கோல்டன் கீ நிதி மோசடி தொடர்பில் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதுடன் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவையும் கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் கோல்டன் கீ வாடிக்கையாளர்களின் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை எதிர்வரும் 10 நாட்களுக்குள் செலுத்துமாறும் இறுதி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. செலிங்கோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலக்கு கோல்டன் கீ கடன் நிறுவன பணிப்பாளர் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு, உரிமையாளர் என்ற அடிப்படையில் லலித் கொத்தலாவலயின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.