சர்வகட்சிக்குழு இவ்வாரம் முக்கிய தீர்மானம்; ஐ.தே.கவுடன் பேசவும் முடிவு

Minister Tissa Vitharanaஇனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இவ்வாரம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இவ்வாரத்துடன் குழுவின் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் விதாரண, அதன் பின்னர் ஐ. தே. க. வின் கருத்தை அறிய, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாகக் கூறினார்.  சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெறவில்லை. எனவே, இந்த வார இறுதிக்குள் கூடி கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த எதிர் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சு நடத்தப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச உள்ளதாக அமைச்சர் கூறினார். அதனைத் தொடர்ந்து தீர்வு யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • rajai
    rajai

    since long time you telling this, when you going to finish this, i think after all tamils died

    Reply
  • பகீ
    பகீ

    பெயர் என்னவோ சர்வகட்சி குழு…தாங்கள் டிசைட் பண்ணியிட்டினமாம். ஆனால் இனித்தானாம் யூ.என்.பி யோட கதைக்க போயினம்மாம்? அப்ப டிசிசன் எடுக்கேக்க தன்னிச்சையாத்தான் எடுக்கினம் எண்டு சொல்லுங்கோ!!!

    Reply