attacked while it was targeting a locality for bombardment. Several civilians have witnessed that the bomber exploded in the air and went down in Mullaiththeevu. The LTTE is yet to release details of the attack
hg
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடன் முல்லைத்தீவில் உச்சக்கட்டப் போரை நடந்து வருகிறது. இதில் கேபிர் என்னும் போர் விமானத்தை இலங்கை ராணுவம் குண்டு வீசுவதற்கு பயன்படுத்தி வந்தது. இந்த ரக விமானங்கள்தான் கடந்த ஓராண்டாக, கிளிநொச்சி, முல்லைத் தீவுப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது.
இந்த கேபிர் ரக போர் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (27.02.09) மதியம் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வரும் புதுக்குடியிருப்பு பதியில் குண்டு வீசுவதற்காக புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் இலக்கை குறிவைத்து குண்டுகளை வீசித் தயாரானபோது விமானத்தை நோக்கி விடுதலைப்புலிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அந்த ஏவுகணை கேபிர் போர் விமானத்தை தாக்கியது. இதனால் அந்த போர் விமானம் ஆகாயத்திலேயே வெடித்துச் சிதறி விழுந்தது என கூறப்பட்டுள்ளது
அருட்சல்வன் வி
இது விடயமாக இந்திய இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி வருமாறு
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானத்தை விடுதலைப் புலிகள் இன்று சுட்டு வீழ்த்தினர். முல்லைத் தீவி்ல் இன்று காலை 11.25 மணிக்கு குண்டு வீச வந்த இந்த விமானத்தை புலிகள் SAM ((Surface to air missile) ரக ஏவுகணையைக் கொண்டு சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது.
இரணைப்பாளை என்ற இடத்தில் வைத்து இந்த விமானத்தை புலிகள் தாக்கினர். இதில் அந்த விமானம் வானிலேயே வெடித்துச் சிதறியது. புலிகளிடம் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் ஒலியின வேகத்தில் செல்லும் கிபிர் ரக விமானங்களை வீழ்த்த முடியாது என்று கருதப்பட்டு வந்த நிலையில் இந்த விமானத்தை வீழ்த்தியுள்ளனர் புலிகள்.
புதுக்குடியிருப்புக்கு மேற்கே புலிகள்-ராணுவம் இடையே கடும் மோதல் நடந்து வரும் நிலையில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறிய அதன் பாகங்கள் பல கி.மீ. தூரத்துக்கு சிதறிக் கிடக்கின்றன. இலங்கை விமானப் படையிடம் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் ரக விமானங்கள் மற்றும் மிக்-27 ரக விமானங்களும் உள்ளன. இன்று வீழ்த்தப்பட்ட விமானம் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
Kullan
அரசாங்கம் இதை மறைப்பதால் இதில் எதோஒரு முக்கிய விமானம் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ் நெட்டும் கண்டது மாதிரியும் எழுதலாம் தான். பொறுத்திருந்து பார்ப்போம்
கந்தப்பு
அரசாங்கம் இன்று இந்த விமானம் விழுந்த செய்தியை மூடி மறைக்கலாம். பொட்டம்மான் இனித் தொடர்ந்து சுட்டு விழுத்தப் போகும் நெருப்பு நடவடிக்கைகளை எந்தப் பஞ்சைப்போட்டு மூடி மறைக்கப் போகிறார்கள் என்றுதான் பார்ப்போமே.
இப்படிக்கு உண்மையுள் கந்தப்பு பெருமாள்.
Kusumbo
விழுந்தும் மீசையிலை மண்படேல்லை எண்டெல்லே சொல்லுறாங்கள். உதை வைத்து தானே இந்தனை விளையாட்டும் நடந்தது. உதைப் போடத்தானே எங்கடை பொடியள் திரிஞ்சவங்கள் விடுவாங்களோ. பொடியள் கெதியா காசுக்கு வரப்போறாங்கள். கல்லாப்பெட்டியைத் திறந்து வையுங்கோ.
palli
நல்ல செய்திதான். ஆனால் இதை கிளினொச்சியிலோ அல்லது அக்கிராயனிலோ செய்திருந்தால்?.
எனெக்கென்னமோ இது தமிழ் சமூகத்திடம் ஒரு குணம் இருக்கு. உயிரோடு இருந்து கஸ்ரபடும் போது (பெற்றோர்; உறவு; நட்ப்பு; சமூகம்) உதவ முன்வராத பலர் இறந்தபின் பெரிய மாலையுடனும் கலர் நோட்டிசுடனும் மலரும் நினைவுகள் சொல்லுவார்கள். அதேபோல்தான் இதுவும் ஒரு சில மாதத்துக்கு முன் இதை செய்திருந்தால் (இப்போது செய்திருந்தால்) அனியாயத்துக்கு இப்படி இழப்புகள் வரவாய்ப்பில்லையே. சரி விடுங்கப்பா இப்போதாவது விட்டாங்களே.
பார்த்திபன்
கல்மடுக்குளத்திலிருந்து வதந்திகளுக்கு பஞ்சமில்லை. இப்ப புலிகள் சுட்டு விழுத்தியிருந்தால் தமிழ்நெற் உடனேயே அதைத் தெளிவாகப் போட்டிருக்கலாம். ஆனால் கிபீர் விமானமொன்று தொடர்பை இழந்ததாக அரசு தெரிவித்தாக முதலில் பின் கிபீர் வானில் வெடித்துச் சிதறியதை சிலர் பார்த்ததாகவும் தான் எழுதுகின்றது. தமிழ்நெற்றிக்கே என்ன நடந்தது என்று சந்தேகம் இருக்கும் போது அந்த மாதிரி சிலர் புகுந்து விளையாடுகினம். அரசும் சிலவேளை தன் இழப்பை மறைக்க பொய் சொல்லலாம். எதற்கும் பொறுத்தது தான் பொறுத்தோம் என்னும் சிலநாளையிலே எல்லாம் வெளிக்கத் தானே போகுது. அப்போ தெரியும் யார் பொய் சொல்லுகினம் என்ற உண்மை. அதுவரைக்கும் உங்கடை கல்லாப்பெட்டிகள் கவனம்.